பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
உக்கிரமடையும் போராட்டம்
சபரிமலை படியேற வந்த பெண்களுக்கு, 'கல்தா'
மூன்று மாநில அரசுகளுக்கு உள்துறை எச்சரிக்கை

சபரிமலை:'சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம்' என, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருவதை அடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படி, கேரளா, தமிழகம், கர்நாடக மாநிலங்களின் அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சபரிமலையில் நேற்று, 18 படியேற வந்த மூன்று பெண்கள், பக்தர்களின் உக்கிரமான போராட்டத்தால், திருப்பி அனுப்பப்பட்டனர்.

 சபரிமலை,  போராட்டம்,  உள்துறை எச்சரிக்கை


கேரளாவில், பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.இங்கு, கடவுள் அய்யப்பன், பிரம்மச்சாரி கோலத்தில் இருப்பதால், இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.


இந்நிலையில், 'சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம்' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.இதை அமல்படுத்தும் முயற்சியில், மாநில அரசு ஈடுபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளா முழுவதும் நடந்த போராட்டம், சபரிமலை நடை திறப்பு நாளான, அக்., 17-ம் தேதியிலிருந்து, நிலக்கல் முதல், பம்பை வரை பரவியது.
ஏராளமான போராட்டக்காரர்கள் ஆங்காங்கே குவிந்தனர். பல முறை தடியடி நடத்தியும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


ஆனால், வனப் பகுதிக்குள் பதுங்கிய போராட்டக்காரர்கள், பெண்கள் வந்தால், அவர்களை தடுத்து, திருப்பி அனுப்பினர்.நேற்று முன்தினம் இரவு, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த, மோஜோ என்ற, தனியார்,'டிவி' சேனலின், பெண் நிருபர், கவிதா ஜெக்காலா, 24, கேரள மாநிலம்,
எர்ணாகுளத்தை சேர்ந்த, ரஹானா பாத்திமா, 31, ஆகியோர், பம்பை வந்தனர்.அவர்கள், சன்னிதானம் செல்ல, போலீசாரிடம் பாதுகாப்பு கேட்டனர். 'இரவு செல்வது சிரமம்; அடுத்த நாள் காலை
செல்லலாம்' என, போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, நேற்று அதிகாலை இருவரும் புறப்பட்டனர். பாதுகாப்புக்காக, 150 போலீசார் உடன் சென்றனர். கவிதாவுக்கு போலீஸ் ஹெல்ெமட், பாதுகாப்பு கவச உடை, ரஹானா பாத்திமாவுக்கு ஹெல்மெட் அணிவிக்கப்பட்டது. காலை 9:15 மணிக்கு சன்னிதானம் முன் வந்தபோது, பக்தர்கள் திரளாக கூடி, அவர்களை தடுத்தனர்.

போலீஸ், ஐ.ஜி., ஸ்ரீஜித், போராட்டக்காரர்க ளுடன் பேச்சு நடத்தினார். போராட்டக்காரர்கள் பணியவில்லை. மேல்சாந்தி, தந்திரியை தவிர, மற்ற உதவி அர்ச்சகர்கள் அனைவரும் வேலையை புறக்கணித்து,18 படி முன் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.அய்யப்பன் கோவிலின் பாதுகாவர்களாக கருதப்படும், பந்தளம் மன்னர் குடும்பத்தினர், தந்திரியை அழைத்து, பெண்கள் படியேறினால் கோவில் நடையை அடைக்கும் படி உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, ''பெண்கள் படியேறி வந்தால், கோவில் நடையை அடைத்து, மேலாளரிடம் சாவியை கொடுத்து விட்டு செல்வேன்,'' என, தந்திரி கண்டரரு ராஜீவரரு அறிவித்தார்.போராட்டம் நடத்தியவர்கள், முன்வரிசையில் குழந்தைகளை நிறுத்தியிருந் தனர். இதனால்,தடியடி போன்ற பலம் பிரயோகிக்க முடியாத நிலை, போலீசுக்கு ஏற்பட்டது.

இதற்கிடையே, 'சபரிமலைக்கு வரும் உண்மை யான பெண் பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.பக்தர்கள் போர்வையில், தங்களை

விளம்பரப்படுத்துவதற்காக வரும், சமூக ஆர்வலர்கள், 'டிவி' சேனலில் பணியாற்று வோருக்கு அனுமதி இல்லை' என, கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கவிதா, திரும்பி செல்வதாக கூறினார். ஆனால், ரஹானா பாத்திமா, 18 படியேறி, தரிசனம் செய்வதில் உறுதியாக இருந்தார்.

ஐ.ஜி., ஸ்ரீஜித், கெஞ்சுவதுபோல் நிலைமையை எடுத்துக் கூறியதால், ரஹானா பாத்திமாவும் திரும்பி செல்ல சம்மதித்தார். பின், பம்பை வரை பலத்த காவலுடன் அழைத்து செல்லப்பட்ட இரண்டு பெண்களும், போலீஸ் வேன்களில், அவர்களது ஊருக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
முன்னதாக கவிதா கூறுகையில், ''ஒன்றும் தெரியாத குழந்தைகளை முன்நிறுத்தி போராடிய தால், பிரச்னை வேண்டாம் என திரும்பி செல்கிறேன்,'' என்றார்.

''உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தது முதல், விரதம் இருந்து வந்தேன். வலுக்கட்டாயமாக திருப்பி அழைத்து செல்கின்றனர்,'' என, ரஹானா பாத்திமா கூறினார்.இரண்டு பெண்களும் திரும்பிச்சென்றதை தொடர்ந்து, சன்னிதானத்தில் நடந்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. சில மணி நேரம் கழித்து, பம்பைக்கு, திருவனந்தபுரம் கழக் கூட்டத்தை சேர்ந்த, மேரி ஸ்வீட்டி என்ற பெண், வந்தார்.காலையில் நடந்த சம்பவத்தை கூறி, 'பாதுகாப்பு வழங்க முடியாது' என, போலீசார் கூறியதால், அவர் திரும்பிச் சென்றார்.

இதுகுறித்து, தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்கூறியதாவது:பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கலாம். ஆனால், தங்களை பிரபலப்படுத்த வரும், சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்கும் இடம், சபரிமலை அல்ல. சபரிமலையை போராட்டக்களமாக்க அனுமதிக்க முடியாது.இவ்வாறு அவர்கூறினார்.

இந்நிலையில், கேரளா, தமிழகம், கர்நாடகா ஆகிய மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அனுப்பிய உத்தரவு கடித விபரம்:சபரி மலைக்கு பெண்களை அனுமதிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அய்யப்ப பக்தர் குழுக்கள், ஹிந்து அமைப்புகள், ஜாதி அமைப்புகள், கேரளாவில், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தி வருகின்றன.


இந்த போராட்டங்களில், கணிசமான பெண்களும் பங்கேற்றுள்ளனர்.அண்டை மாநிலங்களான தமிழகம், கர்நாடகாவிலும், ஹிந்து அமைப்புகள், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி உள்ளன.இதனால், பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. எனவே, சட்டம் -ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

அசம்பாவிதங்கள் நடக்காத வகையில், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
சமூக வலைதளங்கள் மூலம், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வதந்திகள் பரவாமல் தடுக்க, கவனத்துடன் செயல்பட வேண்டும்.தேவையான தடை உத்தரவுகளை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


முத்த போராட்டம் நடத்திய ரஹானாசபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு நேற்று செல்ல முயன்ற இரு பெண்களில் ஒருவர், ரஹானா பாத்திமா, 31. கேரள மாநிலம், எர்ணாகுளத்தில், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் பணியாற்றுகிறார்; இவர், விளம்பரங்களில் மாடலாக நடித்துள்ளார். பெண்ணியவாதி என்றும் கூறி வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன், கேரள பேராசிரியர் ஒருவர், பெண்களின் மார்பகத்தை தர்பூசணி பழங்களுடன் ஒப்பிட்டு, சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தன் மார்பகங்களை, தர்பூசணி பழங்களால் மூடியபடி, ரஹானா பாத்திமா, 'போஸ்' தந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ரஹானாவின் செயலுக்கு, சமூக வலைதளங்களில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

கேரளமாநிலம், திருச்சூரில், பாரம்பரியமாக நடக்கும் புலி ஆட்டத்தில், ஆண்கள் மட்டுமே

Advertisement

பங்கேற்பது வழக்கம். ஆனால், ரஹானா, புலி வேடம் தரித்து ஆடி,சர்ச்சையை ஏற்படுத்தினார். காதலர்கள் முத்தமிடுவதற்கு எதிராக, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படு வதை கண்டித்து, சில ஆண்டுகளுக்கு முன், பொது இடத்தில் முத்தமிடும் பிரசார நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், ரஹானா பங்கேற்று, முத்தமிட்டு, பரபரப்பை ஏற்படுத்தினார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்றதை அடுத்து, கொச்சியில் உள்ள, ரஹானாவின் வீட்டை, அடையாளம் தெரியாத சிலர், நேற்று சூறையாடினார்.

விளம்பரம் தேடுவதற்கு சபரிமலை தான் கிடைத்ததா?சபரிமலைக்கு நேற்று வந்த பெண்கள் பற்றி, அங்கு திரண்டிருந்த அய்யப்ப பக்தர்கள்
கூறியதாவது:சபரிமலை புண்ணிய பூமி. இங்கு, சர்ச்சைகளுக்கும், விளம்பரத்துக்கும் வேலையில்லை. சபரிமலைக்கு, நேற்று, மூன்று பெண்கள் வந்து திரும்பினர்.ஆனால், இதுவரை வந்த பெண்கள் அனைவரும் உண்மையான பக்தர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.விளம்பர நோக்கில் வந்தவர் களாக தெரிகிறது. இதை வைத்து பார்க்கும் போது, சபரிமலையை ஒரு விவாதபூமியாக்க சதி நடக்கிறதோ என அச்சம் எழுகிறது.

