சபரிமலை சன்னிதானத்தை நெருங்கிய 2 பெண்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சபரிமலை சன்னிதானத்தை நெருங்கிய 2 பெண்கள்

Updated : அக் 19, 2018 | Added : அக் 19, 2018 | கருத்துகள் (31)
சபரிமலை, சன்னிதானம், பெண் பத்திரிக்கையாளர், பெண் பத்திரிக்கையாளர் கவிதா ,சபரிமலை போராட்டம் ,Sabarimala, women journalist, women journalist Kavitha, Sabarimalai protest,
Sabarimala Verdict ,Sabarimala Case ,WomenEntry ,Sabarimalai temple ,சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ,சபரிமலை அய்யப்பன் கோவில், சபரிமலை ,ஐயப்பன் கோயில், பெண்கள் அனுமதி , சுப்ரீம் கோர்ட் ,Women , Sabarimala Temple  ,Sabarimala Ayyappan Temple , Women Permission , Supreme Court

சபரிமலை : சபரிமலையில் 3வது நாளாக இன்றும் (அக்.,19) பெண் ஒருவர் சன்னிதானம் நோக்கி சென்றுள்ளார். அவருடன் பெண் பக்தர் ஒருவரும் சென்று கொண்டிருக்கிறார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அக்.,17 ம் தேதி மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கிய பிறகு முதல் முறையாக நடைதிறக்கப்பட்டுள்ளதால், பெண் பலரும் ஐயப்பனை தரிக்க வரலாம் என கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் நடத்தப்பட்டது.

முதல் நாளில் ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவரும், கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சன்னிதானம் நோக்கி செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் பம்பைக்கு முன்பாக நிலக்கல் பகுதியிலேயே பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர். 2வது நாளான நேற்று (அக்.,18) நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் பெண் பத்திரிக்கையாளர் சுஹாசினி என்பவர் தனது வெளிநாட்டு நண்பரும் பம்பையை கடந்து, சன்னிதானம் செல்லும் வழியில் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்நிலையில் 3வது நாளான இன்று தெலுங்கானாவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் கவிதா என்பவர் செய்தி சேகரிப்பதற்காக சன்னிதானம் நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அவருடன் கொச்சியை சேர்ந்த இருமுடி கட்டிய பெண் பக்தர் ஒருவரும் சென்று கொண்டிருக்கிறார். பாதுகாப்பு கவசங்கள் அணிந்த போலீசாரின் பலத்த பாதுகாப்புடன், 200 போலீசார் புடைசூழ அவர்கள் சன்னிதானம் நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.அவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண் பக்தர்கள் பலர் சன்னிதானம் செல்லும் வழியில் முழக்கங்கள் எழுப்பி, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சன்னிதானம் நோக்கி செல்லும் 2 பெண்களுக்கும் தலைகவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. சபரிமலை செல்லும் வழியில் பல இடங்களில் மழைப் பெய்து வருகிறது. இருப்பினும் சன்னிதானம் நோக்கி வரும் 2 பெண்களையும் தடுக்க போராட்டம் நடந்து வருகிறது. இதனால் சபரிமலையில் பதற்றம் நிலவுகிறது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X