தமிழ்நாடு

எதிர்பார்ப்பு! மாவட்ட அளவில் பாதியாக குறைந்த தென்மேற்கு :உடுமலையை வளமாக்குமா வடகிழக்கு பருவமழை?

Added : அக் 14, 2018
Advertisement

உடுமலை:இந்தாண்டு தென் மேற்கு பருவ மழை, மாவட்ட அளவில் திருப்தியாக பெய்திருந்தாலும், உடுமலை பகுதியில் பாதியளவு மட்டுமே பெய்துள்ளது. இதனால், வட கிழக்கு பருவ மழையை விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தின், சராசரி மழை அளவு, 618 மி.மீ., ஆகும். ஜன., பிப்., மாத குளிர் கால மழை சராசரி, 14 மி.மீ., ஆகும். இந்தாண்டு இரண்டு நாள் மழை, 17.26 மி.மீ., பதிவானது.மார்ச், ஏப்.,மே மாத, கோடை கால மழை சராசரி, 135.10 மி.மீ., ஆகும்.
நடப்பு ஆண்டு, 18 நாள் மழை பெய்தது; மொத்தம், 257.77 மி.மீ., மழை பதிவானது. ஜூன் முதல் செப்., வரையிலான, தென்மேற்கு பருவ காலத்தில், மாவட்டத்தின் சராசரி மழை பொழிவு, 154.80 மி.மீ., ஆகும். இந்தாண்டு, 390.19 மி.மீ., மழை பெய்தது. ஆனால், உடுமலையில், 197 மி.மீ.,மழை மட்டுமே பெய்துள்ளது.
கடந்த, செப்., மாதத்தில் மாவட்ட சராசரியாக, 115.16 மி.மீ., மழை பதிவானது. உடுமலைபகுதியில் மழை குறைந்து, 66.4 மி.மீ.,மட்டுமே பெய்தது. இருப்பினும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, அமராவதி, பி.ஏ.பி.,அணைகள் நிரம்பின.வழக்கமாக, தென் மேற்கு பருவ மழையை விட, வடகிழக்கு பருவ மழையே, அதிகம் கை கொடுத்து வருகிறது. மாவட்டத்தின், ஆண்டு சராசரி மழைப்பொழிவில், 314.30 மி.மீ., மழை, வட கிழக்கு பருவ மழை காலத்தில் கிடைக்கும்.
மாவட்ட அளவில் ஒப்பிடும் போது, உடுமலை பகுதியில், தென் மேற்கு பருவ மழை குறைந்திருந்தாலும், வட கிழக்கு பருவ மழையை விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.இந்தாண்டு, வட கிழக்கு பருவ மழை துவங்காத நிலையிலும், இம்மாத துவக்கம் முதலே, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஓரளவு மழை பெய்து வருகிறது.
ஆரம்பமே அமர்க்களம்
நடப்பு மாதத்தில், கடந்த, 13 நாட்களில், ஏழு நாட்கள் மழை பெய்துள்ளது. உடுமலையில், 71.8 மி.மீ.,மழையும், பெதப்பம்பட்டியில், 82 மி.மீ., மற்றும் மடத்துக்குளம் வட்டாரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. நேற்று, பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், மதிய நேரத்தில், ஒரு மணி நேரம் வரை கன மழை பெய்தது.திடீர் காற்று காரணமாக மழை திசை மாறியது. இம்மழை தொடர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X