வனப்பகுதிக்குள் துப்பாக்கியுடன் திரிந்தவர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வனப்பகுதிக்குள் துப்பாக்கியுடன் திரிந்தவர் கைது

Added : அக் 14, 2018

ஓசூர்: வன விலங்குகளை வேட்டையாட, துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்தவரை, வனத்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வனச் சரகம், உப்ராணி காப்புக்காட்டில் அட்டப்பள்ளம் வனப்பகுதியில் உள்ள காக்கா ஏரி பகுதியில், வனச்சரகர் ரவி தலைமையிலான வனத்துறையினர், நேற்று முன்தினம் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது, ஆறு பேர் கொண்ட கும்பல், வனத்துறையினர் வருவதைக் கண்டு தப்பியோடினர். அவர்களில், ஒருவன் மட்டும், துப்பாக்கியுடன் சிக்கினான். விசாரணையில், சேசுராஜபுரம் பகுதியை சேர்ந்த மதலைமுத்து, 47, என்பதும், வன விலங்குகளை வேட்டையாட வனப்பகுதியில் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது. தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மதலைமுத்து, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஐந்து பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X