பொது செய்தி

இந்தியா

அமிர்தசரஸ் விபத்து ஏன்? : ரயில்வே விளக்கம்

Updated : அக் 20, 2018 | Added : அக் 20, 2018 | கருத்துகள் (25)
Advertisement
Railways, Amritsar, Railway Accident,ரயில்வே, அமிர்தசரஸ், ரயில் விபத்து, தசரா கொண்டாட்டம், ஜோதா பதக் , பஞ்சாப் விபத்து , தசரா விழா, 
 Dussehra Celebration, Jodha Pathak, Punjab Accident, Dasara Festival,

புதுடில்லி : ரயில்வேயின் இடத்திற்குள் மக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு அனுமதி பெறாததே ரயில் விபத்திற்கு காரணம் என ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஜோதா பதக் பகுதியில் தசரா கொண்டாட்டத்தின் போது தண்டவாளத்தில் நின்ற மக்கள் மீது ரயில் மோதியதில் 61 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து டில்லியில் விளக்கம் அளித்துள்ள ரயில்வே அதிகாரிகள், ரயில் தண்டவாளத்தில் மக்கள் கூடி நிற்பது விதிமீறல் ஆகும். ரயில் பாதையை ஒட்டிய பகுதியில் நிகழ்ச்சி நடத்துவதற்காக எந்த அனுமதியும் பெறப்படவில்லை.

ரயில்வேக்கு சொந்தமான பகுதியில் நிகழ்ச்சி நடத்த அனுமதி பெறப்படாததும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததும் தான் இந்த விபத்திற்கு காரணம். இந்த விபத்தில் ரயில்வேயின் தவறு ஏதுமில்லை என விளக்கம் அளித்துள்ளனர்.


8 ரயில்கள் ரத்து

ரயில் விபத்தை அடுத்து அமிர்தசரஸ் - மனவாலா மார்க்கத்தில் செல்லும் 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 5 ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
சித்து ஆறுதல்

ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை காங்., எம்.பி., நவஜோத் சிங் சித்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது கவனக்குறைவால் நடந்த விபத்து. வேண்டுமென்றோ, உள்நோக்கத்துடனோ நடந்தது அல்ல என தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamil - coonoor,இந்தியா
20-அக்-201819:50:47 IST Report Abuse
tamil எல்லாம் முடிந்த பிறகு தான் திரைக்கதை வசனம் பாடல்கள் எல்லாம் எழுதுவார்கள்,
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்
20-அக்-201819:34:02 IST Report Abuse
Natarajan Ramasamy மனித உயிர் விலை அற்றது. வந்தது பாஸஞ்சர் டிரைன் -எக்ஸ்பிரஸ் ,சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் அல்ல. ஒரு ஒரு ஸ்டேஷனில் நிற்கும். இந்த மேளா வருடா வருடம் நடக்கிறது. எனவே அந்த இடத்தின் முதல் ஸ்டேஷனில் ஸ்டேஷன் மாஸ்டர், driverai எச்சரித்து நிறுத்தியிருக்கவேணும். train வரும் நேரத்தில் MELA நடக்குமென்றால் அதுவும் 3000 பேர் ஓடு பாதையில் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் RED விளக்குடன் ஒருவரை பாதையில் இருக்க செய்வது mela செய்தவர்களின் responsibility .
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
20-அக்-201818:03:26 IST Report Abuse
D.Ambujavalli Is the train a two wheeler or a car to apply sudden brake and stop in 10 feet distance? It is running in 40/50 km speed with thousands of passengers and even if brake is applied the train will run for,at least one km, by the time accident cannot be averted
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X