பொது செய்தி

தமிழ்நாடு

சமையலர் பணியை தடுத்த 3 பேர் கைது

Added : அக் 14, 2018
Advertisement

காடையாம்பட்டி: காடையாம்பட்டி, கே.மோரூர் அருகே, குப்பன்கொட்டாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையலராக ஜோதி, 42, உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த சிலர், அவர் பணி மேற்கொள்வதை தடுத்துள்ளனர். இதைக் கண்டித்து, நேற்று முன்தினம், கே.மோரூரில், வி.சி., கட்சியினர், சாலை மறியலில் ஈடுபட்டனர். ஜோதி அளித்த புகார்படி, தவிளிப்பட்டியைச் சேர்ந்த தேவன், 55, சின்னதம்பி, 55, மகேந்திரன், 38, ஆகியோரை, நேற்று, தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர். குப்பன்கொட்டாய் பள்ளி தலைமையாசிரியர் சேகர், 44, சின்னதம்பி மகன் வெங்கடேஷ், 38, அம்மாசி, 30, ஆகியோர் மீது, அரசு பணி செய்யவிடமால் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட, ஆறு பிரிவுகளில், போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X