பொது செய்தி

தமிழ்நாடு

'ரோபோ' வடிவமைப்பு நிகழ்ச்சி

Added : அக் 14, 2018
Advertisement

காட்பாடி: வேலூர் வி.ஐ.டி., பல்கலையில், கிராவிடாஸ் அறிவு சார் தொழில் நுட்பம் மற்றும் மேலாண்மை திருவிழா நடந்து வருகிறது. நேற்று, ரோபோவார்ஸ் என்ற இயந்திர மனிதர்கள் வடிவமைப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்தியாவுக்கான அர்ஜெண்டைனா நாட்டின் தூதர் டேனியல் சுபரு துவக்கி வைத்தார். இதில், 26 உயர் கல்வி நிறுவனங்களின் மாணவ, மாணவியர் உருவாக்கிய, ரோபோக்களின் வடிவமைப்பினை செயல் விளக்கத்துடன் விளக்கினர். தொடர்ந்து, ரேஸ்கார் வடிவமைப்பு போட்டி நடந்தது. இதில், அமெரிக்க இயந்திரவியல் பொறியாளர் சங்கம், தேசிய தொழில் நுட்ப மையங்கள், அண்ணா பல்கலை, எஸ்.ஆர்.எம்., வி.ஐ.டி., பல்கலை உட்பட, 15 குழுவினர் தாங்கள் வடிவமைத்த ரேஸ் கார்களை இயக்கி காட்டினர். பின், நீர் ஆதாரங்கள் குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதில், ஊட்டியில் உள்ள, இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு ஆராய்ச்சி மைய முதுநிலை விஞ்ஞானி ராஜா, வி.ஐ.டி., துணை வேந்தர் ஆனந் சாமுவேல், இணை துணைவேந்தர் நாராயணன், கிராவிடாஸ் ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரநாத் ராம்குமார் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X