பொது செய்தி

இந்தியா

சாய்பாபா 100வது சமாதி தினம்: ஷீரடி சென்றார் மோடி

Updated : அக் 19, 2018 | Added : அக் 19, 2018 | கருத்துகள் (10)
Advertisement
ஷீரடி சாய்பாபா, மகா சமாதி தினம், பிரதமர் மோடி, ஷீரடி சாய்பாபா கோயில்,  பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமீன் ,   சாய் தர்ஷன் கட்டிடம், 
Shirdi Sai Baba, Maha Samadhi Day, Prime Minister Modi, Shirdi Sai Baba Temple, Prime Minister Aawas Yojana Grameen, Sai Darshan Building,

புதுடில்லி : சாய்பாபாவின் 100 வது சமாதி தினத்தை முன்னிட்டு வழிபாடு நடத்துவதற்காக பிரதமர் மோடி இன்று (அக்.,19) ஷீரடி சென்றார்.

1918 ம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று சாய்பாபா சமாதி நிலையை அடைந்தார். இதன் 100 வது ஆண்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு நாளான இன்று, பிரதமர் மோடி ஷீரடி சாய்பாபா கோயிலில் வழிபாடு நடத்தினார். சாய்பாபா டிரஸ்ட் சார்பில் ரூ.475 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.

மேலும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமீன் திட்டத்தின் பயனடைந்த பயணாளிகளுக்கு வீடுகளுக்கான சாவிகளையும் வழங்க உள்ளார். தொடர்ந்து அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்திலும் மோடி உரையாற்ற உள்ளார்.

சாய் தர்ஷன் கட்டிடம் 18,000 க்கும் அதிகமான பக்தர்கள் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாய்பாபா டிரஸ்ட் சார்பில் சாய் பாபாவின் மகா சமாதி தின நூற்றாண்டு விழா 2017 ம் ஆண்டு அக்.,1 முதல் 2018 ம் ஆண்டு அக்., 18 வரை கொண்டாடப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,இந்தியா
19-அக்-201817:48:56 IST Report Abuse
sahayadhas 2022 ல் இல்லாதவர்கு வீடு உழைப்பாளிக்கு வேண்டாமா? வீடு கொடுக்கும் போது line la வந்து நிக்காத
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
19-அக்-201815:39:55 IST Report Abuse
Siva ஓம் சாய் ராம்... ஓசி சோத்துக்காக அலையாமல் உழைத்து உண்டு வாழ எங்களை ஆசிர்வாதம் செய்வீர்...
Rate this:
Share this comment
Basic Instinct - Coimbatore,இந்தியா
19-அக்-201819:18:50 IST Report Abuse
Basic Instinctமஹான் அவர்கள் ப்ரஹ்மச்சாரி ஆவார். கட்டாயமாக மழை, வெயில் என்று பாராமல் உடலை வருத்தி உழைப்பவர்களுக்கு எல்லாம் அருள் புரிவார்....
Rate this:
Share this comment
Cancel
sahayadhas - chennai,இந்தியா
19-அக்-201814:07:33 IST Report Abuse
sahayadhas பாபா இந்திய மக்களுக்கு 15 லட்சம் கொடுப்பேன் என்று சொல்லி ஏமாற்றி விட்டேன் என்னை மன்னித்து ஆசி வழங்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X