பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
சபரிமலை,விவகாரம்,எந்தாணு ஈ குழப்பம்!

திருவனந்தபுரம்:கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், 'அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்றுவது தொடர்பாக, பந்தளம் அரச குடும்பம், திருவாங்கூர் தேவசம் போர்டு, தலைமை பூசாரியான, தந்திரி ஆகியோர் இடையே, நேற்று நடந்த பேச்சு தோல்வியில் முடிந்ததால், பரபரப்பும், குழப்பமும் நிலவுகிறது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த, முதல்வர், பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயது பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.இந்த கோவிலில், கடவுள் அய்யப்பன், பிரம்மச்சாரி கோலத்தில் இருப்பதால், இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

தீர்ப்பு


இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'அனைத்து வயது பெண்களையும், அய்யப்பன் கோவிலில் அனுமதிக்க வேண்டும்' என, சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதற்கு, அய்யப்பன் கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கேரளாவின் பல்வேறு நகரங்களில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து, பெண்கள் தொடர் போராட்டங் களை நடத்தி வருகின்றனர்.
பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக, பந்தளம் அரச குடும்பத்தினர், அய்யப்பன் கோவிலை நிர்வகித்து வரும், திருவாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர்கள், கோவில் தலைமை பூசாரியான, தந்திரி ஆகியோர், நேற்று பேச்சு நடத்தினர்.இதில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால்,

பேச்சு தோல்வி அடைந்ததாக, பந்தளம் அரச குடும்பத்தைச் சேர்ந்த, சசிகுமார் வர்மா நேற்றுதெரிவித்தார்.

வெளியேற்றம்


அவர் கூறியதாவது: அய்யப்பன் கோவிலில் அனைத்து பெண்களையும் அனுமதிப்பதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக, இன்றே பேச்சு நடத்த வேண்டும் என, வலியுறுத்தினோம்.ஆனால், 'அக்., 19ல் விவாதிக்கலாம்' என, தேவசம் போர்டு பிரதிநிதிகள் கூறினர். எங்கள் கோரிக்கைகளை அவர்கள் ஏற்க தயாராக இல்லை. பேச்சு திருப்திகர மாக அமையாததால், கூட்டத்தில் இருந்து வெளியேறினோம்.இவ்வாறு அவர் கூறினார்.
அய்யப்பன் கோவில் மற்றும் அதன் பூசாரி களுக்கு பாதுகாப்பாளராக, அரச குடும்பம் திகழ்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முந்தைய நிலை தொடர வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றத்தில் அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அரச குடும்பம் வலியுறுத்தி வருகிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, சில பெண்கள் அமைப்புகளை சேர்ந்தோர், அய்யப்பன் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். 'அவர்களை எப்படியாவது தடுத்து நிறுத்துவோம்' என, சிவசேனா கட்சியினர் மற்றும் பக்தர்

குழுக்களை சேர்ந்தோர் திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலில், மாதாந்திர பூஜைக்கான, கோவில் நடை திறப்பு, இன்று துவங்கவுள்ளது. கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பும் என எதிர்பார்க்கப்படுவதால், சபரிமலையில் பெரும் பரபரப்பும், குழப்பமும் நிலவுகிறது.
இதற்கிடையே, கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: அய்யப்பன் கோவில் விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில், கேரள அரசு, மறு சீராய்வு மனு தாக்கல் செய்யாது; நீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்துவோம். கோவிலுக்கு வரும் பெண்களை தடுக்க முயற்சிப்போர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிலக்கல்லில் போராட்டம் தீவிரம்


கேரளாவின், நிலக்கல் பகுதியில் இருந்து, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற் கான சாலை துவங்கு கிறது. இந்நிலையில், அய்யப்பன் கோவிலுக்கு செல்ல வந்த பெண் பக்தர்களை, அங்கு முகாமிட்டுள்ள பெண்கள், திருப்பி அனுப்பி வருகின்றனர்.அந்த சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களை யும், அவர்கள் சோதனை செய்து, அவற்றில்

