அதிகாரிகளுக்கு வராது மாற்றம்... ஆளுங்கட்சியால் தொடர்கிறது ஏமாற்றம்!| Dinamalar

அதிகாரிகளுக்கு வராது மாற்றம்... ஆளுங்கட்சியால் தொடர்கிறது ஏமாற்றம்!

Updated : அக் 16, 2018 | Added : அக் 16, 2018
Share
நேரு ஸ்டேடியத்தில் 'ஜாக்கிங்'கை முடித்து விட்டு, வியர்வையுடன் 'கேலரி'யில் வந்து உட்கார்ந்தனர் சித்ராவும், மித்ராவும். தண்ணீர் குடித்துக் கொண்டே கேட்டாள் மித்ரா...''அக்கா! நம்ம யுனிவர்சிட்டியோட 'ஸ்போர்ட்ஸ் மீட்' இங்க நடந்துட்டு இருக்கு தெரியுமா...நாலு மாவட்டத்துல இருந்து 66 காலேஜ்களைச் சேர்ந்த 1481 ஸ்டூடண்ட்ஸ் விளையாடவந்திருக்காங்களாம்!''''அது எனக்கும்
அதிகாரிகளுக்கு வராது மாற்றம்... ஆளுங்கட்சியால் தொடர்கிறது ஏமாற்றம்!

நேரு ஸ்டேடியத்தில் 'ஜாக்கிங்'கை முடித்து விட்டு, வியர்வையுடன் 'கேலரி'யில் வந்து உட்கார்ந்தனர் சித்ராவும், மித்ராவும். தண்ணீர் குடித்துக் கொண்டே கேட்டாள் மித்ரா...''அக்கா! நம்ம யுனிவர்சிட்டியோட 'ஸ்போர்ட்ஸ் மீட்' இங்க நடந்துட்டு இருக்கு தெரியுமா...நாலு மாவட்டத்துல இருந்து 66 காலேஜ்களைச் சேர்ந்த 1481 ஸ்டூடண்ட்ஸ் விளையாடவந்திருக்காங்களாம்!''''அது எனக்கும் தெரியும்...
ஆனா, நம்ம யுனிவர்சிட்டியில, பி.பி.எட்., எம்.பி.எட்., படிக்கிறவுங்க 350 பேரும், வாத்தியார்கள் பத்து பேரு இருந்தும் ஒரு ஸ்டூடண்ட் கூட, இந்த 'மீட்'ல கலந்துக்கலை தெரியுமா...இப்ப இருக்குற பிஸிக்கல் டைரக்டருக்கும், துறைத்தலைவருக்கும் இடையில நடக்குற பனிப்போர் தான் இதுக்குக் காரணம்னு சொல்றாங்க'' என்றாள் சித்ரா.''யுனிவர்சிட்டி நடத்துற 'ஸ்போர்ட்ஸ் மீட்'ல, அங்க படிக்கிற ஸ்டூடண்ட்சே கலந்துக்க முடியலைன்னா, எவ்ளோ பெரிய கொடுமை...இப்பிடி ஒரு எக்ஸ்பீரியன்சை 'மிஸ்' பண்ணுன அந்த பசங்க, எவ்ளோ வருத்தப்படுவாங்க?'' என்று கொந்தளித்தாள் மித்ரா.''புதுசா வி.சி.,வர்றதுக்குள்ள யுனிவர்சிட்டி என்ன கதி ஆகப்போகுதோ...வரவர 'ஹையர் எஜூகேஷன்' நம்ம ஊர்ல 'லோ லெவல்'ல போயிட்டிருக்கு!'' என்றாள் சித்ரா.''பள்ளிக் கல்வித்துறையில மட்டும் என்ன வாழுதாம்...ஆளுக்கு ஆளு ஆளுங்கட்சி ஆளுங்கிற பேருல, அழிச்சாட்டியம் பண்றாங்க...'மீ டூ' ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே, நம்ம ஊருல இருக்குற லேடி டீச்சர்ஸ் நிறைய்யப்பேரு, எஸ்.எஸ்.,குளத்துல இருக்குற ஒரு ஆபீசர், ரொம்ப மோசமா நடந்துக்கிறார்னு,
