சென்னை : அ.தி.மு.க.,வின், 47ம் ஆண்டு துவக்க விழா, நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில், கொண்டாடப்பட்டது. ஆனால், வழக்கத்தை விட, தொண்டர்கள் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது.
அ.தி.மு.க.,வின், 47ம் ஆண்டு துவக்க விழா, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, கட்சி தலைமை அலுவலகத்தில், நேற்று கொண்டாட பட்டது. அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், பழனிசாமி ஆகியோர், கட்சி அலுவலகத்தில் உள்ள, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., சிலைகளுக்கு, மாலை அணிவித்தனர். கட்சி கொடியேற்றி, தொண்டர்களுக்கு, சாக்லெட் வழங்கினர். விழாவில், அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க் கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தொண்டர்கள் குறைவு
கட்சி அலுவலகத்திற்கு, பொதுச்செயலராக இருந்த ஜெ., வந்தால், தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே, போலீசார் கெடுபிடியும் அதிகமாக இருக்கும். நேற்று, கட்சி
அலுவலகத்தில், தொண்டர்கள் மிக குறை வாகவே வந்திருந்தனர். தொண்டர்களைவிட, போலீசார் கூட்டம் அதிகமாக இருந்தது.காலை, 8:30 மணிக்கே, கட்சி அலுவலகம்
அமைந்துள்ள பகுதி வழியே, இரு சக்கர வாகனங்களைக்கூட, போலீசார்
அனுமதிக்கவில்லை. இதனால், தொண்டர்கள் கடும்எரிச்சலுக்குள்ளாகினர்.
இனிப்பு இல்லை
அ.தி.மு.க., கொடியேற்றியதும், அருகிலிருந்த பத்திரிகை போட்டோகிராபர்கள், வீடியோ கிராபர் கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர், சாக்லெட் வழங்கினர். மேடைக்கு கீழே இருந்தவர்களுக்கு, யாரும் இனிப்பு வழங்கவில்லை.வழக்கமாக கட்சி அலுவலகத்தில், லட்டு, பாதுஷா, மைசூர்பாகு வினியோகம் களை கட்டும். நேற்று, சாக்லெட் தவிர எதுவும் வழங்காத தால், வந்திருந்த மிக குறைந்த தொண்டர்களும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
'ரத்தத்தின் ரத்தமே' மொபைல் ஆப் துவக்கம்
அ.தி.மு.க., தகவல்தொழில்நுட்ப அணி முன்னாள் செயலர், அஸ்பயர் சுவாமிநாதன், 'ரத்தத்தின்
ரத்தமே' என்ற, 'மொபைல் ஆப்'பை உருவாக்கி உள்ளார். இதில், ரத்ததானம் செய்ய
விரும்புவோர், உலகில் எங்கிருந்தாலும், தங்கள் பெயர், ரத்த வகை, மொபைல்
போன் எண் உள்ளிட்ட விபரங் களை பதிவு செய்து கொள்ளலாம்.இதேபோல, ரத்த தானம்
பெற விரும்புவோர், தங்கள் பெயர், தேவை
படும் ரத்த வகை ஆகிய விபரங்களை, பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த, 10 நிமிடங்களில், 10 கி.மீ.,க்குள் இருக்கும் ரத்த கொடையாளர்களின், மொபைல் போன் எண், இருப்பிடம் உள்ளிட் விபரங்கள், அவர்களுக்கு சென்றடையும்.
ரத்தம் தேவைப்படுவோர், அருகில் இருக்கும் கொடையாளரிடம் பேசி, ரத்த தானம் பெற முடியும். ரத்த கொடையாளிகள் மற்றும் ரத்தம் தேவைப்படுவோருக்கு இடையே, இந்த மொபைல் ஆப், பாலமாக திகழும். இது முற்றிலும் இலவசம்.
இந்த மொபைல் ஆப், கூகுள் பிளே ஸ்டோரில், 'RR- Blood AIADMK' என்று தேடி, 'மொபைல் ஆப்'பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சென்னையில் நடந்த, அ.தி.மு.க.,வின், 47வது ஆண்டு துவக்க விழாவில், 'ரத்தத்தின் ரத்தமே' என்ற, 'மொபைல் ஆப்'பை, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (13)
Reply
Reply
Reply