பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை அடைப்பு

நிலக்கல்:சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதித்தால் பந்தள ராஜா குடும்பம், சன்னிதானத்தின் மேல்சாந்திகள் சார்பில் கோயிலின் நடையை அடைப்பதே கோயிலின் புனிதம் காக்கும் வழி. இதை உடனே மேற்கொள்ள வேண்டும்,''என தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் கூறினார்.

 சபரிமலை, ஐயப்பன், கோயிலில், நடை அடைப்பு


நிலக்கல் வந்த அவர் கூறியதாவது: நான், தேவசம்போர்டு தலைவராக இருந்தபோது சபரிமலையின் நெறிமுறைகள் மீறப்பட வில்லை. 10 வயதுக்கு உட்பட்ட 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர்.


தற்போது உச்சநீதிமன்றம் விதித்த தீர்ப்பு மத நம்பிக்கைக்கு எதிரானது. சபரிமலை ஐயப்பன் பிரம்சாரி கோலம் பூண்டவர். அவரை காண ஒரு மண்டலமான 48 நாட்கள் விரதம் இருந்து, இருமுடி சுமந்து, மலையேறி வருவது பெண் களின் உடலாலும், மனதாலும் இயலாதது. பெண்களை ஐயப்பன் ஆசிர்வதிக்க மாட்டார், என்பதில்லை. அதற்கென வயது வரம்புள்ளது. அதை பெண் பக்தர்கள் மதித்து நடந்து வருகிறார்கள்.


மத நம்பிக்கை மீதுஈடுபாடு அல்லாத பெண்கள்

சிலர் சபரிமலை விவகாரத்தில் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்பதற்காக திட்ட மிட்டே வருகின்றனர். அதைஐயப்பனும், உண்மையான பக்தர்களும் ஏற்று கொள்ள மாட்டார்கள்.

மறு சீராய்வு மனு

சபரிமலைக்கு அனைத்து பெண்களும் செல்ல அனுமதி வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அரசு தரப்பில் உடனே மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். இதனால் மட்டுமே தற்காலிக மாக போராட்டம் முடிவுக்கு வரும். அதுவரை இந்தாண்டு மண்டல, மகர விளக்கு பூஜைகளில் பெண்களை அனுமதிக்க கூடாது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதித்தால் பந்தள ராஜா குடும்பம், சன்னிதானத்தின் மேல்சாந்திகள் சார்பில் கோயிலின் நடையை அடைத்து கோயிலின் புனிதம் காக்க வேண்டும்.


இதை உடனே மேற்கொள்ள வேண்டும். பெண்களை போலீசார் பாதுகாப்புடன் சன்னிதானம் அழைத்து வருவது வேதனையளிக்கிறது. ஐயப்பன் கோயில் புனிதம் காக்க பெண்கள் வரவேண்டாம், என காலில் விழுந்து அறப்போராட்டம் நடத்தும் பக்தர்களை போலீசார் தாக்குவது கண்டிக்கத்தக்கது.நேற்று முன்தினம் நடந்த மாநில அளவிலான பந்த் முழு வெற்றி அடைந்துள்ளது. அறவழியில் போராட்டம் நடத்தும் பக்தர்களுக்கு போலீசார் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும், என்றார்.

உள்துறை அமைச்சகம் கடிதம்

இந்நிலையில், கேரளா, தமிழகம், கர்நாடகா ஆகிய மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அனுப்பிய உத்தரவு கடித விபரம்:சபரி மலைக்கு பெண்களை அனுமதிக்க,

Advertisement

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, ஐயப்ப பக்தர் குழுக்கள், ஹிந்துஅமைப்புகள், ஜாதி அமைப்புகள், கேரளாவில், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டங்களில், கணிசமான பெண்களும் பங்கேற்றுள்ளனர். அண்டை மாநிலங்களான தமிழகம், கர்நாடகாவிலும், ஹிந்து அமைப்புகள், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி உள்ளன.

இதனால், பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. எனவே, சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். அசம்பாவிதங்கள் நடக்காத வகையில், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். சமூக வலைதளங்கள் மூலம், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வதந்திகள் பரவாமல் தடுக்க, கவனத்துடன் செயல்பட வேண்டும். தேவையான தடை உத்தரவுகளை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
paran - Mohanjodaro,இந்தியா
22-அக்-201806:51:43 IST Report Abuse

paranசென்னை குமுதா ஐயப்பனை குலதெய்வம் என்றால் வீட்டுக்குள் கட்டி வழிபடவேண்டும். பொது இடத்தில் அதுவும் அரசுக்கு சொந்தமான புறம் போக்கு இடத்தில் கட்டி வைத்து வழிபடுவது கூடாது.

Rate this:
Ramachandran Madambakkam - Chennai,இந்தியா
21-அக்-201819:04:16 IST Report Abuse

Ramachandran  Madambakkamஎம் ஜி ஆர் உயிருடன் இருந்தவரை தி மு க தலை தூக்க முடியவில்லை. அம்மையாரின் ஊழலால் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. இப்போது ஏழு ஆண்டுகளாக ஒன்றும் செய்ய முடியவில்லை. இனி மேலும் வர முடியாது. நீதி மன்றங்களை விட மக்கள் மன்றமே ஊழலை பற்றி நல்ல முடிவை மேற்கொள்ள முடியும்.

Rate this:
Indian Videshi - Chennai,இந்தியா
20-அக்-201823:15:09 IST Report Abuse

Indian Videshiஇந்த உணர்ச்சியற்ற தீர்ப்பாய் வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிக்கு வழங்கிய அனைத்து நன்மைகள் அனைத்தையும் ரத்து செய்ய இந்திய ஜனாதிபதிக்கு மனு கொடுக்க வேண்டும். உச்சநீதிமன்றம் கேரள அரசாங்கத்தை மக்களின் கருத்தை கண்டுபிடிக்க கேட்டிருக்க வேண்டும்.

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X