பதிவு செய்த நாள் :
ரூ.50 கோடி, மோசடி, ரயில்வே, நீதிபதி,'சஸ்பெண்ட்!'

புதுடில்லி:ரயில் விபத்துகளில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு அளிப்பது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும், தீர்ப்பாய நீதிபதி, ஆர்.கே.மிட்டலை, 'சஸ்பெண்ட்' செய்ய, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் அனுமதி அளித்துள்ளார். இழப்பீடு வழங்குவதில், 50 கோடி ரூபாய் முறைகேடு செய்ததால், அவருக்கு எதிராக, இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.ரயில் விபத்துகளில் சிக்கி உயிரிழப்போர் அல்லது காயம் அடைவோர் தொடர்பான வழக்குகளை, ஆர்.சி.டி., எனப்படும், ரயில்வே தீர்ப்பாயம் விசாரித்து, இழப்பீடுகளை அளித்து வருகிறது.

அம்பலம்


இந்த தீர்ப்பாயத்தின் நீதிபதியான, ஆர்.கே.மிட்டல், இந்தாண்டு துவக்கத்தில், ஜார்க்கண்ட் மாநில
தீர்ப்பாயத்தில் பணியாற்றினார். அப்போது, குறிப்பிட்ட சில வழக்கறிஞர்களுடன் கூட்டு சேர்ந்து,

இழப்பீடுகளை முறைகேடாக அளித்து வந்ததாக புகார் எழுந்தது.இது தொடர்பாக, ரயில்வே துறை நடத்திய முதல்கட்ட விசாரணையில், 50 கோடி ரூபாய் மதிப்பில் ஊழல் நடந்துள்ளது அம்பலம் ஆனது.
விபத்துகளில் இறந்ததாக, போலியாக சித்தரிக்கப்பட்ட நபர்களின் பெயர்களில், நஷ்ட ஈடுகள் வழங்கப்பட்டு வந்து உள்ளன.பல சந்தர்ப்பங்களில், ஒரே விபத்து சம்பவம், மீண்டும் பல முறை குறிப்பிடப்பட்டிருந்ததும், ஏற்கனவே நஷ்ட ஈடு வழங்கப்பட்ட நபர்களின் பெயர்களில், மீண்டும் பல முறை நஷ்ட ஈடு வழங்கப்பட்டதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது.போலி வழக்குகளில் ஆஜரான

வழக்கறிஞர்களுக்கும், பெருந்தொகை சென்று உள்ளது கண்டுபிடிக்க பட்டு உள்ளது.

முதல் முறை


இந்த விவகாரம் தொடர்பாக, நிலுவையில் உள்ள வழக்கை, உச்ச நீதிமன்ற நீதிபதி, யு.யு.லலித், தற்போது விசாரித்து வருகிறார். இந்நிலையில், நீதிபதி,ஆர்.கே.மிட்டலை, 'சஸ்பெண்ட்' செய்வதற்கான ஒப்புதலை, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் அளித்து உள்ளதாக, உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஊழல் விவகாரம் தொடர்பாக, ரயில்வே தீர்ப்பாய நீதிபதி, 'சஸ்பெண்ட்'

செய்யப்படுவது, இதுவே முதல்முறை.

கடந்து வந்த பாதை!


ஆர்.சி.டி., எனப்படும், ரயில்வே தீர்ப்பாயத்தின் தலைவர், கே.கண்ணன், நீதிபதி மிட்டலின் முறைகேடுகள் குறித்து, சில மாதங்களுக்கு முன், ரயில்வே வாரியத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், மிட்டலை சஸ்பெண்ட் செய்யும்படி கூறியிருந்தார்.அதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் இருந்து, கேரள மாநிலம், திருவனந்தபுரத்திற்கு, மிட்டல் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
'உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதல் இன்றி, தீர்ப்பாயத்தின் தற்போதைய நீதிபதியை, சஸ்பெண்ட் செய்ய முடியாது' என, ரயில்வே வாரியம் கருதியது. எனவே, மிட்டல் சம்பந்தப்பட்ட கோப்பு, தலைமை நீதிபதியின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, மிட்டலை சஸ்பெண்ட் செய்ய, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், தற்போது
ஒப்புதல் அளித்துள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-அக்-201822:39:30 IST Report Abuse

Partha Mannaiபுகழ் நீங்கள் தமிழ் அல்லது மலையாளம். உங்கள் ஒரே காலில் நிற்க பழகுங்கள்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-அக்-201819:58:21 IST Report Abuse

Pugazh Vதிரவிய இனத்திலல்லாத ஒருவர் கோடிகளில் மோசடி பண்ணியிருக்கார். அதைக்கண்டிக்க துப்பில்ல வக்கில்ல திராணியில்ல. என்னை திமுக அடிமை என்று போது படுமடத்தனமாக எழுதுவதற்கு பெயர் அரசியல் விவாதம் பதிலடி என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். இதுவே இந்த ஆள் நம் மாநிலத்தவராக இருப்பின், திஹாரில் போடு, களி தின்னட்டும் என்று குமுறுவார்கள். ஆனால் இவர் வட இந்தியராச்சே. செவப்பா வேற இருக்கார். எப்படி திஹாரில் போடு களி குடு என்று எழுதுவது? இதிலிருந்தே தெரிகிறதா யார் எதுக்கு/ யாருக்கு அடிமை?? நல்லா யோசனை பண்ணிப் பாருங்க... ஆங்..அது.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-அக்-201819:47:40 IST Report Abuse

Pugazh Vஇந்த மோசடி நீதிபதி FC இல்லையா , சென்னை crap? Sorry. எல்லா மத்திய அரசுத்துறை களிலும் 27% OBC, 18% SC and ST 5 % போக மீதி 50% இடங்கள் FC கேண்டிடேட்ஸ் களுக்குத் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டவை.

Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X