வக்கீலை தப்பவிட்ட போலீ்சு...வறுத்தெடுக்கும் 'ஏசி'யால் ரொம்ப 'ரவுசு'

Added : அக் 16, 2018
Advertisement
வீட்டை சுத்தம் செய்யும் வேலையில், சித்ரா மும்முரமாக ஈடுபட்டிருந்தாள். அப்போது ''ஹாய்.. சித்துக்கா! என்ன கிளீனிங் ஒர்க் படுஸ்பீடா நடக்குது,''என்று உள்ளே வந்தாள் மித்ரா.''ஏன், உனக்கு தெரியாதா? நாளன்னைக்கு ஆயுதபூஜை. அதுக்குத்தான் 'லீவு'போட்டுட்டு இந்த வேலையை பண்றேன்,''டேபிளில் இருந்த செய்தித்தாளை புரட்டியவாறே, ''புறக்கணிப்பு போராட்டம் நடத்தினதுக்கு, கைமேல்
 வக்கீலை தப்பவிட்ட போலீ்சு...வறுத்தெடுக்கும் 'ஏசி'யால் ரொம்ப 'ரவுசு'

வீட்டை சுத்தம் செய்யும் வேலையில், சித்ரா மும்முரமாக ஈடுபட்டிருந்தாள். அப்போது ''ஹாய்.. சித்துக்கா! என்ன கிளீனிங் ஒர்க் படுஸ்பீடா நடக்குது,''என்று உள்ளே வந்தாள் மித்ரா.
''ஏன், உனக்கு தெரியாதா? நாளன்னைக்கு ஆயுதபூஜை. அதுக்குத்தான் 'லீவு'போட்டுட்டு இந்த வேலையை பண்றேன்,''டேபிளில் இருந்த செய்தித்தாளை புரட்டியவாறே, ''புறக்கணிப்பு போராட்டம் நடத்தினதுக்கு, கைமேல் பலன் கிடச்சிடுச்சு பார்த்தீங்களா?,'' என்றாள் மித்ரா.''எதை சொல்றேடி''''புதிய பஸ் இயக்கம் துவக்க விழாவில், 'டாலர் சிட்டி' எம்.எல்.ஏ.,கள் மூணு பேரும் புறக்கணிச்சிட்டாங்க. அடுத்த, நாலு மணி நேரத்துல, அதற்கான பலன் கிடைச்சிடுச்சு. அதைத்தான் சொல்ல வந்தேன்''''ஓ... அப்படின்னா, சொல்லேன்''''திருப்பூர் கூட்டுறவு விற்பனை சங்கத்துக்கு, யார் தலைவருங்கிற விஷயத்துல, ஆளுங்கட்சி கோஷ்டி பூசல் வெடிச்சிடுச்சு. நார்த், சவுத் எம்.எல்.ஏ., ஆதரவோட, பகுதி செயலாளர் ஒருத்தர் ஆகறதா இருந்துச்சு,'' ''என்ன நடந்துச்சுனு தெரியலை. அவரோட மனு தள்ளுபடியாகிடுச்சு. அதனால, 'மாஜி' யோட, அக்கா மகன் மீண்டும் தலைவர் ஆகறமாதிரி 'லக்' அடிச்சிடிச்சு''''அப்புறம் என்னாச்சு''என்றாள் சித்ரா ஆர்வமாக.''இனிமேதான் கிளைமேக்ஸ் வருதுங்க. எம்.எல்.ஏ.,கள் இரண்டு பேரும் சண்டை கட்டி பார்த்தாங்க. கூட்டுறவு அதிகாரிங்க இறங்கி வரல. என்னடா பண்றதுன்னு, ரூம் போட்டு யோசிச்சு, அமைச்சர் கலந்துட்ட அரசு விழாவ புறக்கணிச்சுட்டு, தலைமைக்கும் பேசிட்டாங்க,'' ''நெருக்கடி அதிகமானதால், மேலிடமும் எம்.எல்.ஏ.,களுக்கு இறங்கி வந்திருச்சு. அடுத்த நாலு மணி நேரத்துல, 'சேல் சொசைட்டி' தேர்தல் முழுமையா ரத்துனு நோட்டீஸ் போட்டாச்சு'' என்றாள் சித்ரா.''அப்ப இரண்டு தொகுதியும், ஒரு பகுதியும் சேர்ந்து, மாவட்டத்தையே அசைச்சு பார்த்துட்டாங்கனு சொல்லுங்க'' என்றாள்.''