அக்பர் பதவி தப்புமா: இன்று மோடியை சந்திக்கிறார்

Added : அக் 14, 2018 | கருத்துகள் (13)
Advertisement
அக்பர், பதவி, தப்புமா, இன்று, மோடி, சந்திப்பு

புதுடில்லி: பாலியல் புகாருக்கு ஆளான மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீதான முடிவு இன்று வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல பத்திரிகையாளர் எம்.ஜே, அக்பர், மத்திய வெளியுறவு இணை அமைச்சராக உள்ளார். இவர் மீது பல்வேறு பெண் பத்திரிகையாளர்கள் # மீடூ ஹேஸ்டேக் மூலம் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அக்பர் வெளிநாடு சென்றுவிட்டு இன்று நாடு திரும்புகிறார். அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், வெளிநாடு சென்றுள்ள அக்பர் இன்று நாடு திரும்பியவுடன் பிரதமர் மோடியை சந்தித்து பேசி விளக்கம் அளிக்க திட்டமிட்டுள்ளார். சந்திப்புக்கு பின்னர் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.


அமித்ஷா கருத்துபா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா கூறியது அக்பர் மீதான குற்றச்சாட்டு அனைத்தையும் அப்படியே நம்பிடவிட முடியாது இந்த விஷயத்தில் நான் கருத்துக் கூறுவது கடினம். ஏனென்றால், இணையதளங்களில் நிறைய விஷயங்கள் வரும் அதற்கெல்லாம் நான் எதிர்வினையாற்றிக்கொண்டிருக்க முடியாது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
14-அக்-201811:18:08 IST Report Abuse
mohan இந்த விஷயத்தில் எல்லாம் தலை கீழ்.... சீனா தான் சிறந்தது... அடிப்படை கல்வியை, மாற்ற வேண்டும். காலம் மாறிவிட்டது.. தொழில் நுட்ப காலம். ஒரு 70 வருட முன் வரை, ஏன் இந்த அளவுக்கு வன்முறை இல்லை. அத்து மீறல் இல்லை. என்றைக்கு திரை காட்சிகள் வந்ததோ, அன்றைக்கே, கல்வி முறையை மாற்றி இருக்க வேண்டும். சமுதாய கட்டமைப்பை மாற்றி இருக்க வேண்டும். அதுவும் திரை காட்சிகளில் வரும் பெண்ணை பற்றி ஆண் பார்ப்பது, பெண்ணின் ஆடை சற்று விலகினால் கூட ஆண், எதோ பார்க்காதே பார்த்தது போன்று இசையுடன் காண்பிக்கின்றனர். நடிகர் திலகம் நடித்த பாக பிரிவினை என்கின்ற படத்திற்கும், இப்பொழுது வரும் படங்களுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது.. அதுவும், 1996 களுக்கு பின் இனைய தளம் எவ்வளவு வேகமாக முன்னேறியது அவ்வளவுக்கு, இந்தியா மக்களின் மன உளவியல், பெண்களை பற்றிய பார்வை, இதில் முன்னேற்றம் இல்லை. 70 ஆண்டுகளுக்கு முன் பலாத்தகாரம் என்பது ஒரு கேள்விப்படாத செயல். அதுவம் எந்த வயது காரர்களும், ஒரு ஆண் ஒரு பெண்ணை கட்டி பிடிக்கும் காட்சிகள், காணாத நாடு. நாடகங்கள் நடந்தது என்றால், ஆணும் பெண்ணும் தூர நின்று வசனம் பேசுவார்..தரம் இருந்தது...இன்று இந்த நிலை மாறி அரை குறை ஆடை களுடன், கட்டி பிடிக்கும் காட்சிகள், அதுவும், திரைகளின் முறையற்ற கள்ள காட்சிகள், இதை நியாயப்படுத்தும், மக்கள்...எப்படி....பின்னர் நாடு குட்டி சுவர் ஆகாமல் என்ன வாகும்...நீங்கள் திரைக்காட்சிகளில் ஆண் பெண் கட்டி பிடிக்கும் காட்சிகள் வரும் முன்னரே, கல்வியில், ஆரம்ப வகுப்பில் இருந்து ஆண் பெண் உடலமைப்பு பற்றி விலாவரியாக சொல்லி கொண்டு வந்து இருந்தால், மன உளவியல் வேறு மாதிரி இருக்கும். கூடவே மன நலம், உடல் நலம் பற்றிய பாடமும் அறிவும் இருக்க வேண்டும்... இதை யார் செய்வது... கள்ள காட்சிகளை நியாய படுத்தும் அளவிற்கு நாடு சென்று விட்ட தென்றால், இதன் தரம். என்ன... ஒரு பெண்ணிற்கோ ஆணிற்கோ, எதோ ஒரு சூயல்நிலையில், வாழ பிடிக்க வில்லை என்றால், விவாகரத்து செய்து விட்டு, அடுத்த மறு மனம் செய்து கொள்ளுங்கள். ஒரு நியாயமான சமுதாய கட்டமைப்பை கொண்டுவாருங்கள். சமுதாயத்தில் குற்ற செயல்களை அதிக படுத்தும், செயல்களை நியாய படுத்த வேண்டாம். பின் ஏன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள், அப்பா அம்மா என்கின்ற குடும்ப உறவுகளை வளர்த்தனர், இன்றைக்கும் மேற்கு நாடுக்ளில் பல இளைஞ்சர்களுக்கு அப்பா அம்மா யார் என்று தெரியாது. அந்த நிலை இங்கே கொண்டு வர போகிறீர்களா... இஇப்படியே சென்றால் ஆப்ரிக்க நாடுகளில் உள்ள ருவாண்டா ப்ரூண்டியில் என்ன நடந்ததோ, அதே மாதிரி இங்கே நடக்க வாய்ப்பிருக்கிறது...
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
14-அக்-201810:24:37 IST Report Abuse
Indhuindian P M should not meet him unless he submits his resignation and apologise for the delay in submitting the resignation. BJP should disown him after all he is not a hardcore BJP or erstwhile Jansangh person. He is a refugee from Congress and crass opportunist. Look at the charges not by one or two but thirteen of his erstwhile colleagues. How can he go Scot free. If guilty he should be publicly ashamed. If not drag all these women to the court and punish them. But the fact remains is that he has no reason to be in power and authority.
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
14-அக்-201810:09:00 IST Report Abuse
GB.ரிஸ்வான் இப்படியே போனால் யார்க்கும்...யாரும் உதவிகள் கூட செய்ய மாட்டார்கள்... எதையோ திசை திருப்ப இந்த பாலியல் மீ டூ பயன்படுகிறார்கள்... பிரபலமான பெண்கள் பிரபலமானவர்களின் மீது குற்றம் சாட்டுவது செய்தி.... தினந்தோறும்.... வருகிறது சாதாரணவர்களின் நிலை? எல்லோரும் கெட்டவர்கள் அல்லவே... எத்தனையோ சாதாரண நடுத்தர சகோதரிகள் தாய்மார்கள் இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் கூட உதவிக்கு யாரும் வர மாட்டார்கள்,,, இதுபோல மீ டூஸ் அதிகமானால்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X