அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
இலங்கை அரசின் புதிய சட்டத்தை
ரத்து செய்ய வேண்டும்: ஸ்டாலின்

சென்னை : 'இந்திய மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும், இலங்கை அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்யும்படி,இலங்கை துாதரை அழைத்து, மத்திய அரசு அறிவுரை வழங்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

 இலங்கை அரசு, புதிய சட்டம், ரத்து செய்ய ,வேண்டும்,ஸ்டாலின்


அறிக்கை:


இந்திய மீனவர்களுக்கு, தலா, 60 லட்சம் ரூபாய் அபராதமும்,

மூன்று மாத சிறை தண்டனையும் விதித்து, இலங்கை கல்பிட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து, மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் எட்டு பேரை, இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்த வழக்கில், இப்படியொரு தீர்ப்பு வெளி வந்துள்ளது.

டீசல் விலை உயர்வு, இலங்கை கடற்படை தொல்லை, படகுகள் பறிமுதல், இலங்கை அரசின் லட்சக்கணக்கான ரூபாய் அபராதம்போன்ற, பலமுனை தாக்குதலில் சிக்கி, தமிழக மீனவர்களின் வாழ்க்கை, அநியாயமாக பாழ்படுத்தப்படுகிறது. மத்திய அரசு உடனே, இலங்கை அரசுடன் பேசி,

Advertisement

அபராதம் விதிக்கப்பட்டுள்ள துாத்துக்குடி மீனவர்கள் தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் மீது அபராதம் விதிக்கும், இலங்கை அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்ய கோரி, இலங்கை துாதரை அழைத்து, மத்திய அரசு அறிவுரை வழங்க வேண்டும், என கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Balakumaresan - Chennai,இந்தியா
17-அக்-201814:34:56 IST Report Abuse

S Balakumaresanமத்திய அரசுதான்- (இதில் காங்கிரஸ் பாஜக வேற்றுமை இல்லை) தமிழர்களை விடவும் சிங்களர்களை அதிகம் எப்போதும் நேசிக்கிறது மேலும் நம்புகிறது. அவர்கள் நம்மை கொஞ்சமும் நம்புவதில்லை.இலங்கை அதிபரை நாம் கொல்ல சதி செய்ததாக குற்றச்சாட்டு வேறு. அவர்களுக்கு செலவழிக்கும் பணமெல்லாம் வீணாக கடலில் கொட்டிய பணம் நமக்கு நாமே தீயிட்டுக் கொள்வதாகும்.இதற்கு தமிழ் ஈழம் தான் ஒரேதீர்வு

Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
18-அக்-201803:26:46 IST Report Abuse

uthappaஅவன் நாட்டில் இருந்து கொண்டே பெற முடியாத ஒன்றை, இங்கிருந்து அடைய முடியுமா? ஊரான் நாட்டை பிரிக்க முடியுமா? மத்திய அரசை விடுங்க, பக்கத்து கர்நாடகா, ஆந்திரா , கேரள என்றக்காவது உங்களுக்கு ஆதரவா பேசி இருக்கா? அங்கே இப்போ நிம்மதியா தமிழர்கள் இருப்பது உறுத்துதா? ...

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
17-அக்-201813:26:07 IST Report Abuse

Pasupathi Subbianநவஜோத்சித்து தமிழகத்தை கேவலமாக பேசினார் அதற்க்கு இவர்களின் பதில் என்ன ?நடவடிக்கை என்ன ?

Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
17-அக்-201812:09:59 IST Report Abuse

Indhuindianஅறிவு ஜீவி வேறு நாட்டில் போடப்பட்ட சட்டத்தை இவர் எதிர்கிறாராம் தமிஷிக சட்டசபயில் ஒரு தீர்மானம் போட்டு அந்த சட்டத்தை தவிடுப்போடு ஆக்கிடுங்களேன்

Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X