பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் பதவி விலக மாட்டார்: அமைச்சர் தங்கமணி உறுதி

Added : அக் 14, 2018
Advertisement

திருச்செங்கோடு: ''முதல்வர் ஒரு போதும் பதவி விலக மாட்டார்,'' என, அமைச்சர் தங்கமணி கூறினார்.
பள்ளிக்கல்வித்துறை, சமூக நலத்துறை இணைந்து, சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா மற்றும் சாரண இயக்க மாநில விருதுகள் வழங்கும் விழாவை, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நடத்தியது. இதில் பங்கேற்ற அமைச்சர் தங்கமணியிடம், 'நெடுஞ்சாலைத்துறை வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால், முதல்வர் பதவி விலக வேண்டும்' என, ஸ்டாலின், ராமதாஸ் போன்றோர் கூறுவது குறித்து, நிருபர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு அவர் கூறியதாவது: இந்த வழக்கில் உயர்நீதி மன்றம் யாரையும் தவறாக நினைக்கவில்லை என கூறியுள்ளது. 2ஜி வழக்கின்போது, கனிமொழி பதவி விலகினாரா, அன்புமணி பதவியில் இருந்தபோது அவர் மீது வழக்கு இருந்தது. அவர் ராஜினாமா செய்தாரா? 'நெடுஞ்சாலைத்துறை வழக்கு குறித்து தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும்' என, சொல்வதெல்லாம் அரசியலுக்காக மட்டும் தான். எப்படியாவது, அ.தி.மு.க., ஆட்சியை கலைக்க வேண்டும் என்று நினைத்து, அது முடியாமல் போனதால் இவ்வாறாக கூறி வருகின்றனர். முதல்வர் ஒரு போதும் பதவி விலக மாட்டார்; அது ஒரு போதும் நடக்காது. இவ்வாறு, அவர் கூறினார்.

4,000 மெகாவாட் மின்சாரம்: நாமக்கல்லில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி, 4,000 மெகாவாட் மின்சார உற்பத்தி திட்டம், வரும், 2021-22ம் ஆண்டில் துவங்கும். ஆண்டுதோறும், மின் தேவை, 1,000 மெகாவாட் அதிகரித்து வரும் நிலையில், இடைப்பட்ட, மூன்று ஆண்டுகளில், ஆண்டுக்கு, 1,000 மெகாவாட் என, 3,000 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ளோம். மதுபானங்களை மொத்தமாக வாங்குபவர்களின் சிரமங்களை போக்க, டாஸ்மாக் கடைகளில் கூடிய விரைவில் 'ஸ்வைப்பிங்' இயந்திரம் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார். மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு, ''ஜனநாயக நாட்டில், யார் வேண்டுமானாலும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளலாம், மக்கள் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்களோ, அவர்கள் ஆட்சியில் இருப்பர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X