பொது செய்தி

இந்தியா

செல்பி மோகத்தால் நடந்த அமிர்தசரஸ் ரயில் விபத்து

Added : அக் 20, 2018 | கருத்துகள் (28)
Share
Advertisement
அமிர்தசரஸ் : பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தசரா கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற ரயில் விபத்திற்கு செல்பி மோகமே காரணம் என சம்பவத்தை நேரில் பார்த்த பலரும் தெரிவித்துள்ளனர்.அமிர்தசரசில் தசரா கொண்டாட்டத்தின் போது ரயில் தண்டவாளத்தின் மீது நின்று கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக வந்த ரயில் மோதியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. 50 க்கும் மேற்பட்டோர்
Selfie, Amritsar, Train accident, செல்பி, அமிர்தசரஸ், ரயில் விபத்து, தசரா கொண்டாட்டம், பஞ்சாப், செல்பி மோகம், Dussehra celebration, Punjab,

அமிர்தசரஸ் : பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தசரா கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற ரயில் விபத்திற்கு செல்பி மோகமே காரணம் என சம்பவத்தை நேரில் பார்த்த பலரும் தெரிவித்துள்ளனர்.

அமிர்தசரசில் தசரா கொண்டாட்டத்தின் போது ரயில் தண்டவாளத்தின் மீது நின்று கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக வந்த ரயில் மோதியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. 50 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த கோர விபத்திற்கு காரணம், மக்களின் செல்பி மோகம் தான் என தெரிய வந்துள்ளது.

தசரா கொண்டாட்டத்தில் ராவணனின் உருவ பொம்பை எரிக்கப்பட்ட போது, ரயில் வருவதை கண்டு கொள்ளாமல் ஏராளமானோர் தண்டவாளத்தின் மீது நின்று அதனை தங்களின் மொபைல் போனில் படம்பிடித்துக் கொண்டிருந்தனர். ஏராளமானோர் செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். இவை விபத்து நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளில் பதிவாகி உள்ளது.

தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது ரயில் மோதி விட்டு சென்ற பிறகும் பலர் எவ்வித பதற்றமும் இன்றி தொடர்ந்து தங்களின் மொபைல் போன்களில் விபத்து நடந்த காட்சிகளை படம்பிடித்துக் கொண்டிருந்தனர். இதற்கு பலரும் கண்டனமும், வேதனையும் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ganesh - Chennai,இந்தியா
21-அக்-201810:59:15 IST Report Abuse
Jaya Ganesh சாவட்டும் ...அப்படி என்ன ராத்திரி நேரம் செல்ஃபீ வேண்டிக்கிடக்கு ?
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
20-அக்-201818:49:14 IST Report Abuse
Endrum Indian 1 ) ரயில் தண்டவாளத்தில் தான் போகும். 2 ) ரயில் சக்கரமும் தண்டவாளமும் இரும்பு ஆகவே பிரேக் போட்டாலும் வழுக்கி 1 கிலோமீட்டர் கழித்து தான் ஒரு வழியாக ரயில் நிற்கும். இவ்வளவு இருக்கும் போது ராவணனை எரிக்கும் போது அப்படி என்ன தண்டவாளத்தின் மீது நின்று பார்க்க வேண்டும். இதை பார்க்கும் போது அவர்களுக்கு 1 ) சுத்தமாக அறிவில்லை ஆகவே தான் அகம்பாவத்தினால் எல்லாம் ரயில் நம்மளை பார்த்தா நின்று விடும் முட்டாள்தனமான எண்ணம். 2 ) குடி போதையில் அல்லது பாங்க் எனப்படும் மருந்து அருந்தியிருப்பார்கள். 3) செல்பி எடுத்தார்களாம்??? அப்புறம் என்ன???இதுக்கு பணம் கொடுப்பார்களாம், அரசு வேலை கொடுப்பார்களாம்.??? அதாவது மூர்கத்தனமாக ஏதாவது செய்தாலும் அதிர்ஷடம் இருந்தால் பணம் கிடைக்கும், அரசு வேலை கிடைக்கும் என்பது இது தான். மரணம் என்பது ஒரு குடும்பத்திற்கு நிச்சயம் ஒரு சோகமான சமாச்சாரம் ஆனால் அதற்காக இவர்கள் செய்ததை ஒருக்காலும் சப்போர்ட் செய்யக்கூடாது.
Rate this:
Cancel
20-அக்-201818:23:24 IST Report Abuse
ஆப்பு அவ்வளவு இறுக்கமா டர்பன் கட்டியிருந்தா இடி இடிச்சாலும் காதுல விழாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X