பொது செய்தி

இந்தியா

'லவ் ஜிஹாத்' இல்லை; காதல் மட்டுமே உள்ளது: என்.ஐ.ஏ.,

Added : அக் 19, 2018 | கருத்துகள் (33)
Share
Advertisement
புதுடில்லி : 'கேரள மாநிலத்தில் நடந்த கலப்பு திருமணத்தில், காதல் மட்டுமே உள்ளது. அதில், 'லவ் ஜிஹாத்' இல்லை' என, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், அசோகன்; ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மகள், அகிலா, 25. இவர், மதம் மாறி, ஹாதியா என, பெயரை மாற்றி, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த, ஷபின் ஜஹான் என்பவரை திருமணம்
லவ் ஜிஹாத்,   கலப்பு திருமணம்,  தேசிய புலனாய்வு அமைப்பு , அகிலா, ஹாதியா, ஷபின் ஜஹான், அசோகன்,  கேரள உயர் நீதிமன்றம்,  ஹாதியா திருமணம், ஹாதியா விவகாரம், காதல்,என்.ஐ.ஏ.,
Love Jihad, Mixed Marriage, National Intelligence Agency, Akila, Hadiya, Shabin Jahan, Asokan, Kerala High Court, Hadiya Marriage, Hadiya affair, love, NIA,

