கயிறு திரிக்கிறார் தமிழிசை: காங்.,| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கயிறு திரிக்கிறார் தமிழிசை: காங்.,

Added : அக் 18, 2018 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை,'பஞ்சாப் மாநில, காங்., அமைச்சர், நவ்ஜோத் சிங் சித்து, தமிழக மக்களுக்கு எதிராக பேசியதாக, தமிழிசை கயிறு திரித்திருக்கிறார்' என, தமிழக காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:நவ்ஜோத் சிங் சித்து, தமிழையும், தமிழகத்தையும் அவதுாறாக பேசியதாக கூறி, சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை, தமிழக, பா.ஜ., நடத்திஉள்ளது. நவ்ஜோத் சிங் சித்து பேசாததை, பேசியதாக திரித்து, தமிழக மக்களுக்கு எதிராக பேசியதாக, தமிழிசை கயிறு திரித்திருக்கிறார். எதுவுமே கிடைக்காத தமிழிசைக்கு, அவல் கிடைத்ததாக எண்ணி, மென்று வருகிறார். அவருக்கு, என் ஆழ்ந்த அனுதாபங்கள்.எதிலும் வெற்றி பெறாத, தமிழக, பா.ஜ., இதிலும் தோல்வியை தான் சந்திக்க போகிறது. எனவே, தேவையில்லாமல், காங்கிரஸ் கட்சியை, தமிழிசை சீண்டி பார்க்க வேண்டாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
18-அக்-201815:43:35 IST Report Abuse
Bhaskaran சிந்துவை கண்டித்து அறிக்கைவிடுவதற்கு வக்கில்லாத காங்கிரஸ் தலைவர் ரஜனிக்கட்சிக்கு மாறுவதற்குநேரம் பார்த்துக்கொண்டுள்ளதால் இதற்கெல்லாம் அவருக்கு நேரம் இல்லை
Rate this:
Share this comment
Cancel
Siva Rama Krishnanan - Mayur Vihar,இந்தியா
18-அக்-201813:03:44 IST Report Abuse
Siva Rama Krishnanan சித்து சொல்வதில். பஞ்சாபில் ஒரு பகுதி பாக்கிஸ்தானில் உள்ளது. அதனால் பாக்கிஸ்தானியர் உடலமைப்பு மொழி மற்றும் உணவு கலாச்சாரங்கள் பஞ்சாபிகளுடன் ஒத்து போகிறது. ஆனால் நமது மொழி கலாச்சாரம் உடலமைப்பு உணவு வகைகள் வட இந்தியருடன் ஒத்துபோவதில்லை
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
18-அக்-201806:08:30 IST Report Abuse
 Muruga Vel திருநாவுக்கரசர்.. ரஜினி கட்சிக்கு போகிறதா செய்தி வந்ததே ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X