ஏய்... மித்து.. நாம் ஏற்கனவே பேசின மாதிரி, 'போலி' சர்டிபிகேட் தயாரிக்கற கும்பல் மாட்டிருச்சு பாத்தீங்களா?,'' என்றாள் சித்ரா.''ஆமாம். இரண்டு அம்புகளை பிடிச்சாச்சு. ஆனால், 'வில்'எங்கே, இருக்குனு தெரியவே இல்லைங்க்கா. மாஜி' வருவாய்த்துறை ஊழியர்கள் கொடுத்த தைரியத்துல இப்படி செஞ்சிருக்காங்க. கைதான பெண்கள், ஆள் பிடிக்கற வேலை மட்டும்தான். 'போலி' சர்டிபிகேட் எங்க தயாராகுதுனு யாருக்கும் தெரியலை,'' ''இந்த வழக்கில், சேவூர் பகுதியை சேர்ந்த ஒரு வக்கீலை சேர்க்க விடாமல் ஒரு குரூப்பே வேலை பார்த்திருக்கு. ஆனால், சப்-கலெக்டரிடம், கைதான பெண்கள் வாக்குமூலம் கொடுத்ததால், வேறு வழியின்றி, வக்கீல் பேரையும் சேர்த்தாங்களாம். நாம செய்ய வேண்டிய வேலையை வருவாய் துறையினர் ஏன் செய்யறாங்கன்னு? போலீஸ் தரப்பில் புகைச்சலாம்டி,'' சித்ரா கூறியதும், அவளது அம்மா, காபி கொண்டு வந்தார். இருவரும், அதை பருகிய படியே பேசினர்.''ஓட்டல் செக்யூரிட்டி பர்மிஷன் கொடுத்தா மட்டும்தான், கவர்மென்ட் ஆபீசுக்குள்ள போக முடியுதுனு புலம்புறாங்க'' என்றாள் சித்ரா.''என்னக்கா, இது அநியாயமா இருக்கு,'' என்றாள் மித்ரா.''இ.பி,. மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், பி.என்., ரோட்டில், பெரிய ஓட்டல் கட்டடத்தோட, மூணாவது மாடிக்கு மாத்திட்டாங்க. ஆபீசுக்கு யார் போனாலும், ஓட்டல் செக்யூரிட்டி பர்மிஷன் கொடுத்தா மட்டும்தான், வண்டியை 'பார்க்' பண்ணிட்டு, போக முடியுமாம்,''''அதுவும், பார்க்கிங்கில் நிறுத்தினா, டூ வீலருக்கு, 10 ரூபாய் கட்டணமும் வசூலிக்கறாங்களாம். காட்டன் மார்க்கெட் வளாகத்துல, ஏகப்பட்ட குடோன் இருக்கு. மக்கள் எளிதாக வந்து போற மாதிரியான இடத்துக்கு ஆபீசை மாத்த வேண்டியதுதானே,இ.பி., ஊழியர்களே முணுமுணுக்கிறாங்களாம்டி,'' என்றாள் சித்ரா.''மக்களோட நெருக்கமா இருக்க வேண்டிய முக்கிய துறைகளில் ஒன்றான, இ.பி., ஆபீஸ், வாடகை கட்டடத்து, மூணாவது மாடியில செயல்பட அளவுக்கு, நிலைமை மோசமாகிடுச்சுங்க'' என்று அங்கலாய்த்தாள் மித்ரா. ''திருப்பூரில் ஆளுங்கட்சிக்காரங்கே, சொைஸட்டி எலக்ஷனை நிறுத்தினாங்க. பக்கத்தில், அவிநாசியில் எதிர்க்கட்சிக்காரங்க நிறுத்தி வைச்சுட்டாங்க,'' என்றாள் சித்ரா. ''அது என்ன விஷயங்க்கா,'' என்றாள் மித்ரா. ''அவிநாசி கூட்டுறவு விற்பனை சங்க தேர்தலில், தி.மு.