சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளத்தில் மொபட் விழுந்ததில் இருவர் பலி

Added : அக் 14, 2018
Share
Advertisement

ஓசூர்: பள்ளத்தில் மொபட் விழுந்த விபத்தில், இருவர் பலியாகினர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பிரசாத் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன், 38, இவரும், சந்தனப்பள்ளி அடுத்த, கம்மந்தூர் பகுதியை சேர்ந்த கெஞ்சப்பா, 55, என்பவரும், நேற்று முன்தினம் இரவு, டி.வி.எஸ்., மொபட்டில், பஞ்சப்பள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தனர். கம்மந்தூர்-மாரசந்திரம் இடையே சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் இருந்த பள்ளத்தில் மொபட்டுடன் விழுந்தனர். இதில், மொபட்டின் அடியில் சிக்கிய இருவரும் இறந்தனர். நேற்று, இருவரது உடலையும் மீட்ட, தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X