சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கொள்ளை அடிக்க 'பார்தி' தயார்:
வங்கிகள், நகைக்கடைகளுக்கு எச்சரிக்கை

வட மாநிலத்தை சேர்ந்த, 'பார்தி' இன கொள்ளையர்கள், தமிழகத்தில், முக்கிய நகரங்களில் உள்ள வங்கிகள் மற்றும் நகைக் கடைகளில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ள, 'பகீர்' தகவல் வெளியாகி உள்ளது.

கொள்ளை,பார்தி,தயார்,வங்கிகள், நகைக்கடைகளுக்கு எச்சரிக்கை


ஆயுதமேந்தி கொலை வெறியுடன் செயல் படும், இந்தக் கொள்ளை கும்பல், பல இடங்க ளில் கூடாரம் அமைத்து தங்கி உள்ளதாகவும், சேலம் - சென்னை விரைவு ரயிலில் கொள்ளை அடித்த வர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.இதனால், தமிழகம் முழுவதும் அங்குலம், அங்குலமாக கண் காணிக்க, போலீசார் முடிவு செய்துஉள்ளனர்.


சேலம் - சென்னை எழும்பூர், விரைவு ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு, 2016 ஆக., 9ல், மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த, 'பார்தி' இன கொள்ளையர்கள், 16 பேர், 5.78 கோடி ரூபாயை கொள்ளை அடித்து தப்பினர்.


இதுகுறித்து, விசாரித்து வரும், சி.பி.சி.ஐ.டி., போலீசார், பார்தி இன கொள்ளையர்களான,

தினேஷ், 38; ரோஹன், 29, ஆகியோரை, அக்., 12ல் கைது செய்தனர்.ரயில் கொள்ளையை நிகழ்த்திய, கொள்ளை கூட்ட தலைவன் மோஹர் சிங், ம. பி., சிறையில் உள்ளான். அவனை அழைத்து வர, சி.பி.சி.ஐ.டி., போலீசார், அம்மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.

ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு, பார்தி இனத்தவர்கள் நடத்திய கொள்ளை, தமிழகத்திற்குபுதியது என்பதால், அவர்கள் பற்றி துப்பு துலக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு, இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டு உள்ளது. இந்நிலையில், பார்தி இன கொள்ளையர்கள், சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட முக்கிய நரங்களில் உள்ள, வங்கி கள், நகைக்கடைகள், பெரிய வர்த்த நிறுவனங் களில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ள தகவல் தெரிய வந்துள்ளது.

இதற்காக, முக்கிய நகரங்களில், சாலையோரங்கள், ரயில் நிலையங்களை ஒட்டிய பகுதிகளில், பலுான், பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் போல, கூடாரம் அமைத்து, குடும்பத்தாருடன் தங்கி உள்ளதாக கூற படுகிறது.இவர்கள் கொள்ளை நேரத்தில், ஆயுத மேந்தி கொடூரமான செயல்களில் ஈடுபடுபவர்கள் என்பதும், ரயில் கொள்ளையில் சிக்கிய இருவர் அளித்த வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளது.

இதனால்,உஷாரான போலீசார், ரயிலில் நடந்த கொள்ளை போல, வேறு ஏதும் அசம்பாவிதங் கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக, முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். முதற் கட்டமாக, சாலை ஓரங்கள், ரயில் நிலையங்களை ஒட்டியுள்ள பகுதிகளில், கூடாரம் அமைத்து தங்கி

Advertisement

இருப்போரை, ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கூறிய தாவது: பார்தி இன கொள்ளையர்கள், மிகவும் கொடூரமானவர்கள். கொள்ளை அடிக்க செல்லும் போது, பயங்கர ஆயுதங்களுடன் செல்வர்போன இடத்தில்,நகை, பணம் கிடைக்க வில்லை என்றால், ஆத்திரத்தை தீர்க்க கொலையும் செய்வர். பிற மாநிலங்களில், இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடந்து உள்ளன.இதனால், வெளிமாநில கொள்ளையர் கள் குறித்து, மாநிலம் முழுவதும், அங்குலம், அங்குலமாக கண்காணிக்கப்பட உள்ளது.

எனவே, பல்வேறு பகுதிகளில் கூடாரங்கள் அமைத்து தங்கி உள்ள, வட மாநிலத்தினர் பற்றி சந்தேகம் எழுந்தால், பொதுமக்கள் உடன டியாக, போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GladsOn John - Manama,பஹ்ரைன்
20-அக்-201813:20:46 IST Report Abuse

GladsOn  JohnMAY BE JUNIORS TO AIADMK party They already looted everything but this juniors can loot left over

Rate this:
HSR - MUMBAI,இந்தியா
21-அக்-201809:46:56 IST Report Abuse

HSRAIADMK IS JUNIORS TO DMK NOW THEY ARE LOOTING ECHCHAI BIRIYANI AND PINJU PONA BAJJIS TOO.. THEY NEVER LEAVE ANYTHING TO OTHERS.. ...

Rate this:
S.P. Barucha - Pune,இந்தியா
20-அக்-201809:50:30 IST Report Abuse

S.P. Baruchaகாவல் துறையினர் வட மாநிலத்தை சேர்ந்த, 'பார்தி' இனத்தவர்கள் பற்றிய அங்க அடையாளத்தை சேகரிக்க வேண்டும், மக்களிடம் செய்திகள் பெற கம்ப்யூட்டரில் பதிவு செய்ய ஏற்பாடு செய்து தரவேண்டும்..

Rate this:
Anandan - chennai,இந்தியா
20-அக்-201807:05:04 IST Report Abuse

Anandanஇதை வைத்துதான் பிரதமர் வடநாட்டு இளைஞர்களை பெருமையா சொன்னாரா?

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X