Proposing religion tag for Lingayats a 'blunder', says Congress' Shivakumar | லிங்காயத் விவகாரத்தை கையில் எடுத்தது தவறு: காங். தலைவர் பேச்சால் சர்ச்சை| Dinamalar

லிங்காயத் விவகாரத்தை கையில் எடுத்தது தவறு: காங். தலைவர் பேச்சால் சர்ச்சை

Added : அக் 19, 2018 | கருத்துகள் (15)
லிங்காயத் , கர்நாடகா சட்டசபை தேர்தல், காங்கிரஸ் சிவக்குமார் , லிங்காயத் விவகாரம், 2019 லோக்சபா தேர்தல் , காங்கிரஸ் , 
Lingayat, Karnataka Assembly election, Congress Sivakumar, Lingayat issue, 2019 Lok Sabha election, Congress,

பெங்களூரு: லிங்காயத் பிரிவினரை தனி மதமாக அறிவித்து சட்டசபை தேர்தலை சந்தித்தது மிகப்பெரிய தவறு என கர்நாடகா காங். மூத்த தலைவர் சிவக்குமார் பரபரப்பு பேட்டியளித்தார்.

கர்நாடகாவில் லிங்காயத் பிரிவினரை வீர சைவர்கள் என்றும் அழைப்பது உண்டு. லிங்காயத் அமைப்பை தனி மதமாக அறிவிக்க கோரி, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் லிங்காயத் விவகாரம் சட்டசபை தேர்தலில் காங்.கிற்கு பலன் அளிக்கவில்லை.

இந்நிலையில் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காங். மூத்த தலைவர் சிவக்குமார் பேசியது, நடந்து முடிந்தசட்டசபை தேர்தலில் நாம் தோற்றதற்கு காரணம் லிங்காயத் விவகாரத்தை கையில் எடுத்ததுதான். மதத்தின் பெயரில் அரசியல் செய்ததை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் நமக்கு பாடம் கற்று தந்துவிட்டன. அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்.

இனி அந்த தவறை மீண்டும் செய்யாமல் 2019-ம் ஆண்டு பார்லி.லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றார்.சிவக்குமாரின் இந்த பேச்சு முதல்வர் குமாரசாமி அரசுக்கு மட்டுமின்றி காங்.கட்சிக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X