பெண் பக்தர்கள் இருந்தால், திரும்பி செல்லும்படி நிர்ப்பந்தித்து வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து, கல்லுாரி மாணவியர் குழு வந்த பஸ்சை, நிலக்கல்லில் உள்ள பெண்கள் வழிமறித்து, திருப்பி அனுப்பினர். தனியார் பஸ்களை மட்டு மின்றி, கேரள அரசு பஸ்களில் வந்த பெண்களும், திருப்பி அனுப்பப்பட்டனர். செய்தி சேகரிப்பதற்காக நிலக்கல் வந்த பெண் பத்திரிகையாளர்களும், வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டனர். 'அய்யப்பன் கோவில் நடை, இன்று மாலை, 5:00க்கு திறக்கப்படும். ஐந்து நாள் பூஜைகளுக்கு பின், 22ல், கோவில் நடை சாத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.'உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக நடந்த பேச்சு தோல்வி அடைந்ததால், கோவிலில் பூஜை செய்ய, தலைமை தந்திரி வரமாட்டார்' என, தகவல்கள் கூறுகின்றன.

'அவசர சட்டம் வேண்டும்'


கேரளாவில், சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ள, பத்தனம் திட்டா லோக்சபா தொகுதியை சேர்ந்த, காங்., - எம்.பி., ஆன்டோ ஆன்டனி கூறியதாவது:அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, அனைத்து மதங்களை சேர்ந்தோரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதை கருத்தில் வைத்து, அவசர சட்டம் இயற்றும்படி, பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளேன். தமிழகத்தில், ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் விதித்த தடையை அகற்றும் வகை யில், அவசர சட்டம் இயற்றப் பட்டது. அதுபோன்று, அவசர சட்டம் இயற்றினால், இங்கு, கட்டாயம் இயல்பு நிலை திரும்பும்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
paran - Mohanjodaro,இந்தியா
17-அக்-201820:47:43 IST Report Abuse

paranசைவ வைணவ ஆலயங்களில் கிரக நிலைகளை ஒட்டிய மாத பூஜைகள் நாள் நட்சத்திர திதி அரச்சனைகள் என தினமும் விசேடங்கள் நடைபெறுகின்றன. ஐயப்பன் கோயிலில் மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை விழா நடப்பதுடன் மற்ற நாட்களில் எந்தவிதமான விசேடதினங்களும் கொண்டாடப்படுவதில்லை. ஆண்டு முழுவதும் மூடிய கதவை திறந்தபின் அதை நடை திறக்கப்படுவதாக ஒரு புரியாத வார்த்தையை பயன்படுத்துகின்றனர். நடை என்பது யார் நடை. ஐயப்பன் நடையா அல்லது கோயில் தந்திரிகள் நடையா அல்லது பந்தள ராஜாவின் நடையா.

Rate this:
paran - Mohanjodaro,இந்தியா
17-அக்-201820:38:43 IST Report Abuse

paranமனிதனை கிடத்திய தோற்றமாக அவனது தலை பக்கம் கர்ப்ப கிரகமாகவும் அவன் கால் உயர் கோபுரமாகவும் விரல்கள் கோபுர க்லசங்களாகவும் ந்நதி பீடம் நாபியாகவும் இந்து கோயில் அமைக்கப்படுகிறது. இந்த முறை இந்துவாக கருதப்படும் ஐயப்பன் கோயிலில் இருப்பதாக தெரியவில்லை. ஐயப்பனை வெறும் கொட்டகையில் வைத்து வழிபடுகிறார்கள்.

Rate this:
paran - Mohanjodaro,இந்தியா
17-அக்-201820:15:10 IST Report Abuse

paranசிவனுக்கும் பெருமாளுக்கும் இந்தியாவெங்கும் புராதன கோயில்கள் உள்ளன. ஆண்டாண்டுகாலமாக பெண் தெய்வங்களை நாடெங்கிலும் உள்ள மக்கள் வணங்குகிறார்கள். ஐயப்பனுக்கு சபரி மலை தவிர வேறெங்கும் புராதன கோயில்கள் இல்லை.

Rate this:
மேலும் 55 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X