பொது செய்தி

தமிழ்நாடு

திறந்தவெளியில் குப்பை கொட்டினால் அபராதம்!ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி எச்சரிக்கை

Added : அக் 14, 2018
Advertisement

பொள்ளாச்சி:'பொள்ளாச்சி நகராட்சி குப்பையில்லாத நகரமாக மாற்ற முயற்சி எடுக்கப்படுகிறது. அதற்கு அனைத்து தரப்பு ஒத்துழைப்பு அவசியமாகும்,' என, நகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தினர்.பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது மற்றும் அதற்கான மாற்று பொருட்களை பயன்படுத்துவது குறித்தும், திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
நகராட்சி கமிஷனர் கண்ணன் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி நகராட்சி, குப்பை இல்லாத நகரமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வீடு, வீடாக சென்று மக்கும், மக்காத குப்பை தரம் பிரித்து வாங்கப்படுகிறது. அந்தந்த வார்டுகளில், மக்கும் குப்பையில் உரம் தயாரிக்கப்படுகிறது. கடைதாரர்களும் குப்பையை, திறந்தவெளியில் கொட்டக்கூடாது. மக்கும், மக்காத குப்பைத்தொட்டிகள் வைத்து குப்பையை பிரித்து வைத்து, நகராட்சி வாகனம் வரும் போது ஒப்படைக்க வேண்டும்.
திறந்தவெளியில் குப்பை வீசிய, 50 கடைகளுக்கு, தலா, 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குப்பையை திறந்தவெளியில் கொட்டினால், நடவடிக்கை எடுக்கப்படும். சாக்கடை கால்வாய்களிலும் வீசக்கூடாது. சுகாதார பணியாளர்கள் வசம் மட்டும் ஒப்படைக்க வேண்டும்.குப்பைக்கிடங்கு பகுதியில், காய்கறி தோட்டம் திட்டம் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மண்புழு உரம் தயாரித்து விற்பனைக்கு தயாராக உள்ளது. குப்பையை ஒழித்து, சுகாதாரமான நகரமாக மாற்ற மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
தீபாவளி பண்டிகைக்கு பின், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது. தொடர் ஆய்வு செய்து பறிமுதல் செய்யப்படும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X