சபரிமலை விவகாரத்தில் அவதூறு; கேரள இளைஞர் வேலை இழந்தார்

Added : அக் 19, 2018 | கருத்துகள் (17)
Advertisement
 சபரிமலை விவகாரம்,  தீபக் பவித்திரம்,  சவுதி அரேபியா, லுலு ஹைப்பர்மார்க்கெட், தொழிலதிபர் யூசுப் அலி, Sabarimala affair, Kerala youth, Deepak Bavithiram, Lulu Hypermarket, industrialist Yousuf Ali, Saudi Arabia,கேரள இளைஞர், kerala,கேரளா,Sabarimala Verdict ,Sabarimala Case ,WomenEntry ,Sabarimalai temple ,சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ,சபரிமலை அய்யப்பன் கோவில், சபரிமலை ,ஐயப்பன் கோயில், பெண்கள் அனுமதி , சுப்ரீம் கோர்ட் ,Women , Sabarimala Temple  ,Sabarimala Ayyappan Temple , Women Permission , Supreme Court

திருவனந்தபுரம் : சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வது தொடர்பாக, சமூக வலைதளத்தில் அவதுாறாக கருத்து தெரிவித்த, கேரளாவைச் சேர்ந்தவர், வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.

'கேரளாவில் உள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்கள் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. தற்போது, மாதாந்திர பூஜைகளுக்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், வளைகுடா நாடான சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் பணியாற்றி வரும் கேரளாவைச் சேர்ந்த, தீபக் பவித்திரம் என்ற இளைஞர், சமூக வலைதளத்தில் ஒரு கருத்து பதிவிட்டிருந்தார். சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்வது குறித்து, அவதூறாக அவர் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அவரை வேலையில் இருந்து நீக்குவதாக, 'லுலு ஹைப்பர்மார்க்கெட்' என்ற வணிக வளாகங்களை நடத்தும் நிறுவனம் அறிவித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் யூசுப் அலி, இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்.கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, கிண்டல் செய்யும் வகையில், சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட ஊழியரை, இந்த நிறுவனம் ஏற்கனவே வேலையில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
19-அக்-201818:05:16 IST Report Abuse
Endrum Indian இதிலிருந்து என்ன தெரிகின்றது இப்பொழுது நாயாய் பேயாய் ஆ ஊ என்று கத்தி அலைகின்றார்களே அந்த பூரண சுதந்திரம் இந்தியா தவிர எந்த நாட்டிலும் இல்லை என்று தெளிவாகத்தெரிகின்றது. தீபக் பவித்திரம் சொன்னது என்ன என்று ஒரு வார்த்தை இல்லை, கூறத்தகாத என்றால் என்ன???யார் அதை முடிவு செய்வது. அவன் சொன்னது பிடிக்கவில்லையா? அவனை எப்படியாவது பணியில் இருந்து நீக்கி இன்னொரு முஸ்லிமை அந்த பணிக்கு கொண்டு வரவேண்டும் அதற்கு இப்படி ஒரு சால்ஜாப்பா??
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-அக்-201817:42:07 IST Report Abuse
J.V. Iyer சரியான தீர்ப்பு. இப்படி ஒவ்வொரு நிறுவனம் நடவடிக்கை எடுத்ததால் நாட்டில் அமைதி நிலவும். வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
19-அக்-201812:06:04 IST Report Abuse
Ramamoorthy P சபரிமலை விவகாரத்தை கடவுள் நம்பிக்கையற்ற கேரளா அரசு அரசியலாக்கி வருவதை கண்டித்திருக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X