500 கோடி ரூபாய் நிதி திரட்டும் ஏர் இந்தியா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

500 கோடி ரூபாய் நிதி திரட்டும் ஏர் இந்தியா

Added : அக் 19, 2018 | கருத்துகள் (14)
Share
ஏர் இந்தியா நிதி, ஏர் இந்தியா, ஏர் இந்தியா கடன், மத்திய அரசு , ஏர் இந்தியா நிறுவனம், 
Air India Fund, Air India, Air India Credit, Central Government, Air India Company,

புதுடில்லி : ஏர் இந்தியா நிறுவனம், 500 கோடி ரூபாய் நிதியை திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம், 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிப்பதுடன், தற்போது செயல்பாட்டு மூலதனம் மற்றும் வட்டி கட்டுவதற்கே மிகவும் சிரமப்படுகிறது. இதையடுத்து, 500 கோடி ரூபாய் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளது. இந்த, 500 கோடி ரூபாய் நிதியை, வங்கிகளிடமிருந்து பெற உள்ளது.

மத்திய அரசு உத்தரவாதத்தின் அடிப்படையில், இந்த நிதியை திரட்டுகிறது, ஏர் இந்தியா நிறுவனம். அடுத்த வாரத்துக்குள்ளாக இந்த நிதி திரட்டும் பணி நிறைவு பெற்றுவிடும் என, உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: கடனில் சிக்கியுள்ள நிறுவனம், தற்போது திருப்பிச் செலுத்த வேண்டிய தொகைக்கான வட்டியை கட்டுவதற்கே மிகவும் சிரமப்படுகிறது. எனவே, 500 கோடி ரூபாய் நிதியை வங்கிகளிடமிருந்து பெற இருக்கிறோம். இதற்கான உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்குகிறது. இந்த கடன் ஓராண்டுக்கு மட்டும் தான். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், ரூ.2,131 கோடி நிதியுதவி வேண்டும் என மத்திய அரசிடம் ஏர் இந்தியா கோரிக்கை விட்ட நிலையல், தேசிய சிறுசேமிப்பு நிதியகத்தின் மூலம் ஏர் இந்தியாவுக்கு ரூ.1,000 கோடி மத்திய அரசு நிதியுதவி அளித்துள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X