பொது செய்தி

இந்தியா

சபரிமலை சன்னிதானத்தை நெருங்கிய 2 பெண்கள்

Updated : அக் 19, 2018 | Added : அக் 19, 2018 | கருத்துகள் (31)
Advertisement
சபரிமலை, சன்னிதானம், பெண் பத்திரிக்கையாளர், பெண் பத்திரிக்கையாளர் கவிதா ,சபரிமலை போராட்டம் ,Sabarimala, women journalist, women journalist Kavitha, Sabarimalai protest,
Sabarimala Verdict ,Sabarimala Case ,WomenEntry ,Sabarimalai temple ,சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ,சபரிமலை அய்யப்பன் கோவில், சபரிமலை ,ஐயப்பன் கோயில், பெண்கள் அனுமதி , சுப்ரீம் கோர்ட் ,Women , Sabarimala Temple  ,Sabarimala Ayyappan Temple , Women Permission , Supreme Court

சபரிமலை : சபரிமலையில் 3வது நாளாக இன்றும் (அக்.,19) பெண் ஒருவர் சன்னிதானம் நோக்கி சென்றுள்ளார். அவருடன் பெண் பக்தர் ஒருவரும் சென்று கொண்டிருக்கிறார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அக்.,17 ம் தேதி மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கிய பிறகு முதல் முறையாக நடைதிறக்கப்பட்டுள்ளதால், பெண் பலரும் ஐயப்பனை தரிக்க வரலாம் என கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் நடத்தப்பட்டது.

முதல் நாளில் ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவரும், கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சன்னிதானம் நோக்கி செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் பம்பைக்கு முன்பாக நிலக்கல் பகுதியிலேயே பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர். 2வது நாளான நேற்று (அக்.,18) நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் பெண் பத்திரிக்கையாளர் சுஹாசினி என்பவர் தனது வெளிநாட்டு நண்பரும் பம்பையை கடந்து, சன்னிதானம் செல்லும் வழியில் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்நிலையில் 3வது நாளான இன்று தெலுங்கானாவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் கவிதா என்பவர் செய்தி சேகரிப்பதற்காக சன்னிதானம் நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அவருடன் கொச்சியை சேர்ந்த இருமுடி கட்டிய பெண் பக்தர் ஒருவரும் சென்று கொண்டிருக்கிறார். பாதுகாப்பு கவசங்கள் அணிந்த போலீசாரின் பலத்த பாதுகாப்புடன், 200 போலீசார் புடைசூழ அவர்கள் சன்னிதானம் நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.அவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண் பக்தர்கள் பலர் சன்னிதானம் செல்லும் வழியில் முழக்கங்கள் எழுப்பி, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சன்னிதானம் நோக்கி செல்லும் 2 பெண்களுக்கும் தலைகவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. சபரிமலை செல்லும் வழியில் பல இடங்களில் மழைப் பெய்து வருகிறது. இருப்பினும் சன்னிதானம் நோக்கி வரும் 2 பெண்களையும் தடுக்க போராட்டம் நடந்து வருகிறது. இதனால் சபரிமலையில் பதற்றம் நிலவுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
paran - Mohanjodaro,இந்தியா
19-அக்-201809:50:42 IST Report Abuse
paran உச்ச நீதிமன்ற தீர்ப்பை இன்றளவும் முழுமையாக சபரி மலை கோயில் நிர்வாகத்தினர் அமல் படுத்தவில்லை.. உச்ச நீதி மன்றம் மேலும் காலந்தாழ்த்தாமல் நீதி மன்ற அவமதிப்பு வழக்கை கோயில் நிர்வாகத்தின் மீது தொடரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
paran - Mohanjodaro,இந்தியா
19-அக்-201809:44:59 IST Report Abuse
paran இரண்டு பெண்கள் நுழைவின் ஆரம்பத்தை அடுத்து இனி பெண்கள் தொடர்ந்து ஐயப்பனை சேவித்து அருளைப்பெற கோயிலுக்குள் நுழைந்து கொண்டே இருப்பார்கள். அதை தடுப்பதற்கு எந்த சக்தியாலும் முடியாது.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-அக்-201809:44:07 IST Report Abuse
Pugazh V கம்யூனிஸ்ட் கட்சியின் சதிச் செயலா? எப்படி? அவர்களா வழக்கு போட்டார்கள் அல்லது அவர்களா தீர்ப்பு சொன்னார்கள் அலலது கம்யூனிஸ்ட் பெண்களா கோவிலுக்கு செல்ல முயற்சிக்கிறார்கள்? கோவிலுக்கு வரும் பெண்களை போகக் கூடாது என்று அரசே சொன்னால் அது நீதிமன்ற அவதூறு இல்லையா? ஏன் பெண்கள் வருகிறார்கள்? அது யாருடைய சதி என்று யோசியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X