பொது செய்தி

தமிழ்நாடு

குடிமங்கலத்தில் கொசு ஒழிப்பு தீவிரம்

Added : அக் 14, 2018
Advertisement

உடுமலை:குடிமங்கலம் வட்டாரத்தில், வடகிழக்கு பருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுகாதாரத்துறை சார்பில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும், பருவமழைக்காலங்களில் கொசு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால், நோய்தொற்றும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இதனால், சுகாதாரத்துறை சார்பில் அனைத்து கிராமங்களிலும் பருவமழைக்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.அதன்படி, குடிமங்கலம் வட்டாரத்தில், 23 ஊராட்சிகளிலும், கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். மேலும், பொதுமருத்துவ முகாம்களில் டெங்கு கொசுக்கள் ஒழிப்பு முறைகள், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ளதால் ஊரக வளர்ச்சித்துறையினரிடம் இணைந்து கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படவுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். வட்டார சுகாதார அலுவலர், யோகானந்தம் கூறியதாவது: வட்டாரத்திலுள்ள, 23 ஊராட்சிகளிலும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மாதம் தோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர் கண்காணிப்புகளால் தான் வட்டாரத்தில் டெங்கு நோய் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமங்களில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.தண்ணீர் தொட்டிகளில் 'அபேட்' மருந்து தெளித்தல், கிராமங்களை சுகாதாரப்படுத்துதல் என, ஊரக வளர்ச்சித்துறையினருடன் இணைந்து மேற்கொண்டு வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X