பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - சேலம்

Added : அக் 14, 2018
Advertisement

கோவில் வளாகத்தில் குப்பையால் நாற்றம்: மேட்டூர் அணை பூங்கா, காவிரி கரையோரமுள்ள, முனியப்பன் கோவிலுக்கு, சுற்றுப்புற மாவட்டங்களிலிருந்து திரளானோர் வந்து, பொங்கல் வைத்து வேண்டுதல் நிறைவேற்றுவர். அங்கு, தொட்டி இல்லாததால், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கொட்டும் குப்பை, கோவில் வளாகத்தில் பரவலாக சிதறி கிடக்கிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதால், அங்கு வரும் சுற்றுலா பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது. தொட்டி வைத்து, குப்பையை உடனுக்குடன் அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயனில்லாத விழிப்புணர்வு பலகை: சேலம் - உளுந்தூர்பேட்டை நான்கு வழிச்சாலை, ஆத்தூர் அருகே, செல்லியம்பாளையம் புறவழிச்சாலை தொடங்கும் பகுதியில், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அங்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, 'விபத்து பகுதி. மெதுவாக செல்லவும்' என அச்சிடப்பட்ட அறிவிப்பு பலகை, இரு வழிச்சாலை நடுவே வைத்துள்ளனர். அப்பலகை சாய்ந்து விழுந்துள்ளதால் பயனின்றி உள்ளது.

இருளில் சாலை; அச்சத்தில் பெண்கள்: மல்லூரிலிருந்து, வெற்றி நகர் வழியாக, பனங்காடு, பி.மேட்டூர், பிச்சம்பாளையம் உள்ளிட்ட இடங்களுக்கு தார்ச்சாலை செல்கிறது. அதில், தினமும் ஏராளமான இருசக்கர வாகன ஓட்டிகள் செல்கின்றனர். அச்சாலையில், பல இடங்களில், மின் கம்பங்கள் உள்ள நிலையில், விளக்குகள் இல்லை. இரவில், சாலையில் இருள்சூழ்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, வழிப்பறி அச்சத்தில், பெண்கள் பயணம் செய்கின்றனர். தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.

சாலை வளைவில் விபத்து அபாயம்: தலைவாசல், மும்முடி - கோவிந்தம் பாளையம் நெடுஞ்சாலையை, தினமும் ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்துகின்றனர். சித்தேரி பஸ் ஸ்டாப் அருகேவுள்ள வளைவில், கற்கள் அதிகளவில் சிதறியுள்ளன. இதனால், சைக்கிளில் பள்ளி செல்லும் மாணவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள், அடிக்கடி சறுக்கி விழுந்து காயமடைகின்றனர். அங்கு, ஒருபுறம் மட்டும் வேகத்தடை உள்ளதால், எதிரே வருபவர்கள், அதிவேகமாக வருவதால் விபத்து அபாயம் நிலவுகிறது.

குப்பை எரிப்பால் மூச்சுத்திணறல்: சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை, வைகுந்தம் பஸ் ஸ்டாப் அருகே, சாலையோரம் ஆங்காங்கே குப்பை தேங்கியுள்ளது. அதை, சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், அதிகளவில் புகை மூட்டம் ஏற்படுவதால், நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதோடு, மற்ற வாகனங்கள் தெரியாமல், விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து, ஊராட்சி ஊழியர்களிடம் பலமுறை புகாரளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X