இதுபோன்ற விளம்பர விரும்பிகளால், எங்களைப் போன்ற உணர்வுப்பூர்வமான பக்தர்களின் மனம், வேதனை அடைகிறது. கேரளாவை ஆளும், இடதுசாரி அரசு, சுய விளம்பரம் தேடுவோரை, சபரிமலைக்கு செல்ல அனுமதிக்க கூடாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இருமுடிக்குள் கொய்யா பழம்ரஹானா பாத்திமா, 18 படியேற முடியாததால், இருமுடி கட்டை அங்கேயே விட்டுச் சென்றார்; பின், இந்த இருமுடி கட்டை, தேவசம்போர்டு ஊழியர்கள் பிரித்து பார்த்தனர். அதில், நெய் தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருட்கள் எதுவும் இல்லை.ஆரஞ்சு, கொய்யா பழங்கள் இருந்தன.

உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவுதிருவனந்தபுரத்தில், திருவாங்கூர் தேவசம் போர்டு கூட்டம் நேற்று நடந்தது. பின, அதன் தலைவர், பத்மகுமார் நிருபர்களிடம் கூறிய தாவது:உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய போவதில்லை. அதற்கு பதிலாக தற்போதைய நிலை பற்றி தேவசம்போர்டு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

இதற்கான பொறுப்பு, மூத்த வக்கீல், அபிஷேக் சிங்வியிடம் ஒப்படைக்கப்படும். எப்படி அறிக்கை தாக்கல் செய்வது என்பது பற்றி, அவர் உட்பட மூத்த வழக்கறிஞர்களுடன் ஆராயப்படும். உயர்நீதிமன்றத்திலும் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.சபரிமலை தொடர்பான வர்களை அழைத்து, பேச்சு நடத்த வேண்டும் என, முதல்வரை வலியுறுத்துவோம். பிரச்னையை அரசியலாக்க முயற்சி நடக்கிறது. அமைதி வேண்டி தான், பக்தர்கள் சபரிமலை வருகின்றனர். அதை கலவர பூமியாக மாற்ற நினைப்பதை அனுமதிக்க முடியாது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு, தேவசம்போர்டுக்கு உள்ளது. அதற்காக, எதையாவது சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சபரிமலைக்கு வருப வர்களை அனுமதிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


டி.ஜி.பி.,யைஅழைத்தார் கவர்னர்சபரிமலையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை தொடர்பாக, கேரள, டி.ஜி.பி., லோக்நாத் பெஹ்ராவை, கவர்னர், சதாசிவம் அழைத்து விசாரித்தார். நிலக்கல், பம்பை, சன்னிதானத்தில் உள்ள சூழ்நிலை, போலீஸ் நடவடிக்கை குறித்து, டி.ஜி.பி., விளக்கினார். ''சபரிமலையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கவும், சட்டம் - ஒழுங்கை காக்கவும், போலீஸ் கவனம் செலுத்த வேண்டும்,'' என, கவர்னர் சதாசிவம் உத்தரவிட்டார்.


Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
24-அக்-201803:12:29 IST Report Abuse

Manianஅரசியல் சாசன முறைகளில் மாற்றம் வேண்டும் என்றால், அது பொது ஜனங்கள் மூலம் வர வேண்டும் என்று தான் சுப்ரிம் கோர்ட்டு இந்த முடிவு செய்திருக்கலாமே இப்போது, மக்களின் விருப்பத்தால், சட்டப் பூர்வமாக எல்லோரும் சமம் என்றாலும் உள்ளூர் சம்பிரதாயங்கள் படி சில மாற்றங்கள் செய்யலாம் என்று கூறுவார்கள். முதல் தீர்ப்பு, பின் சமுதாய (பெரும்பாலான) எதிர்ப்பு, பின் இந்த தீர்ப்பில் திருத்தம்- இப்படி செய்வதால் பாலுக்கும் தோழன் பூனைக்கும் காவல் என்ற படி ஆகுமே. இதை புரிந்து கொள்ள நாம்கள இவ்வளவு காலம் ஆச்சா?

Rate this:
Raghu -  ( Posted via: Dinamalar Android App )
20-அக்-201821:01:24 IST Report Abuse

Raghuif it is tamilnadu temple, our police would have used force by shooting people to implement supreme Court order. Kerala and Karnataka need not obey or implement supreme court order.

Rate this:
Loganathaiyyan - Kolkata,இந்தியா
20-அக்-201817:55:57 IST Report Abuse

Loganathaiyyanஅவள் முஸ்லீம் என்பதால் அவளுக்கு அரேபிய முஸ்லீம் வரைவு தண்டனை அதாவது இரும்பு வாளால் தலை அறுக்கப்படவேண்டும்.

Rate this:
Manian - Chennai,இந்தியா
24-அக்-201806:19:38 IST Report Abuse

Manianமதம் மாறிய அவளை ஏன் அவர்கள் தண்டிக்கவில்லை? உள் நோக்கம் என்னவோ? ...

Rate this:
மேலும் 37 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X