க., வில் 7 பேருக்கு டைரக்டர் பதவி வேண்டும் என்றும், தலைவர் துணை தலைவர் பதவிக்கு அப்புறம் பேசிக்கலாமுன்னு, 'டிமாண்ட்' வெச்சிருக்காங்க. ஆனா, ஒன்றிய நிர்வாகியை சரிக்கட்டி, ரெண்டு பதவி மட்டும் கொடுத்து, மனுத்தாக்கலையும் முடிச்சிட்டாங்க,''''இதை தெரிஞ்சுகிட்ட, சேவூர் ஒன்றியத்தை சேர்ந்த நிர்வாகிகள், ஐகோர்ட்டுல போய், 'ஸ்டே' வாங்கிட்டாங்களாம்,'' ''இந்த விஷயத்துல மாவட்டத்தின் உத்தரவை மதிக்காமல், லோக்கல் நிர்வாகிகள், ஆளுங்கட்சியோடு கூட்டணி சேர்ந்து, ஆசைப்பட்டு இப்படி செஞ்சுட்டாங்கன்னு, ஊர் பூராவும், பரவலா பேசிக்கிறாங்களாம்,'' என்றாள் மித்ரா. ''மித்து, அதே அவிநாசியில நடந்த, வீட்டுமனை வரன்முறை முகாமுக்கு நல்ல கூட்டமாமே!''''ஆமாங்க்கா. பொதுமக்களுக்கு யூேஸா இல்லையோ, புரோக்கர்களுக்கு நல்லதொரு வாய்ப்பா போயிடுச்சு,'' ''எதை வைச்சு சொல்றே?''''அக்கா... இந்த முகாம்பத்தி, ரியல் எஸ்டேட்காரங்கதான் விளம்பரமே செஞ்சாங்களாம். அவங்க போட்ட லே-அவுட்ல, சில சைட்களுக்கு அப்ரூவல் கொடுத்திருக்காங்க. அதே பகுதியில் நேரடியாக மனு கொடுத்த 'சைட்' உரிமையாளருக்கு கொடுக்க முடியாதுன்னு சொல்லியிட்டாங்களாம். இது மாதிரி நீர் வழித்தடங்களில் உள்ள 'சைட்களுக்கு' அப்ரூவல் கொடுத்ததில், பிரச்னை இருக்குதாம். இதை கெளப்பிறதுக்கு, ஒரு கோஷ்டி ரெடியாயிட்டு இருக்குதாம்,'' என்று விளக்கினாள் மித்ரா.அப்போது அங்கு வந்த சித்ராவின் அம்மா, ''ஏண்டி, மித்து, கொஞ்சம் 'டீ' குடிக்கிறயா?'' என்றார்.''வேண்டாம். ஆன்ட்டி, இப்பதானே காபி குடிச்சோம்,'' ''டீ'ன்னு சொன்னதும், ஒரு மேட்டர் நினைவுக்கு வருது. திருப்பூருக்கு வரப்போகும், நாலாவது குடிநீர் திட்டத்துக்கு, அன்னுாரில் சுத்திகரிப்பு மையம் கட்ட இடம் வாங்கி கொடுக்க, மூணு எம்.எல்.ஏ.,வும் சொன்னாங்களாம்,''''அதுக்காக, 'டீ பவுண்டேசன்' தலைமையில், நிதி கலெக்ட் பண்ணி, கொடுத்தாங்களாம். பணம் கொடுக்க நிகழ்ச்சிக்கு, 'தாய்' சங்கத்துக்கு அழைப்பில்லையாம். இதுதவிர, தாங்களே பணம் கொடுத்த மாதிரி சொல்றாங்கன்னு, 'தாய்' நிர்வாகிகள் புலம்புறாங்களாம்,'' என்றாள் சித்ரா.''இந்த காலத்தில், பெத்த புள்ளைகளே, தாயை எட்டி உதைச்சு, நடுரோட்டில் தள்றாங்க. இதுல, அசோஸியேஷன் பத்தியெல்லாம் யோசிப்பாங்களாங்க்கா?'' என்று ஆதங்கப்பட்டாள் மித்ரா.அப்போது, டிவியில், ெஹல்மெட் விழி்ப்புணர்வு பிரசார குறும்படம் ஒளிபரப்பானது. அதைப்பார்த்த மித்ரா, ''ஏக்கா... புதுசா வந்த டிராபிக் அதிகாரி பரவாயில்லையா?''''