பெங்களூரு:கர்நாடகாவில், மூன்று லோக்சபா, இரண்டு சட்டசபை தொகுதிகளில் இடைத் தேர்தல் நடந்தாலும், பல்லாரி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற, காங்., தலைமை தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக, அந்த தொகுதியில் மட்டும், 52 எம்.எல்.ஏ.,க் களை தேர்தல் பிரசாரத்தில் களம் இறக்கி யுள்ளது.
கர்நாடகாவில், அடுத்த மாதம், 3ல் நடக்கவுள்ள, லோக்சபா, சட்டசபை இடைத்தேர்தல், முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதசார்பற்ற ஜனதாதளம் - காங்., கூட்டணி அரசுக்கு கவுரவ பிரச்னையாக கருதப்படுகிறது.
'தேர்தல் நடக்கும், ஐந்து தொதிகளிலும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். ஒவ்வொரு, எம்.எல்.ஏ.,வும், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்' என, ம.ஜ.த., மற்றும் காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.இடைத்தேர்தல் முடியும்
வரை, எம்.எல்.ஏ., க்கள், தங்களுக்கு அளித்துள்ள பொறுப்புகளை, நிர்வகிப்பதுடன், சம்பந்தப்பட்ட தொகுதி களில்
முகாமிட்டு, தேர்தல் பிரசாரத்தை கவனிக்க வேண்டுமென, இரு கட்சி தலைவர்களும்
அறிவுறுத்தி உள்ளனர்.
மாண்டியா, ஷிவமொகா லோக்சபா தொகுதி; ராம்நகர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும், ம.ஜ.த., மாநில அமைச்சர்கள் மட்டுமின்றி, எம்.எல்.ஏ., க்களுக்கும் குறிப்பிட்ட பொறுப்பை அளித்துஉள்ளது.இதனால், தேர்தல் முடியும் வரை இதே தொகுதியில் அவர்கள் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதே போல், பல்லாரி லோக்சபா இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என, காங்கிரஸ் திட்டம் வகுத்துள்ளது.இத்தொகுதியில் பிரசாரம் செய்வதற்காக, காங்கிரசின், 52 எம்.எல்.ஏ.,க்கள் களம் இறக்கப்பட்டு உள்ளனர். பல்லாரி தேர்தல் பொறுப்பை ஏற்றுள்ள அமைச்சர் சிவகுமார், இந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு குறிப்பிட்ட பொறுப்புகளை பங்கிட்டு கொடுத்துள்ளார்.
இந்த லோக்சபா தொகுதிக்குட்பட்ட,எட்டு சட்ட சபை தொகுதிகளில் பிரசாரம் செய்ய, 52 எம்.எல். ஏ.,க்களை
நியமித்துள்ளதன் மூலம், அதிகளவில் பிரசாரம் செய்ய அக்கட்சி முடிவு
செய்துள்ளது. ஜமகண்டி சட்டசபை தொகுதி பொறுப்பு, முன்னாள் முதல்வர் சித்தராமையா விடம் ஒப்படைக்கப்
பட்டுள்ளது. அவரும் தனக்கு நெருக்கமான சில, எம்.எல். ஏ.,க்களுக்கு தேர்தல் பொறுப்பை கொடுத்து உள்ளார்.
பிரசாரம் மற்றும் சில பொறுப்புகளை ஏற்றுள்ள, எம்.எல்.ஏ.,க்கள், அந்தந்த தொகுதி தலைவர் களுடன் ஒருங்கிணைந்து, பிரசாரத்தில் ஈடு படவுள்ளனர்.இடைத்தேர்தலில், முதல்வர் குமாரசாமி, ம.ஜ.த., தேசிய தலைவர் தேவ கவுடா, ம.ஜ.த., மாநில தலைவர் விஸ்வ நாத், காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ், செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே உட்பட, இரு கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், ஐந்து தொகுதிகளிலும் ஒருங் கிணைந்து பிரசாரம் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (7)
Reply
Reply
Reply