தஞ்சாவூர், “பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., அரசு, சர்க்கஸ் கூடாரமாக திகழுகிறது,'' என, தி.மு.க., தலைவர்,ஸ்டாலின் பேசினார்.
தஞ்சையில் நேற்று நடந்த, கட்சி நிர்வாகி திருமண விழாவில், அவர் பேசியதாவது: தி.மு.க., குடும்பமாக இருந்து, செயல்படுகிறது. தி.மு.க., குடும்பத்தைப் பார்த்து, எத்தனையோ தலைவர்கள் ஏளனமாக பேசினர். அவர்களின் நிலை என்ன ஆனது என, அனைவருக்கும்
தெரியும். இப்போது முதல்வராக இருக்கும், எடுபிடி பழனிசாமி, ஜெயலலிதா மறைந்ததாலும், சசிகலா சிறை சென்றதாலும், அதிர்ஷ்டத்தில் முதல்வர் ஆனவர்.
அப்படிபட்ட பழனிசாமி, தி.மு.க.,வை, கம்பெனி என,விமர்சிக்கிறார்.இதை நான் ஏற்றுகொள்கிறேன்.
கம்பெனி என்றால் அதற்கு ஒரு அந்தஸ்து உண்டு; பங்கு தாரர்கள் இருக்கின்றனர். ஆனால்,பழனிசாமி சர்க்கஸ் கூடாரம் நடத்துகிறார். அதற்கான,'ரிங் மாஸ்டர்' டில்லியில் இருக்கிறார்.
இந்த எடுபிடி ஆட்சியை, 'ரிங் மாஸ்டர்' மோடி, இயக்கி வருகிறார். பல்வேறு விலங்குகள், போட்டி கள் என, சர்க்கஸ் நிகழ்ச்சி
நடக்கும். அதில், இடை யிடையே வரும்,'பபூன்' மக்களை சிரிக்க வைப்பார். அந்த
பபூன் போலவே செயல்படுகிறார், பழனிசாமி. இதை ஆட்சி என, சொல்லக் கூடாது; கொள்ளை
அடிக்கிற கூடாரம் என்று தான் சொல்ல வேண்டும்.
விரைவில் தேர்தல் வர இருக்கிறது. லோக்சபா தேர்தல் வருகிறதா, இல்லை, அதனுடன் சட்ட சபை தேர்தலும் சேர்ந்து வருகிறதா என, காத்து இருப்பதோடு, அதற்காக,தேர்தல் நிதியும் வசூலிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (50)
Reply
Reply
Reply