பதிவு செய்த நாள் :
'எச்1பி' விசாவில் மாற்றம்:
இந்தியர்களுக்கு பாதிப்பு

வாஷிங்டன், அமெரிக்காவில், 'எச்-1பி' விசாவில் மேற்கொள்ளப்பட உள்ள மாற்றத் தால், இந்தியர்களுக்கும், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், பெரும் பாதிப்பு ஏற்படும் என, தகவல் வெளியாகி உள்ளது.

'எச்1பி' விசா, மாற்றம், இந்தியர்களுக்கு, பாதிப்பு


அமெரிக்க நிறுவனங்களில், இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினர் பணியாற்றுவதற்கு, அந்நாட்டு அரசால், 'எச்1பி' விசா வழங்கப்படுகிறது. பணியின் தன்மைக்கு ஏற்ப, இந்த விசா நீட்டிக் கப்படும் போது, அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். அமெரிக்காவில் பணி யாற்றும் வெளிநாட்டவர்களின் மனைவி அல்லது கணவன் மற்றும் 21 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், அமெரிக்கா வருவதற்கு, 'எச்-4' விசா வழங்கப்படுகிறது.

கடந்த, 2015ல், ஒபாமா, அமெரிக்க அதிபராக

இருந்த போது, 'எச்-1பி' விசா பெற்று, நிரந்தர குடி யுரிமைக்காக காத்திருப்போரின் மனைவி அல்லது கணவரும், அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரிய வும், வங்கிகளில் கணக்கு துவங்கவும் அனுமதி வழங்கப்பட்டது,அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப் பதவியேற்றதும், 'எச்1பி' விசா விதிமுறை கள் கடுமையாக்கப்பட்டன. மேலும், 'எச்௪' விசாவை ரத்து செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது.

விசா விதிகளை மறு பரிசீலனை செய்யவும், சட்ட வரைவு முன்மொழிவுக்கு, கணிசமான திருத்தங் கள் அவசியம் என்றும், அமெரிக்க குடியுரிமை துறை தீர்மானித்தது. இந்நிலையில், 'எச்1பி' விசா வில் செய்யப்படும் மாற்றங்கள், இந்தியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத்துறையை சேர்ந்த உயர் அதிகாரி, இது பற்றி கூறியதாவது: திறமை மிக்க வெளிநாட்டவர்கள், 'எச்1பி' விசா பெறும் வகையிலும், அமெரிக்க பணியாளர்கள் மற்றும்ஊதிய விகிதத்தை பாதுகாக்கும் வகை யிலும், 'எச்௧பி' விசாவுக்கான விதிமுறைகளில், மாற்றம் செய்யப்படும்.

வெளிநாட்டவர்களின் மனைவி அல்லது கணவன், 21 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு

Advertisement

வழங்கப்படும், எச்4விசாவை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள், அடுத்த ஆண்டு ஜனவரியில் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கூறினார். அமெரிக்கா வில் செயல்படும் இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் என, தெரியவந்துள்ளது.

மேலும், 'எச்4' விசா ரத்தால், அங்கு வசிக்கும், 70 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்களும், பெரும் பாதிப்புக்குள்ளாவர் என, தெரிய வந்துள்ளது.இதற்கிடையில், அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை கேட்டு, 6 லட்சம் இந்தியர்கள், மனு கொடுத்துள்ளனர். கடந்த ஆண்டு,60ஆயிரம் பேருக்கு மட்டுமேஅமெரிக்க அரசு, நிரந்தர குடியுரிமை வழங்கியுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Akash - Herndon,யூ.எஸ்.ஏ
20-அக்-201817:34:44 IST Report Abuse

