சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' : கணவனுக்கு, 'ஸ்கெட்ச்' போட்ட மனைவி கைது

Added : அக் 14, 2018 | கருத்துகள் (45)
Advertisement
 கடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' :  கணவனுக்கு, 'ஸ்கெட்ச்' போட்ட மனைவி கைது

சென்னை: கணவனை சுத்தியல், அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயன்ற மனைவி, கள்ளக் காதலனுடன் கைது செய்யப்பட்டாள்.அருப்புகோட்டையை சேர்ந்தவர் கதிரவன், 30; ஐ.டி., ஊழியர். இவருக்கும், துாத்துக்குடி, விளாத்திக்குளத்தை சேர்ந்த அனிதா, 25, என்பவளுக்கும், கடந்த மாதம், 12ல், திருமணம் நடைபெற்றது.சென்னை, சோழிங்கநல்லுாரில், கதிரவன் பணி புரிந்தார். பல்லாவரம், தர்கா சாலையில் உள்ள வீட்டில், இருவரும் தங்கினர். நேற்று முன்தினம் மதியம், 11:30 மணிக்கு, இருவரும், திருவான்மியூர் கடற்கரைக்கு சென்றனர். ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த, வடக்கு பக்கம் சென்று, இருவரும் கண்ணில் துணி கட்டி, கண்ணாமூச்சி விளையாடினர்.அப்போது, அங்கு வந்த மர்ம நபர், சுத்தியல் மற்றும் அரிவாளால், கதிரவன் தலையில் சரமாரியாக தாக்கினான். அனிதாவை, எதுவும் செய்யவில்லை. ஆனால், அனிதா அணிந்திருந்த, 12 சவரன் நகை மற்றும் இருவரது மொபைல் போன்களையும் பறித்துச் சென்றான். பலத்த காயத்துடன், சுயநினைவு இழந்த கதிரவனை, அங்கிருந்த மீனவர்கள் மீட்டு, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். திருவான்மியூர் போலீசார் விசாரித்தனர். அங்குள்ள, கண்காணிப்பு கேமரா பதிவுகளை சோதனை செய்ததில், கதிரவனை தாக்கியவன், ஓர் ஆட்டோவில் ஏறி செல்வது தெரியவந்தது.கதிரவனின் மொபைல் போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், அனிதாவின் போன் மட்டும், 'ஆனில்' இருந்தது. அந்த போனின் சிக்னல், மதியம், 1:45 மணிக்கு, மதுரை சென்று கொண்டிருந்த, வைகை ரயிலை காட்டியது.இந்நிலையில், போலீசார் விசாரணையில், அனிதா முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினாள். தீவிர விசாரணையில், அனிதாவின் கள்ளக் காதலனான, விளாத்திகுளம், குறுவர்பட்டியை சேர்ந்த, அந்தோணி ஜெகன், 26, என்பவன், கதிரவனை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.திருவான்மியூர் காவல் ஆய்வாளர் கிறிஸ்டின் ஜெயசீல் தலைமையிலான போலீசார், மதுரை சென்று, காமராஜர் பல்கலை கழக விடுதியில் இருந்த அந்தோணி ஜெகனை, நேற்று காலை கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர். அவனிடமிருந்து, 12 சவரன் நகை, சுத்தியல், அரிவாள் போன் றவையும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, இருவரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.சம்பவம் குறித்து, போலீசார் கூறியதாவது:அனிதா, ஓர் ஆண்டுக்கு முன், மதுரை காமராஜர் பல்கலையில், எம்.சி.ஏ., படித்து வந்தாள். அங்கு, பி.ஏ., படித்த, அந்தோணி ஜெகனுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இது, அனிதாவின் பெற்றோருக்கு தெரியவந்ததும், உடனே, கதிரவனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.திருமணத்திற்கு பிறகும், இருவரும், மொபைல் போன் வழியாக காதலை வளர்த்துள்ளனர். தங்களின் காதலுக்கு இடையூறாக இருந்த, கதிரவனை கொலை செய்யவும் திட்டமிட்டனர். ஒரு வாரத்திற்குமுன், கதிரவனும், அனிதாவும் ஏற்காடு சென்றுள்ளனர். அங்கு கதிரவனை கொலை செய்ய திட்டமிட்டனர்; அது நடக்கவில்லை.அதன்பின், திருவான்மியூர் கடற்கரையில் வைத்து, கொலை செய்ய திட்டம் போட்டனர். சம்பவத்தன்று காலையில், அந்தோணி ஜெகன், சென்னை வந்துவிட்டான்.ஜெகனிடம், 'உன்னை கதிரவனுக்கு தெரியாது. நாங்கள் கண்ணாமூச்சு ஆடுவோம்; அப்போது நீ, கதிரவனை கொன்றுவிடு. நகை பறிப்பு கொள்ளையன் தாக்கியதாக, நான் போலீசில் புகார் கொடுக்கிறேன்' என, அனிதா திட்டத்தை விவரித்துள்ளாள்.சம்பவத்தின் போது, ஜெகன், பையில் கொண்டு வந்த சுத்தியலால், முதலில் தாக்கினான். நிலை குலைந்து, கதிரவன் கீழே விழுந்ததும், பையில் இருந்த அரிவாளை, அனிதா எடுத்து கொடுத்தாள். நகையையும், அவளே கழற்றி கொடுத்தாள்.'கணவன், உயிருக்கு போராடும் போது, அனிதா பதற்றப்படவில்லை; அழவும் இல்லை' என, மீனவர்கள் தெரிவித்தனர். தீவிர விசாரணைக்கு பின், கொலை செய்ய முயற்சித்ததை, அனிதா ஒப்புக்கொண்டாள்.இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PERIYASAMYMANIMARANVK MANIMARANVK - keeranur,இந்தியா
19-அக்-201820:24:19 IST Report Abuse
PERIYASAMYMANIMARANVK MANIMARANVK பெண்களிடம் கருத்து கேட்காமல் திருமணம் செய்ய வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
19-அக்-201819:57:18 IST Report Abuse
சத்யமேவ ஜெயதே அடிப்பாவி... இத சொன்னால் நான் கோர்ட்டை அவமதித்தாக ஆகிவிடும். இப்படி தான் வாழனுமா என்று கொஞ்சம் யோசித்தால் ? இத சொன்னா நாம கெட்டவன். காதல் என்பது கண்டதையும் காதலிப்பது அல்ல. முறையாக வரும் காதலே உண்மையான காதல். முறை தவறி வரும் காதல் காதலே அல்ல.. செக்ஸ்.
Rate this:
Share this comment
Cancel
19-அக்-201811:24:09 IST Report Abuse
ஸ்ரீநிவாஸ்  வெங்கட் சுப்ரீம் கோர்ட் கள்ளக்காதல் தவறில்லை என்று தீர்ப்பு அளித்த பிறகு, பத்திரிக்கைகள் , மற்றும் ஊடகங்கள்'கள்ளக்காதல்' என்ற வார்த்தையை பயன்படுத்துவது என்ன நியாயம். அதற்கு பதிலாக இந்த செய்தி கணவனை, கொல்ல முயற்சி, மனைவியின் நண்பர் கைது என்று தான் இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X