பொது செய்தி

இந்தியா

ஓட்டு இயந்திரங்கள் வாங்க ரூ.4,500 கோடி தேவை

Added : அக் 17, 2018 | கருத்துகள் (25)
Advertisement
ஓட்டு இயந்திரங்கள்,  லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல், மின்னணு ஓட்டுப்பதிவு, தேர்தல் கமிஷன், விஹார் துர்வ்,  தகவல் அறியும் உரிமை சட்டம், வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரம், 
Voting Machines, Lok Sabha Elections, Legislative Elections,  Election Commission, Vihar Dhurv, Right to Information Act, Voter acknowledging machine,

புதுடில்லி : 'ஒரே நேரத்தில், லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்த தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பற்றி, எழுத்து பூர்வமான தகவல்கள் இல்லை' என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், புனேயைச் சேர்ந்தவர், விஹார் துர்வ். இவர், தேர்தல் கமிஷனிடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கேட்டிருந்ததாவது: லோக்சபாவுக்கும், சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டால், அதற்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்கள் எவ்வளவு தேவைப்படும்? இவ்வாறு அதில் அவர் கேட்டிருந்தார்.

இதற்கு, தேர்தல் கமிஷன் அனுப்பியுள்ள பதிலில் கூறியிருப்பதாவது: லோக்சபாவுக்கும், சட்டசபைக்கும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால், அதற்கு தேவையான, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்கள் குறித்து, எழுத்து பூர்வமாக தகவல் இல்லை.

நாட்டில், 10 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுச் சாவடிகள் உள்ளன. ஒரு ஓட்டுச் சாவடிக்கு, தலா, ஒரு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரம் வேண்டும். இதைத் தவிர, கூடுதலாக, இரண்டு லட்சம் இயந்திரங்கள் தேவைப்படும். இந்த இயந்திரங்களை வாங்க, 4,500 கோடி ரூபாய் தேவைப்படும். இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
17-அக்-201816:57:21 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN தகவல் கேட்டதே தவறு. அதற்கும் பதில் அளித்துள்ளது. உத்தேச கணக்கை கேட்பது கூடாது. நாட்டில் எத்தனை தொகுதிகள் உள்ளன என்பதை மட்டுமே கேட்க வேண்டும். அது பதிவாகி ரெக்கார்டாக உள்ளது. மிஷின் எண்ணிக்கை எவ்வளவு தொகை என்பதெல்லாம் உதேசமாக தயாரித்து அளிக்ககூடியபதில் . ஏற்கனவே ரெடியாக உள்ள பதிவேட்டுப்படி நகல் பதிலைத்தான் கோர வேண்டும் . ஆனால் தயாரித்து அளிக்கவேண்டிய பதிலை கோர சட்டத்தில் இடம் இல்லை என உள்ளது..ஏற்கனவே உள்ளதைத்தான் கோரவேண்டும். என்பது என் கருத்து .
Rate this:
Share this comment
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
17-அக்-201814:44:26 IST Report Abuse
பிரபு வாக்கு சீட்டு முறையை கொண்டுவாங்க. வாக்கு எண்ணுவதற்கு நான்கு நாள் ஆனாலும் பரவா இல்லை. நம்பிக்கை தான் முக்கியம்.
Rate this:
Share this comment
Cancel
Shroog - Mumbai ,இந்தியா
17-அக்-201812:17:36 IST Report Abuse
Shroog Many well developed countries are using manual voting tem. Why can't we?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X