AkashThe rel issue is because of unscrupulous and greedy Indian companies (all the big names are actually BODY SHOPPERS) . Due to poverty in India highly qualified Indians are prepared to work at below poverty level salaries in US. So these greedy companies take advantage of this and place these guys at atrocious salaries. Greedy capitalist US companies absorb them in truck loads. Obviously jobs of US citizens who were earning a decent salary was adversely affected. If ou pay 5 ollar for a 50 dollar job who benefits? The poor Indian worker who is helpless in India a country which cant offer him a decent life? Indian BODY SHOPPER? American capitalist CEO who earns millions of dollars via profits paying such wages? Regarding TN i agree brahmins were literally DRIVEN out of that place in to every nook and corner of the world...thanks to people like Karunanidhi

Rate this:
Manian - Chennai,இந்தியா
20-அக்-201801:05:38 IST Report Abuse

Manianஅடிப்படை தீமைகள் இந்தியாவில் இரெண்டே- ஆதிக்க ஜனத்தொகை, அதை கட்டுப்படுத்த யாரும் தயாரில்லை, 95 % லஞ்சப்ப பரவல், அதில் 70 -80 % லஞ்சம் கொடுப்பது-வாங்குவது அரி என்பவர்கள், ஓடடை விற்பவர்கள்- அதனாலே அமெரிக்காவை பாதி எழுதுவாஹே விட நாம் ஈன செய்தல் முன்னேறலாம் என்று பொதுவாக ஏன் யாரும் சொல்வதில்லை. மேலும் இங்கே கருது எழுதுபர்களின் புரிதல் இல்லாமை- இவர்களே எப்படி என்றால், கிராமத்து மக்கள் எப்படி புரிந்து கொள்வார்கள்.? சரியாத இங்கே இந்த H1B விசாவை பற்றி விமரிசனம் செய்பவர்களுக்கு: தவரான சிந்தனைகளையே இங்கே காண்கிறோம் - (1 ) டிரம்ப் வரி கொடுக்காமல் ஏமாற்றிய தன்னை காத்துக்கொள்ள மக்களின் கோபத்தை பயன் படுத்திக்கிறார். கருணா, வீரமணி, பெரியார் போன்றவர்களும் தலித்துக்களுக்காக பாடு பட வில்லை. 99 % தலித்துக்களின் வாழ்வு இன்றுவரை முன்னேறவே இல்லை. பிராமணர்களே எல்லா துன்பங்களுக்கும் காரணம் என்று மக்களை உசுப்பி விடு குடும்ப நலனுக்காக கொள்ளை அடித்தவர்கள். குடியால் ஏழைகளை கெடுத்தவர்கள். இன்றும் ஜாதீயம் ஏன் ஒழியவில்லை? லஞ்சவியாதிகளின் இருப்பிடமாகி கல்வியில் சிறந்த தமிழ் நாட்டை பாழக்கினார்கள் . 2 .5 கோடி திருடர்கள் கூட்டமே தமிழை நாட்டில் பரவி கிடக்கிறது. இன்று அதையே டிராப் இப்போது அமெரிக்காவிலும் செய்கிறார். அதன் பலன் இனிமேல்தான் தெரியும். (2 ) பிராமணர்கள், மேல் ஜாதியினர்தான் சமுதாய குறைகளுக்கு காரணம் என்றால், குறிப்பிடடஅவர்களை கண்டறிந்து களை எடுக்காமல், எல்லோரையுமே விரட்டி விட்டதால், - விதையையே தின்றது போல்- மிஞ்சியவரகளில் திறமையானவர்கள் யாருமே தமிழ் நாட்டில் இல்லை. பிழைக்க வேண்டி அமெரிக்க சென்று விட்டார்கள். முன் காலத்தில் வாணிபம் செய்ய செட்டியார்கள் கீழ் நாடு சென்றார்கள். அரசர்களும் அதை