கச்சா எண்ணெய் நாடுகளுக்கு பிரதமர்... எச்சரிக்கை! Dinamalar
பதிவு செய்த நாள் :
எச்சரிக்கை!
கச்சா எண்ணெய் நாடுகளுக்கு பிரதமர்...
விலையை குறைக்கும் படி வலியுறுத்தல்
பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்கிறார்

புதுடில்லி : ''வளைகுடா நாடான, சவுதி அரேபியா போன்ற எண்ணெய் உற்பத்தி நாடுகள், எண்ணெய் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தால், உலக பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கச்சா எண்ணெய்,நாடுகளுக்கு,பிரதமர்,நரேந்திர மோடி,மோடி,எச்சரிக்கை!உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், இந்தியாவைச் சேர்ந்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் பங்கேற்ற, வருடாந்திர மாநாடு, டில்லியில் நேற்று நடந்தது. மூன்றாவது ஆண்டாக நடந்த இந்த மாநாட்டில், மத்திய கிழக்கு நாடான, சவுதி அரேபியாவின் எண்ணெய் துறை அமைச்சர், காலித் அல் பாலிஹ் பங்கேற்றார்.


இந்த மாநாட்டில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கச்சா எண்ணெய் விலை, நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில் உச்சத்தில் உள்ளது. இதனால், உலக பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில், பணவீக்க விகிதம் அதிகரிக்க, எண்ணெய் விலை உயர்வு காரணமாக உள்ளது. வளரும் நாடுகளில், பொது பட்ஜெட்டில், எண்ணெய்க்காக, அதிகளவு நிதி ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


நடவடிக்கை :கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியாவில், பெட்ரோல், டீசல்,

சமையல் எரிவாயு விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தடுக்க, சவுதி அரேபியா போன்ற எண்ணெய் உற்பத்தி நாடுகள், கச்சா எண்ணெய் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கடந்தாண்டில் நடந்த மாநாட்டின்போது, உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்கள் கூறிய ஆலோசனைகளை ஏற்று, இந்தியாவில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. அப்படி இருந்தும், எண்ணெய், இயற்கை எரிவாயு துறையில் புதிய முதலீடுகள் வராததற்கு, நிறுவனங்களின் தலைவர்கள் விளக்கம் தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


சவுதி அரேபியா எண்ணெய் துறை அமைச்சர், காலித் அல் பாலிஹ் பேசியதாவது: எரிபொருள் நுகர்வோர் படும் வேதனைகள் குறித்த கருத்துகளை கேட்டறிந்தோம். 'கச்சா எண்ணெயை அதிக விலைக்கு விற்று, பொன் முட்டை இடும் வாத்தை கொல்ல வேண்டாம்' என, இந்திய பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இந்த விஷயத்தில், சவுதி அரேபியா எடுத்த நடவடிக்கையால், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஓரளவு தடுக்கப்பட்டுள்ளது. இல்லாவிடில், எண்ணெய் விலை உயர்வு மேலும் கடுமையாக இருந்திருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


'நிடி ஆயோக்':மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர், தர்மேந்திர பிரதான் பேசுகையில், ''பெட்ரோலிய பொருள் விலை அதிகரிப்பால், இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


இந்த மாநாட்டுக்கு, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பான, 'நிடி ஆயோக்' ஏற்பாடு செய்துள்ளது. இதில், மத்திய நிதிஅமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, நிடி ஆயோக் தலைவர், ராஜீவ் குமார்,

Advertisement

பி.பி., நிறுவன தலைவர், பாப் டூட்லி, டோட்டல் நிறுவன தலைவர், பேட்ரிக் புயேன், ரிலையன்ஸ் நிறுவன இயக்குனர், பி.எம்.எஸ்.பிரசாத், வேதாந்தா நிறுவன தலைவர், அனில் அகர்வால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ஈரான் மீது, அமெரிக்கா விதிக்கும் தடையால் உலக நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மாநாட்டில் விவாதிக்கப்பட்டதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தனியாருக்கு பிரதமர் அழைப்பு :

எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்ற, மாநாட்டுக்கு பின், பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்ற மாநாட்டின்போது, ''உலக பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் முன்னேற்றம் காண, எண்ணெய் உற்பத்தியாளர்களும், நுகர்வு நாடுகளும் கூட்டு சேர்ந்து பணியாற்ற வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ''எண்ணெய் உற்பத்தி நாடுகள், தங்களிடம் உள்ள உபரி நிதியை, வளரும் நாடுகளில் எண்ணெய் துறையில் முதலீடு செய்ய வேண்டும்,'' என்றும், அவர் வலியுறுத்தினார். தனியார் நிறுவனங்கள், இயற்கை எரிவாயு வினியோக துறையில் ஈடுபடவும், பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்கும் மாநாட்டை நடத்திய மத்திய அரசுக்கு, மாநாட்டில் பங்கேற்ற நிபுணர்கள் பாராட்டு தெரிவித்தனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.Advertisement

வாசகர் கருத்து (115)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ashak - jubail,சவுதி அரேபியா
18-அக்-201805:16:05 IST Report Abuse

ashakஈரானிடம் இந்திய ரூபாயை கொடுத்து எண்ணெய் வாங்கலாம், ஆனால் அமெரிக்காவின் அடிமை இந்தியா செய்யாது , வாயாலே வடைசுடுவது தான் வேலை

Rate this:
Manian - Chennai,இந்தியா
18-அக்-201810:01:42 IST Report Abuse

Manianஅப்போ ஏன் வட கொரியாவை பினாமியா வசச்சு கொண்டுவரலாம்- ராகுல் விமரிசனம்...

Rate this:
Milirvan - AKL,நியூ சிலாந்து
17-அக்-201803:50:19 IST Report Abuse

Milirvanஎண்ணெய் விலையை குறைக்கவேண்டும் என்று தானே மோடிஜி கேட்டுள்ளார்? இதில் எச்சரிக்கை எங்கிருக்கிறது? சவுதி அரேபியா எண்ணெய் துறை அமைச்சர், காலித் அல் பாலிஹ் அவர்களின் கலாச்சாரப்படி இந்த பேச்சையே எச்சரிக்கையாக கொண்டு பேசி இருக்கிறார்..

Rate this:
Golden - Nagercoil,இந்தியா
16-அக்-201819:57:46 IST Report Abuse

Goldenபெட்ரோல் டீசல் வரியை 52 சதவீதம் உயர்த்திவிட்டு மத்த நாடுகளை மிரட்டி மக்களை முட்டாள் ஆக்குகிறார் மோடி

Rate this:
Manian - Chennai,இந்தியா
18-அக்-201810:03:02 IST Report Abuse

Manianஎன்னைக்கு டாலரை கொடுத்தாபுரம் நாடே அடக்கு தான் வைக்க வேண்டும். மீண்டும் மொகலர்கள் ஆட்சிதான் வேண்டுமா?...

Rate this:
Manian - Chennai,இந்தியா
18-அக்-201810:04:56 IST Report Abuse

Manianவைத்தியன் கிடடேயும் வாணியன் (அரபு எண்ணெய் நாடுகள்) கிடடேயும் வம்பு செய்ய கூடாது. ஏன் பெட்ரோல் ரேஷனை கொண்டு வரக்கூடாது?...

Rate this:
மேலும் 109 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X