புதுடில்லி : 'கேரள மாநிலத்தில் நடந்த கலப்பு திருமணத்தில், காதல் மட்டுமே உள்ளது. அதில், 'லவ் ஜிஹாத்' இல்லை' என, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், அசோகன்; ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மகள், அகிலா, 25. இவர், மதம் மாறி, ஹாதியா என, பெயரை மாற்றி, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த, ஷபின் ஜஹான் என்பவரை திருமணம் செய்தார். ஹாதியாவின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது தந்தை அசோகன், கேரள மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஹாதியா திருமணத்தை, 'லவ் ஜிஹாத்' எனக் கூறி, ரத்து செய்து, தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், ஹாதியா, மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், கேரள மாநில உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, ஹாதியா - ஷபீன் ஜஹான் ஆகியோர் சேர்ந்து வாழ, அனுமதி அளித்தது. இதையடுத்து, ஷபீன் ஜஹான் மீது, என்.ஐ.ஏ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரி ஒருவர் கூறியதாவது: கேரள மாநிலத்தில் நடந்த கலப்பு திருமணத்தில், காதல் மட்டுமே உள்ளது. இதில், 'லவ் ஜிஹாத்' இல்லை. ஹாதியா விவகாரம் போன்ற பல வழக்குகளை விசாரித்ததில், காதல் மட்டுமே இருப்பது தெரிய வந்தது. இதில், எந்தவொரு குற்றமும் காணப்படவில்லை. இருவரது சம்மதத்தின்படியே திருமணம் நடக்கிறது. இதில், எந்த தவறும் கிடையாது. இந்த ஜனநாயக நாட்டில், யார் யாரை வேண்டுமானாலும் காதல் செய்யலாம். அனைவருக்கும் சமமான உரிமை உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில், என்.ஐ.ஏ., எந்த அறிக்கையும் தாக்கல் செய்யாது என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
19-அக்-201818:34:34 IST Report Abuse
Endrum Indian காதல் என்றால் என்ன படுக்கை சுகமா?? உடல்பார்த்து பிரியப்படுதலா? அவன்/அவளிடம் இருக்கும் பணம் பார்த்து பிரியப்படுதலா?? காதல் என்றால் இது வரை காமமாகத்தான் இருக்கின்றது. காதலின் உயர்ந்த அர்த்தம் தியாகம் இதை என்று உணர்வர் இந்த கீழ்த்தர மக்கள். முஸ்லிம்கள் எதற்கு இந்து பெண்களை குறி பார்த்து காதல்??? செய்கின்றனர், அவர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் க்கு ஏமன், துருக்கி..... நாட்டுக்கு பாலியல் அடிமையாக அனுப்புவதற்கு. இதை அறியாமல் நானும் அயல்நாடு செல்லப் போகின்றேன் என்று செல்வது??அங்கு மாட்டிக்கொண்டு அங்கு விலாசம் தெரியாமல் அழிந்து போவது. இதை அறியாத இந்த அறிவு கெட்ட பெண்கள் இருக்கும் வரை இப்படித்தான் நடக்கும்.
Rate this:
Cancel
Shroog - Mumbai ,இந்தியா
19-அக்-201816:52:32 IST Report Abuse
Shroog லவ் வந்து விட்டது அதன் பிறகு கடவுளே தடுக்க முடியாது. இத்தனை வருடம் வளர்த்த பெண் பெற்றோர் சம்மதம் இல்லாமல் மதம் மாறுவது தாங்கி கொள்ள முடியாது. இங்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதியின் மகள், அவருக்கு பிடிக்காத மதம் ஜாதியிலிருந்து திருமணம் செய்தால் அவரால் ஒத்து கொள்ள முடியுமா? சில முஸ்லிம்களுக்கு இந்த செய்தி தவறாக தெரியாது. சொல்வதெல்லாம் உண்மை நிகட்சியில், ஒரு முஸ்லீம் பெண் இந்து மதத்திற்கு மாறி ஒரு இந்து பையனை திருமணம் செய்திருந்தாள். அந்த பெண்ணை விபச்சாரி என்றும் பல கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பலர் YouTube-யில் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அது தான் தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும். இந்த பெண் செய்தது சரி என்பவர்களின் பிள்ளைகள் இது போல் வேரு மதத்தில் திருமணம் செய்வார்கள். அது போல் இந்த செய்தியில் உள்ள இருவருக்கும் பிறக்கும் ஒரு பெண், கண்டிப்பாக இந்து மதத்திற்கு மாறுவாள். இது தான் உலக நடப்பு.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
19-அக்-201815:30:32 IST Report Abuse
மலரின் மகள் ஒரு பிரச்சினை. முதலில் அவர்களின் நோக்கம் எதோ ஒன்றாக இருந்திருக்கலாம். எதிர்ப்புகளும் பிரச்சினைகளும் வருவதை பார்த்து அதற்கு தகுங்காதபடி தங்களை தங்கள் நிலைப்பாட்டினை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி கொண்டே வந்திருக்கலாம். எந்த எண்ணம் முதலில் இருந்ததோ அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பின்வாங்கி பின்னாளில் நடந்த நிகழ்வுகள் அவர்களை மாற்றி காதல் திருமண வாழ்க்கை மேற்கொள்வோம் என்று மனமாற்றம் கொண்டிருக்கலாம். அவர்களின் ஒரு பெற்றோர் முதல் எண்ணம் எதுவோ அது வேண்டாம் என்றும் சமூக வாழ்க்கை மத வலக்கையை விட சிறந்தது என்று கூட எண்ணி முற்றி ழும் மாறி இருக்கலாம். தன்னை நம்பி தனக்காக வந்த ஒரு பெண்ணை அதுவும் கடைசிவரையில் தன்னை நம்பி தனக்காக எல்லா இடங்களிலும் காதல் தான் என்று சொன்ன பெண்ணை தவறான எண்ணம் கொண்டு விட வேண்டாம் என்று திருமண வாழ்வை சிறப்பிக்க எண்ணியிருக்கலாம் அவர்கள். அதற்கு தகுந்தவாறு தங்களை மாற்றி கொண்டிருக்கலாம். இனி விசாரணைகள் செய்தால் அதில் உண்மையான காதல் தான் தெரியும். இல்லற வாழ்வின் பிரச்சினைகள் வெடிக்காமல் இருந்தால் அனைத்தும் நலமாக இனிய இல்லறம் இருக்கும். பிரச்சினைகளில் இனி பெண் மிகவும் இறங்கி விட்டு கொடுக்க வேண்டிய நிலை. பிரச்சினைகளுக்கு மனா அமைதிக்கு இறை நம்பிக்கையுடன் தான் பிறந்த மாதத்து நம்பிக்கைகளை மேற்கொள்ளவே முடியாது. புகுந்த மதத்தின் நம்பிக்கிகள் எப்படி என்று தெரியாது அதுவோ பெண்ணுக்கு நலம் பயப்பதாக இருக்குமா என்ன அதுவும் அவளுக்கு தெரியாது. வாழ்வின் அடுத்த பக்கத்தை யாரும் யாருக்கும் சொல்லி தரவில்லை. ஊடகம் திரைகளில் இதை பார்க்கவும் முடியாது. எதற்கு வம்பு என்று பலர் அதை வெளி கொணர்வதில்லை. ஆங்கிலத்தில் வருகின்ற வெளிநாடுகளில் இருக்கின்ற சில நாவல்கள் இவர் போன்றோருக்கு கிடைக்க வாய்ப்பில்லை. மறுமுகம் தெரியாமல் வாழ கற்று கொள்ளவேண்டும். இனி அமைத்து கொண்ட வாழ்க்கையில் அமைதி கொள்ளவேண்டும் பெண்ணே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X