பதிவு செய்த நாள் :
சர்ச்சையை ஏற்படுத்திய குலாம் நபி ஆசாத் பேச்சு

புதுடில்லி ; ''ஹிந்துக்கள் என்னை பிரசாரத்துக்கு அழைப்பதில்லை,'' என, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சை,பேச்சு,குலாம் நபி ஆசாத்


காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான, குலாம் நபி ஆசாத், உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் நடந்த, அலிகர் முஸ்லிம் பல்கலை முன்னாள் மாணவர் கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது: நான் இளைஞர் காங்கிரசில் இருந்ததில் இருந்து, கட்சிக்காக

நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகிறேன். ஒரு காலத்தில், பேச வரும்படி அழைப்பு விடுப்பதில், 95 சதவீதம் பேர் ஹிந்துக்க ளாக இருந்தனர்; 5 சதவீதம் பேர் தான்முஸ்லிமாக இருப்பர்.

ஆனால், தற்போது நிலைமை மாறி விட் டது; 95 சதவீதம், 20 சதவீதமாக குறைந்து விட்டது. என்னை பேச அழைத்தால், ஹிந்துக்களின் ஓட்டு பாதிக்கப்படும் என நினைக்கின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு, பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் செய்தித் தொடர்பாளர் சாம்பித் பத்ரா கூறிய தாவது:மூத்த தலைவரான குலாம் நபியின் பேச்சு கண்டனத்துக்குரியது.ஹிந்துக்களை அவமதிக்கும் வகையில், அவரது பேச்சு உள்ளது.

நாட்டில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத்துவம் குறைந்து விட்டது. அதனால் தான், அக்கட்சி தலை வர்களை, யாரும் பேசுவதற்கு அழைப்பதில்லை.

Advertisement

ஆனால், அதற்கு, ஹிந்து - முஸ்லிம் என்ற புதிய விபரீதமான விளக்கத்தை, ஆசாத் அளித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

'நான் பிரசாரத்துக்கு வந்தால், காங்கிரசுக்கு விழ வேண்டிய ஓட்டு குறைந்துவிடும்' என, அந்த கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், சமீபத்தில் கூறியிருந்தார்.தற்போது, மற்றொரு மூத்த தலைவரான ஆசாத், அது போன்ற ஒரு கருத்தை தெரிவித்து உள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.RAMIAH - RAIPUR,இந்தியா
20-அக்-201811:54:47 IST Report Abuse

D.RAMIAHஇவர் இப்படி பேசியதற்கு இவர் மீது கேட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் வாழ்க இந்தியா

Rate this:
S.Ganesan - Hosur,இந்தியா
19-அக்-201820:39:39 IST Report Abuse

S.Ganesanசதவீதம் எல்லாமும் சரி . தலைக்கணக்கு எவ்வளவு ? மொத்தம் அஞ்சு பேரில் ஒருத்தர் இருந்தாலும் அது 20% தானே அதைத்தான் சொல்லுகிறார் போலும். காங்கிரஸில் ஆதரவாளர்கள் கூட்டம் குறைந்து விட்டது என்பதைதான் இப்படி குறிப்பிடுகிறார் போலும் .

Rate this:
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
19-அக்-201820:16:02 IST Report Abuse

R KUMARஇப்போதே ஹிந்து-முஸ்லீம் வேறுபாட்டை ஆதாரமாக வைத்து காங்கிரஸ் தேர்தலுக்கு தயார் ஆகிவிட்டது. ஒருபக்கம் ராகுல் காந்தி காவி வேட்டி உடுத்திக்கொண்டு ஹிந்துக்களின் வோட்டை வேண்டி பயணம் ஆரம்பித்துவிட்டார். மறுபுறம் குலாம்நபி ஆசாத் முஸ்லிம்கள் மட்டுமே தன்னை தேர்தல் பணிக்கு கூப்பிடுகிறார்கள் என்று கூறிக்கொண்டு முஸ்லிம்களின் ஓட்டுகளை வேட்டையாட இப்போதே கிளம்பிவிட்டார். விரைவில் கிறிஸ்த்தவர்களின் ஓட்டுகளை வேட்டையாட காங்கிரஸிலிருந்து யாராவது ஒருவர் கிளம்புவார். வெளியில் "ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்றுமட்டும் முழங்குவார்கள்.

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X