'சோஷியல்மீடியா'வுல ஏகப்பட்ட 'மெசேஜ்' போட்டாங்க. இப்ப வரைக்கும் அவரை மாத்தலையே!'' என்றாள் மித்ரா.''நீ சொல்றது உண்மை தான் மித்து...அவருக்கு ஆளுங்கட்சி 'சப்போர்ட்'டாம்...அதனால தான் மாத்த முடியலையாம்; ஆனா, சி.இ.ஓ., ஆபீஸ்ல இருந்த ரெண்டு பி.ஏ.,வையும் ஜூன்லயே மாத்துன பிறகும், இன்னிக்கு வரைக்கும் அவுங்களை ஸ்கூலுக்கே விட மாட்டேங்கிறாங்களாம். அவுங்க ரெண்டு இடத்துலயுமே, ஒழுங்கா வேலை பாக்க முடியலையாம்!'' என்றாள் சித்ரா.''அது மட்டுமா...ரொம்ப வருஷமா, மூணு டி.இ.ஓ.,போஸ்ட்டிங்குமே, 'பொறுப்பு'லதான் ஓடுது. எல்லாருக்குமே ஏதோ ஒரு பின்னணி இருக்கு!'' என்றாள் மித்ரா.''அதிகாரிகளை நியமிக்கிறதுல, நம்ம மாவட்டத்து அளவுக்கு, வேற எங்கயும் ஆளுங்கட்சி ஆதிக்கம் இருக்குமான்னு தெரியலை; நம்ம கலெக்டர், ரிட்டயர்டு ஆகுற வரைக்கும் இங்க தான் இருப்பாரு போலிருக்கு; கார்ப்பரேஷன் டெபுடி கமிஷனர் அஞ்சு வருஷமா அசையாம இருக்காங்க; ரெண்டு பேரோட 'பர்பாமென்ஸ்' என்னன்னு ஊருக்கே தெரியும். ஆனா, ஊரு எக்கேடு கெட்டா என்னன்னு ஆளுங்கட்சிக்காரங்க நினைக்கிறாங்க'' என்றாள் சித்ரா.''நம்ம கலெக்டருக்கு ஜனவரியில செகரட்டரி புரமோஷன் வந்திருமாம்; அதுவரைக்கும் இருப்பாராம். டெபுடியைப் பத்தித் தெரியலை; ஆனா, இதே போஸ்ட்டிங்ல இருந்த சிவராசு தான், நம்ம கார்ப்பரேஷன் பேருல, 280 கோடி ரூபா டெபாஸிட் வச்சுட்டுப் போனாரு. நாலு வருஷத்துல அதைக் காலி பண்ற வேலை மட்டும் தான் நடந்திருக்கு; ஊருக்குள்ள உருப்படியா ஒரு வேலையும் நடக்கலை!'' என்றாள் மித்ரா.''இப்பிடித்தான்...கிழக்கு மண்டலத்துல இருக்குற பெரிய ஆபீசர், ரெவின்யூ டிபார்ட்மென்ட்ல இருந்து வந்து, 'பீரியட்' முடிஞ்சும் அங்கேயே நகராம இருக்காரு; பில்டிங் பிளான், வாட்டர் கனெக்ஷன்,
கான்ட்ராக்ட்ன்னு எல்லாத்துலயும் தட்டி எடுக்குறாராம்; சொந்த ஊரு சேலத்துல சொத்து வாங்கி குவிக்கிறாராம்; ஆளுங்கட்சி ஆளுன்னு அவரையும் மாத்த மாட்டேங்கிறாங்க!'' என்றாள் சித்ரா.''அக்கா...அவரு எப்பக் கேட்டாலும், 'இப்பத்தான் மினிஸ்டர் பேசுனாரு; இப்பத்தான் ஏர்போர்ட்ல 'ரிசீவ்' பண்ணி, வீட்டுல விட்டுட்டு வர்றேன்'னு 'டயலாக்' விடுறாராம்'' என்றாள் மித்ரா.''இங்க மட்டுமா...