பதிவு செய்த நாள் :
காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா
கோவா அரசியலில் திடீர் திருப்பம்

பனாஜி: கோவா மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, இரண்டு,எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். பா.ஜ.,வில் அவர்கள்சேர்ந்துள்ளனர்.

காங்.,எம்.எல்.ஏ.க்கள்,ராஜினாமா,கோவா,அரசியல்,திடீர் திருப்பம்


கோவாவில், முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. 40 உறுப்பினர்கள் உள்ள, கோவா சட்டசபையில், காங்., பலம், 16 ஆக இருந்தது. இந்நிலையில், காங்.,கை சேர்ந்த உறுப்பினர் கள், சுபாஷ் சிரோத்கர், தயானந்த் ஸோப்டே ஆகியோர், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக, 'பேக்ஸ்' மூலம் தகவல் அனுப்பி

உள்ளதாக, சட்டசபையில் , சபாநாயகர் பிரமோத் சாவந்த் அறிவித்தார்.

எதிர்பார்ப்பு


இதையடுத்து, கோவா சட்டசபையில், காங்.,கின் பலம், 14 ஆக குறைந்துள்ளது. எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துள்ள, சுபாஷ் சிரோத்கர், தயானந்த் ஸோப்டே, டில்லியில், பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷாவை சந்தித்து பேசினர்.

பின் நிருபர்களிடம் பேசிய அவர்கள், 'பா.ஜ.,வில் நாங்கள் இணைகிறோம். காங்.,கில் இருந்து,வரும் நாட் களில் மேலும் 3, எம்.எல்.ஏ.,க் கள் விலகுவர் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.

எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தவர்களில் ஒருவரான, தயானந்த் ஸோப்டே, 2017ல், நடந்த

Advertisement

சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வை சேர்ந்த, முன்னாள் முதல்வர், லஷ்மிகாந்த் பர்ஸேகரை தோற்கடித்தவர்.முதல்வர், மனோகர் பரீக்கர், உடல் நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால், கோவா சட்டசபையில், மாநில அரசு பலத்தை நிரூபிக்க வேண்டும், என, காங்., வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், அந்த கட்சியைச் சேர்ந்த, 2, எம்.எல்.ஏ.,க் கள் ராஜினாமா செய்திருப்பது, கோவா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yaaro - chennai,இந்தியா
18-அக்-201800:02:07 IST Report Abuse

yaaroLol...look at all the yokkiyans speaking, who were happy when vajpayee govt was toppled by one vote. This is not old BJP. This is Modi amitshah BJP. இனிமே இப்படித்தான்

Rate this:
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
17-அக்-201817:43:01 IST Report Abuse

தமிழர்நீதி மானம்கெட்டவர்கள் மதவாத காவிகள் . கடையில் பொருள் வாங்குவதுபோல MLA களை வாங்குகிறார்கள்

Rate this:
Arasu - Ballary,இந்தியா
18-அக்-201817:29:48 IST Report Abuse

Arasuபாய் தண்ணி குடி, ...

Rate this:
17-அக்-201815:14:21 IST Report Abuse

வந்தேமாதரம்பித்தலாட்ட காங்கிரஸ்

Rate this:
puratchiyalan - Nagercoil,இந்தியா
17-அக்-201816:54:46 IST Report Abuse

puratchiyalanபித்தலாட்ட பிஜேபி.. காரனுக... நேர் வழியில வர வக்கு இல்ல... ...

Rate this:
Arasu - Ballary,இந்தியா
18-அக்-201817:30:40 IST Report Abuse

Arasujoe வேற பித்தலாட்டம் செய்யாதவனா பார்த்து வோட்டுப் போடுங்கள் ...

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X