உயிர் காக்க சென்ற உயிர் பிரிந்தது : இப்படியும் நடக்குமா ? துயரம்; சென்னை வக்கீல் பலி

Updated : ஜூன் 17, 2010 | Added : ஜூன் 17, 2010 | கருத்துகள் (94) | |
Advertisement
சென்னை: சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நண்பரின் உயிரை காத்திட ரத்த தானம் செய்து விட்டு பெருமிதத்துடனும், மகிழ்ச்சியுடனும் திரும்பி கொண்டிருந்த தியாக உயிர் அதே போன்ற விபத்து சம்பவத்தில் சிக்கிய சென்னை வக்கீல் உயிரிழந்தார். நெஞ்சை பிழியும் இந்த துயர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:- விதி விளையாடிய விதம் : சென்னை பெரம்பூர், வெங்கடேஸ்வரா நகர், ஜி.கே.எம். காலனி
Chennai, Lawyer, dead, accident, சென்னை, வக்கீல், விபத்து, பலி

சென்னை: சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நண்பரின் உயிரை காத்திட ரத்த தானம் செய்து விட்டு பெருமிதத்துடனும், மகிழ்ச்சியுடனும் திரும்பி கொண்டிருந்த தியாக உயிர் அதே போன்ற விபத்து சம்பவத்தில் சிக்கிய சென்னை வக்கீல் உயிரிழந்தார். நெஞ்சை பிழியும் இந்த துயர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-


விதி விளையாடிய விதம் : சென்னை பெரம்பூர், வெங்கடேஸ்வரா நகர், ஜி.கே.எம். காலனி பகுதியைச் சேர்ந்தவர் காமேஸ்வர ராவ் (வயது 24). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார்.இவரது நண்பர் ஒருவர் விபத்தில் காயம் அடைந்து சிகிச்சைக்காக பெரம்பூரில் உள்ள ரெயில்வே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு ரத்தம் தேவைப்படுவதாக டாக்டர்கள் கூறினர் இந்த தகவல் கேள்விப்பட்ட காமேஸ்வர ராவ் உடனடியாக ரெயில்வே ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டு விரைந்து சென்றார்.


நண்பரின் ரத்தப்பிரிவும், தனது ரத்தமும் ஒரே ரத்தப்பிரிவு , இதனையடுத்து காமேஸ்வரராவிடம் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டு உயிருக்கு போராடிய நண்பருக்கு செலுத்தப்பட்டது. இதனால் நண்பர் உயிர் பிழைத்து நலம் பெற்றார். ரத்தம் கொடுத்து விட்டு நண்பரை காப்பாற்றிய மகிழ்ச்சியில் காமேஸ்வர ராவ் ஆஸ்பத்திரியில் இருந்து புறப்பட்டு சென்றார். ஆனால் இந்நேரத்தில் விதி வேறு விதமாக விளையாடியது.


பஸ் வடிவில் எமகாலன் : விபத்து என்ற எமகாலன் இவரை கொல்ல பஸ் வடிவில் பின்தொடர்ந்தான். மெரினா கடற்கரை சாலையில் மோட்டார்பைக்கில் சென்று கொண்டு இருந்தார். டி.ஜி.பி. அலுவலகம் அருகே சென்றபோது, டி.ஜி.பி. அலுவலகத்தின் உள்ளே இருந்து போலீஸ் கார் ஒன்று திடீரென்று மெயின் ரோட்டில் வேகமாக குறுக்கே வந்துவிட்டது.


இதனை சற்றும் எதிர்பாராத காமேஸ்வர ராவ் உடனே தனது மோட்டார் சைக்கிளை கொஞ்சம் மாற்று புறமாக திருப்பினார். இதனால் அவர் நிலைதடுமாறிய போது, பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பஸ் அவர் மீது வேகமாக மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட காமேஸ்வர ராவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிக அளவில் ரத்தம் வெளியேறியது. அவர் உயிருக்கு போராடிய நிலையில் சாலையில் துடித்தார். உடனடியாக அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து போலீசார் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். ஆம்புலன்சு வரும் முன் காமேஸ்வர ராவ் உயிர் பிரிந்து விட்டது.


தாமதமாக வந்த ஆம்புலன்ஸ் வேனில் வந்தவர்கள் காமேஸ்வர ராவின் உடலை ஏற்ற மறுத்துவிட்டனர். இறந்தவர்களின் உடலை ஆம்புலன்சில் ஏற்றமாட்டோம் என்று அவர்கள் கூறிவிட்டனர். இதனால் அந்த பகுதியில் நின்றவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க பரபரப்பு ஏற்பட்டதுடன், கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் பிணத்தை மீட்டு வேறு வேனில் ஏற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


என்றும் வாழும் காமேஸ்வரராவ் : பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் பெரம்பூர் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதகாட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அனைவது கண்ணிலும் கண்ணீரை வரவழைத்தது. ரத்தம் கொடுத்து நண்பரின் உயிரை காப்பாற்றிய காமேஸ்வர ராவுக்கு ஏற்பட்ட இந்த துயர முடிவை சொல்லி அவரது நண்பர்களும் கண்ணீர் சிந்தினார்கள். மக்கள், உறவினர்கள் மனதில் என்றும் வாழும் காமேஸ்வரராவ் உயிர் நினைவு .


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kamalakannan - cuddalore,இந்தியா
19-ஜூன்-201021:25:05 IST Report Abuse
 kamalakannan அன்பான உள்ளங்களை ஏன் ;;;;;;
Rate this:
Cancel
rajendran - sigapore,இந்தியா
18-ஜூன்-201020:30:22 IST Report Abuse
 rajendran ரொம்ப கஷ்டமா இருக்கு. என் இனிய நண்பர் ஆத்மா சாந்தி அடைய அந்த ஆண்டவனை ப்ராத்திக்கிறேன். இவர் உயிரை காப்பாற்ற சுற்றி நின்ற எந்த நண்பரும் வர வில்லை என்பது தான் ரொம்ப வேதனை யாக உள்ளது....
Rate this:
Cancel
pandian - chennai,இந்தியா
18-ஜூன்-201016:49:34 IST Report Abuse
 pandian உனது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X