மெயின் ஆபீஸ்ல, வாட்டர் சப்ளையில அக்கவுன்ட்ஸ் பார்த்துட்டு இருந்த லேடிக்கு, அலுவலர்களை அதிகாரம் பண்ற ஏ.சி., பொறுப்பையும், கனமான கவுன்சில் செகரட்டரி போஸ்ட்டிங்கையும் கூடுதலா கொடுத்திருக்காங்க.கவுன்சில்ல போடுற தீர்மானம் எதுவும் வெளியில போயிரக்கூடாதுன்னு தான் இந்த ஏற்பாடாம்; இந்த அம்மாவோட வீட்டுக்காரரு, ஆளுங்கட்சியில முக்கியமான பொறுப்புல இருக்காரு!'' என்றாள் சித்ரா.''ஆமாமா...எந்த வேலையுமே தெரியாத அவுங்கள்ட்ட, ஆளுங்கட்சி பிரஷர்ல இத்தனை பொறுப்பைக் கொடுத்திருக்காங்கன்னு கார்ப்பரேஷன்லயே நிறையப்பேரு காதைக் கடிச்சிருக்காங்க!'' என்றாள் மித்ரா.''போலீஸ்லயும் ஆளுங்கட்சிக்கு ஒத்துப்போற ஆளுகளைத்தான் இங்க கொண்டு வர்றாங்க. டிஸ்ட்ரிக்ட்ல 'கிரைமை' கண்டு பிடிக்கிற 'இன்ஸ்' மேடம், இதுல 'வேற லெவல்'ங்கிறாங்க...தனக்கு மேல இருந்த டி.எஸ்.பி., தனக்குக் கீழ இருந்த எஸ்.ஐ.,ரெண்டு பேரையும் சொல்லி வச்சு, மாத்திட்டாங்களாம்;
நீலகிரியைச் சேர்ந்த வில்லுக்குப் பேர் போன எம்.பி.,யோட பலமான ஆதரவு, இவருக்கு இருக்காம்!'' என்றாள் சித்ரா.''இதுவும் எஸ்.பி., ஆபீஸ் மேட்டர் தான்...1993ல எஸ்.ஐ.,ஆனவுங்க, ரூரல்ல 37 பேரு இருக்காங்க; அவுங்களுக்கு சிட்டியை விட செலக்சன் கிரேடு சம்பளம் 2,700 ரூபா 'கம்மி'யா கிடைக்குதாம்; இதை 'பிக்ஸ்' பண்ற பொறுப்புல இருக்குற பி.ஏ.,ஒருத்தரு, 37 பேர்ட்டயும் ஆளுக்கு ஆயிரம் கேக்குறாராம்; அரியர்ஸ் போடுறப்ப தனியா தரணும்னு சொல்றாராம்'' என்றாள் மித்ரா.அதை கவனிக்காத சித்ரா, அலைபேசியில் வந்த அழைப்பை எடுத்து, 'யாரு...நான் 'பாய்' இல்லீங்க; கேர்ள்' என்று சிரித்துக் கொண்டே பதில் சொல்லி விட்டு, பேச்சைத் தொடர்ந்தாள்...''மித்து...டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன்ல, ஆள் பற்றாக்குறை பிரச்னை தலை விரிச்சாடுதாம்; டூட்டி முடிச்சு வீட்டுக்கே போகவிடாம, மறுபடியும் 'டூட்டி' பார்க்கச் சொல்றாங்களாம். ஆனா, ஆளுங்கட்சி யூனியன்காரங்க வேலைக்கே வராட்டாலும் கண்டுக்கிறதில்லை!''''இனிமேல்...மாசத்துக்கு ரெண்டு நாள் தான் 'லீவு' போடணும்; அதுக்கு மேல எடுத்தால், 'ஆப்சென்ட்' போட்ருவோம்; சம்பளத்துல பிடிப்போம்னு வாய் மொழியில மெரட்டுறாங்களாமே!''''இருக்கலாம்; உக்கடம் நரசிம்மர் கோவிலுக்கு பொறுப்பா வந்திருக்கிற ஆபீசர், பழனிக்காரராம். ஆனா, கோவில்ல அவர் பேசுறது எல்லாமே பகுத்தறிவு தானாம்; இவரும், மருதமலை கோவிலுக்கு புதுசா வந்திருக்குற லேடி ஆபீசரும்,