அனுமதித்தார்கள். அதுபோலவே இதுவும். (3) சில வியாதிகளை குணப்படுத்தும் போது, பக்க விளைவுகள் உண்டு. அமெரிக்கர்கள், இந்தியர்களை போலவே (படிப்பறிவு குறைவால்) சுதந்திரத்தின் அருமையை புரிந்து கொள்ளாததால் , திறமையான வெளியாட்கள் வராவிடடால், நீண்ட கால பொருளாதார முன்னேற்றத்தை இழக்குப் ஏற்படும் என்பதை புரிந்து கொள்ளவில்லை. அமெரிக்காவில் கல்லூரியில் சென்று படிக்க சுமார் 40 ,000 டாலர்கள் கடன் வாங்க வேண்டும். ஆகவே, கல்லூரி சென்று படடம் பெறுபவர்கள் குறைவே. தொழில் புரட்சி ஏற்பாடா காலத்தில், எல்லோருக்கும் அதிக சம்பளத்தில் உள்ளூரிலேயே வேலை கிடைத்தது. தற்போது அது இல்லாததால் அவர்கள் கோப படுகிறார்கள். மதவாதிகள் கல்வியில் புகுந்தத்தின் விளைவே அது. தொழில் துறைகளுக்கே தேவையான புதிய தொழில் கல்வி இல்லாமல், வேலை கிடைப்பது அங்கேயும் மிக மிக கடினம். இந்தியாவைப்போல அவர்களுக்கு எந்த ஓசிகளும் கிடையாது. "பேச்சு திறமை, எழுத்து திறமை, மேலாண்மை, குழுவில் இணந்து பணிசெய்தல்" அங்கேயும் கற்ப்பிக்க படுவதில்லை. அது இருந்தால் தற்போது கூட 120 ,000 டாலர் தரும் வேலைகள் உண்டு. அமெரிக்க சென்று இதுபோன்ற திறமைகளை வளர்த்துக்கொண்டவர்களையே (கூகுள் பிச்சை, மைக்ரோசாப்ட் நாதெள்ளா..) அமெரிக்கா வரவேற்கிறது. பல இந்தியர்கள் அதனாலேயே அங்கே முன்னேறுகிறார்கள். ஐ.ஐ.டி படிப்பு மட்டும் போறாது. எனவே, வெளிநாட்டார்கள் வருகை அங்கே அவசியம். கள்ளத்தோணி கந்தசாமிகளையே வெளியேற்ற முயற்சிக்கிறார்கள். (4 ) சிறப்பான தனி தன்மை வாய்ந்த முன்னோடி படிப்பு படித்தவர்களுக்கு அதேபோல இங்கே வேலை கிடையாது. அதற்கான படிப்புக்களும், பேராசிரியர்களும் கிடையாது. ஆசிரிய தொழிலை உடல் உழைப்பு தொழில் போல் பார்ப்பதால், லஞ்சவியாதிகளே பேராசிரியர்கள் ஆகிறார்கள். ஆகவே, எந்த ஐ.ஐ.டி காரன் வந்தாலும் இந்த லஞ்சவியர்களை மாற்றவே முடியாது. வீண் பொறாமையால், பன்முகத்ததன்மையோடு காரண்ங்களை ஆராயாமல், அதற்கு ஆக்கப் பூர்வமாக, அறிவுப்பூர்வமாகா வழி சொல்லாமல் அமெரிக்க சென்றவர்களை குறை கூறுபவர்கள் கிணற்றுத் தவளைகளாக கூவுவது கேவலமான செயலே. நாடடைத் திருத்த வழி காட்டுங்கள், சொல்லுங்கள்.

Rate this:
siriyaar - avinashi,இந்தியா
19-அக்-201813:22:30 IST Report Abuse

siriyaarBuy fuel from iran only for 1kg rice or wheat equal1kg crude oil. Let them sent back all indians from. america most people study from indian IIT go to develop american companies. Just for the 1 laks people benifit we can not make 100 crore people suffer.

Rate this:
Thirumoolar - chennai,இந்தியா
19-அக்-201820:05:47 IST Report Abuse

Thirumoolarநீங்க 100% சரியாக சொன்னிர்கள் ஆனால் அமெரிக்காவில் உள்ள நம் இந்தியர்கள் அங்கேயே இருக்க ஆசைப்படுகிறார்கள். IIT இல் படித்தவர்கள் ஏன் அரசியல்வாதி ஆகவில்லை ? ...

Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X