ராமர் கோவில் கட்ட சட்டம்: மோகன் பாகவத் வலியுறுத்தல் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ராமர் கோவில் கட்ட சட்டம்:
மோகன் பாகவத் வலியுறுத்தல்

நாக்பூர், ''உ பி.,மாநிலம், அயோத்தியில், ராமர் பிறந்த இடத்தில், கோவில் கட்டுவதற்கு தேவையான சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தினார்.

ராமர் கோவில்,சட்டம்,மோகன் பாகவத், வலியுறுத்தல்


விஜயதசமியை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும், ஆர்.எஸ்.எஸ்., தலைவர், அதன் தலைமையகத்தில் உரை நிகழ்த்துவது வழக்கம். அதன்படி, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி அரசு அமைந்துள்ள மஹாராஷ்டிராவின், நாக்பூரில் உள்ள, ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில், அதன் தலைவர் மோகன் பாகவத்,உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

தனிமனித ஒழுக்கம் மற்றும் தர்மத்தின் உருவமான ராமருக்கு, அவர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பது, கோடிக் கணக்கான நாட்டு மக்களின் விருப்பம்.அந்த விருப்பத்துக்கு, ஆர்.எஸ்.எஸ்., துணை நிற்கும். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டிய

அவசியம்.இது, நாட்டு மக்களிடையே நல்ல எண்ணத்தையும், ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தும்.


அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு, மத்திய அரசுசட்டம் இயற்ற வேண்டும்.நக்சல் பிரச்னை தேசவிரோத கொள்கை உடையதலைவர்களால், எதிரிகளால் ஆட்டுவிக்கப்படுபவர் களால்,நக்சலைட் அமைப்பு செயல்பட்டு வருகிறது. நாட்டு மக்களிடையே தவறான தகவல்களை பரப்புவது, வெறுப்புணர்வை ஏற்படுத்துவதே, இவர்களது குறிக்கோள்.

ஆட்சி அதிகாரப் பசியுடன், ஓட்டு அரசியலை நடத்தி வரும் சில கட்சிகள், இவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக, துாண்டி விடுகின்றன.நாடு முழுவதும், பிரிவினை, வன்முறை, வெறுப்புணர்வு களை உருவாக்கும் அளவுக்கு போராட்டங்களை நடத்த, இந்தக் கட்சிகள், நக்சல்களை துாண்டி விடுகின்றன. இதை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், ஒடுக்கவும், திடமான, தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சபரிமலை விவகாரம்சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பு, சமூகத்தில் பிரி வினையை ஏற்படுத்தும் வகையில் அமைந்து விட்டது. ஏன், ஹிந்து மதத்தின் குறியீடுகள், அதன் பாரம்பரியங்கள் மீது, தொடர்ந்து பல வகைகளில்

Advertisement

தாக்குதல் நடத்தப்படுகின்றன என தெரிய வில்லை.இயற்கை நியதி, பாரம்பரியம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் பெண்களே இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.எல்லை பாதுகாப்புநாட்டின் எல்லையில், அண்டை நாடுகளால் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது.

எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்துவதுடன், நம் படையினரை ஊக்குவிக்கும் நடவடிக்கை களும் தேவை. அத்துடன், அமைதி குறித்து அண்டை நாடுகளுடன் பேச வேண்டும். இதனுடன், உள்நாட்டு பாதுகாப்பையும் வலுப் படுத்த வேண்டும். ராணுவ தளவாடங்களை அதிக அளவில் இறக்குமதி செய்வதை குறைத்து, உள்நாட்டு உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shanu - Mumbai ,இந்தியா
19-அக்-201818:54:36 IST Report Abuse

Shanuஇந்தியாவின் பொருளாதாரம் பிரச்சினையிலிருந்து எழுந்து வருமா என்று கேள்வி குறியாகி இருக்கிறது. அமெரிக்கா இந்திய கரன்சியை , கரன்சி deciding லிஸ்டில் இருந்து விலக்கி வைப்பதாக இருக்கிறது . இப்போ ராமர் கோவில் ஒரு கேடா.

Rate this:
Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா
19-அக்-201816:30:27 IST Report Abuse

Rahim Ganiராமரின் சக்தி முழுவதும் பாஜாக வின் வளர்சிகாக பயன்படுத்தபட்டு வருகிறது ,பஜாக வின் ஓட்டு வங்கிதான் ராமர்,அவர் வலுகட்டாயமாக ஓட்டு வேட்டையாட பயன்படுத்தபடுகிறார் பாவம் அவர்......

Rate this:
19-அக்-201814:33:28 IST Report Abuse

ஆப்புஅடப் போங்கப்பா..உங்க சண்டையில் கடவுள் நம்பிக்கையே கரைஞ்சுரும் போலிருக்கு....

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X