அறநிலையத்துறையில முக்கியமான பொறுப்புல இருக்குற 'ராஜ'கம்பீரமான ஆபீசர்ட்ட வேலை செஞ்சவுங்களாம்; இவுங்களை வச்சு, கோவில் கட்டுமானப் பணிகள்ல, கணிசமா தொகை பாக்குறதுதான் பெரிய ஆபீசர் பிளானாம்''''கட்டடம்னு சொன்னதும் ஞாபகம் வந்துச்சு; ஒப்பணக்கார வீதியில போன வருஷம் புதுசா திறந்த ஏழு மாடி ஜவுளிக்கடை கட்டடம், முழுக்க முழுக்க விதிமீறல்னு தெரிஞ்சு, ஐகோர்ட்டே இடிக்கச் சொன்ன பிறகும், கார்ப்பரேஷன் ஆபீசர்கள், கண்டுக்காம இருக்காங்களாம்; காசை வாங்கிட்டாங்களா, அதுலயும் ஆளுங்கட்சி தலையீடான்னு தெரியலை!'' என்றாள் மித்ரா.''மித்து...ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., ஒருத்தரு, தன்னோட மகனை 'இப்போதைக்கு நீ அரசியலுக்கு வர வேண்டாம்; பார், பெட்ரோல் பங்க், காஸ் ஏஜென்சி, எக்ஸிபிஷன்னு பிஸினஸ்சை மட்டும் பார்த்துக்கோ'ன்னு கடிவாளம் போட்டுட்டாராம்'' என்றாள் சித்ரா.''அக்கா...அண்ணா சிலையோட இருக்குற எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு, ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கள் யாரும் மாலை போடுறதில்லைன்னு பேசிட்டு இருந்தோமே...புதன்கிழமைதோறும் நான் மாலை போடுறேன்னு எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன் அறிக்கை கொடுத்திருக்காரு'' என்று கேட்டாள் மித்ரா.''அப்பிடின்னா, மத்தவுங்க யாரும் போடுறதில்லைன்னு சொல்ல வர்றாரா?'' என்று சிரித்துக்கொண்டே கேட்ட சித்ரா, ''மித்து...
நம்மூரு கேபிள் தாசில்தாருக்கு மூணு மணி தாசில்தார்ன்னு, பட்டப்பேரே வச்சுட்டாங்க; ஏன்னா, அவரு தினமும் ஆபீஸ்க்கு வர்றதே மூணு மணிக்கு தானாம்; அஞ்சு மணிக்குக் கிளம்பிடுவாராம்; சென்னைக்குப் போக வேண்டிய 300 பைல், அவர் டேபிள்ல குவிஞ்சு கிடக்குதாம்!'' என்றாள் சித்ரா.''அதை விடு...கலெக்டர் ஆபீஸ்ல தீபாவளி வசூல் ஜோரா ஆரம்பிச்சிருச்சு...கொஞ்சம் 'டீட்டெய்ல்' விசாரிச்சு சொல்றேன்!'' என்றாள் மித்ரா.''சரி, சரி வா...கிளம்பலாம்; எனக்கு சூடா ஒரு 'கப்' காபி சாப்பிடணும்!'' என்று சித்ரா சொல்ல, இருவரும் கிளம்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X