அதை ஏண்டி கேட்கிறே. அவரு பண்ற லுாட்டி தாங்க முடியலையாம். குமரன் ரோட்டில் டிராபிக் இடைஞ்சலா இருந்த வண்டிகளை, டிராபிக் கான்ஸ்டபிள் ஒருத்தர், 'ரெகவரி'வேன் மூலம் அப்புறப்படுத்திட்டு இருந்தாராம்,''''அப்ப வந்த, அதிகாரி, அவரை பார்த்துட்டு, தகாத வார்த்தைகளில், வறுத்தெடுத்துட்டாராம். இதை பார்த்த பொதுமக்கள், முகம் சுழிச்சுட்டே போனாங்களாம். இதேமாதிரி, 'மைக்'கிலும், 'அவனே.. இவனே..'ட்டு ஒருமையில பேசறாராம். இதுக்கு ஒரு முடிவுகட்டி ஆகோணும்னு, டிராபிக் போலீஸ்காரங்க முடிவுபண்ணி, கமிஷனர்கிட்ட பெட்டிஷன் கொடுக்க முடிவு செஞ்சிருக்காங்களாம்,''''யாரு... இந்த 'யானையின் அரசனை' பத்திதானே சொன்னீங்க?'' என்ற மித்ராவுக்கு, ''ஏண்டி.. இல்லாட்டி உனக்கு தெரியாதாக்கும்,'' என்று கடிந்தாள் சித்ரா.அப்போது, வீட்டு குழாய் இணைப்பில் குடிநீர் வரவே, சித்ரா எழுந்தாள். 'நீங்க பேசிட்டீருங்க. நான் போய் தண்ணீர் புடிக்கிறேன்,'என்று சித்ராவின் அம்மா, குடங்களை துாக்கி கொண்டு நகர்ந்தார்.''குடிநீர் பத்தி ஒரு மேட்டர் கேளுங்களேன். பெரிச்சிபாளையத்தில் உள்ள 'வாட்டர் டேங்'கில் இருந்து, கார்ப்ரேஷன், அப்புறம் தனியார் லாரிகளில், குடிநீர் சப்ளை செய்யறாங்க. அதில், 'தில்லாலங்கடி' செஞ்சு, பணத்தை சுருட்டி பங்கு போட்டுறாங்களாம். 'இதற்காகத்தான், 'சிசிடிவி' கேமரா மாட்டியும், இந்த 'தகிடுதத்தம்' குறையவே இல்லையாம்,''என்றாள் மித்ரா. ''நீ.. நேரிலேயே போய் நி்ன்னாலும், அவங்க அப்படித்தான் செய்வாங்க. இந்த மாதிரி ஆட்களை திருத்தவே முடியாதுடி. அதே மாதிரி, பதவி இல்லாட்டியும், ஆட்டம் மட்டும் குறைய மாட்டேங்குது,''''அக்கா... யாரை சொல்றீங்க?''''ஜீவா நகரில், சாக்கடை துார்வராத காரணத்தால், பல பிரச்னை வருதுன்னு, மக்களே ஒண்ணு சேர்ந்து, பொக்லைன் வைச்சு, துார்வாரினாங்களாம். அதில், ஒரு குழாய் உடைஞ்சிடுச்சாம். இதைப்பார்த்திட்டு வந்த, 'மாஜி' கவுன்சிலர், 'யாரைக்கேட்டு துார்வாறினீங்க?'என்று சத்தம் போட்டிருக்கார்,''''நீங்க கவுன்சிலர் கிடையாது. கார்ப்ரேஷன்காரங்க வராததால, நாங்களே வேலை செய்றோம்னு' சொல்லியிருக்காங்க. இதனால, ஆவேசப்பட்ட 'அன்பான' மாஜி, 'சவுத்' எம்.எல்.ஏ., மூலம், கார்ப்ரேஷன் ஏ.சி.,க்கு 'பிரஸ்ஸர்' கொடுத்து, போலீசுக்கு போக வைச்சு,நாலு பேரை அரெஸ்ட் பண்ணி்ட்டாங்களாம்,''என்றாள் சித்ரா.''இவங்களும் செய்ய மாட்டாங்க... மக்கள் செஞ்சாலும் கேள்வி கேப்பாங்க. இதென்ன கொடுமை சித்துக்கா?''என்று மித்ரா கோபமாக கேட்டு முடிக்கவும், சித்ராவின் அம்மா, இருவரையும் சாப்பிட அழைக்கவும், சரியாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X