சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தம்பதியை தவிக்கவிட்டு டிரைவர் மாயம்

Added : அக் 14, 2018
Advertisement

சேலம்: கோவை தம்பதியை தவிக்கவிட்டு, காருடன் டிரைவர் மாயமானார். காரை மீட்ட போலீசார், டிரைவர் குறித்து விசாரிக்கின்றனர்.
கோவை அருகே, கிராம்பாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 54. இவரது மனைவி அமுதா, 45. இவர்களது மகள் அருணாதேவி, 26. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த, மென்பொறியாளர் ராமகிருஷ்ணன், 30, என்பவருக்கும், கடந்த செப்டம்பரில் திருமணமானது. ராமகிருஷ்ணன், அமெரிக்காவில் பணிபுரியும் நிலையில், அருணாதேவிக்கு, தற்போது, 'விசா' கிடைத்துள்ளது. இன்று, சென்னையிலிருந்து விமானம் மூலம், அருணாதேவியை அனுப்ப, நேற்று, கோவையிலிருந்து, 'இன்னோவா' காரில், கிருஷ்ணன், அமுதா, அருணாதேவி, உறவினர் நாகராஜ், 40, ஆகியோர் புறப்பட்டனர். கோவையைச் சேர்ந்த டிரைவர் சந்தானகுமார், 45, காரை ஓட்டினார். சேலம் மாவட்டம், அரியானூர் ஆனந்தபவன் ஓட்டல் முன், காரை நிறுத்திவிட்டு, கிருஷ்ணன் உள்பட குடும்பத்தினர் சாப்பிட சென்றனர். டிரைவர், டீக்குடிப்பதாக கூறி, வெளியே நின்று கொண்டார். அவர்கள், சாப்பிட்டு வந்தபோது காரை காணவில்லை. அதில், 10 பவுன் தங்க நகைகள், மொபைல் போன், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. டிரைவரின், மொபைலுக்கு தொடர்பு கொண்டபோது, அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த கிருஷ்ணன், கொண்டலாம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் மூலம், உடனடியாக மாநகர, மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டு, அனைத்து சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. பின், காரிலிருந்த அருணாதேவியின் மொபைல், கார் ஜி.பி.எஸ்., கருவி மூலம், போலீசார் அடையாளம் கண்டனர். அப்போது, சேலம், ரயில்வே ஜங்ஷன் வாகன நிறுத்துமிடத்தில் கார் இருப்பது தெரிந்தது. கோவையிலிருந்து மாற்று சாவி வரவழைக்கப்பட்டு, காரை திறந்து சோதனை செய்தபோது, பொருட்கள் அப்படியே இருந்தன. பின், மாற்று டிரைவர் மூலம், கிருஷ்ணன் குடும்பத்தினர், சென்னை புறப்பட்டனர். மாயமான டிரைவர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X