பொது செய்தி

இந்தியா

கர்நாடகா அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு

Added : அக் 18, 2018 | கருத்துகள் (5)
Advertisement
கர்நாடகா அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு

பெங்களூரு : காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி நீர்திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 13,000 கனஅடியில் இருந்து 25,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவும் 12,000 கனஅடியில் இருந்து 27,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 10,042 கனஅடியில் இருந்து 23,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 103.37 அடியாகவும், நீர்இருப்பு 69.27 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்த டெல்டா பாசனத்திற்காக 13,000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-அக்-201810:01:13 IST Report Abuse
Srinivasan Kannaiya என்ன செய்யறது,.,, வீணாகத்தான் நீரை திறந்து விட போறோம்... நாம்தான் கோடைகாலத்தில் அணையை தூர் வாரி ஆழப்படுத்தி, கரையை செம்மை படுத்த மறந்து விட்டோமே...
Rate this:
Share this comment
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
18-அக்-201812:19:55 IST Report Abuse
 Muruga Velஓமன்ல ஒட்டகம் மேய்க்கிறதுக்கு இங்க வந்து தூர் வாரலாமே...
Rate this:
Share this comment
pattikkaattaan - Muscat,ஓமன்
18-அக்-201813:26:56 IST Report Abuse
pattikkaattaan வளைகுடா நாடுகளின் முன்னேற்றம் , சட்டம் ஒழுங்கு , நேர்மையான லஞ்சம் சிறிதும் இல்லாத ஆட்சிமுறை , மக்கள் எல்லாம் எளிதாக கிடைப்பது , உலகத்தரம் வாய்ந்த சாலைகள் என்று எத்தனையோ சொல்லலாம் ... முக்கியமாக இங்கு அரசியல்வாதிகள் கிடையாது .. எனவே கொள்ளை கிடையாது .. நம் ஆட்கள் நல்ல வேளையில் நேர்மையாக உழைத்து சம்பாதித்து , தாய் நாட்டிற்கு அனுப்பி அந்நிய செலாவணியையும் அதிகரிக்க உதவுகிறார்கள் ... இங்கு வேலை பெற, லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை திறமை போதும் .....
Rate this:
Share this comment
mindum vasantham - madurai,இந்தியா
18-அக்-201815:30:47 IST Report Abuse
mindum vasantham1 லக்ஷத்துக்கு மேல வதா தான் கடலில் கலக்கும், இந்த ஆண்டு நல்ல vivasayam தான்...
Rate this:
Share this comment
Cancel
Rajendran Selvaraj - Saint Louis, MO,யூ.எஸ்.ஏ
18-அக்-201809:04:35 IST Report Abuse
Rajendran Selvaraj நன்று
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X