அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'ஓவர்!'
காங்., - தி.மு.க., கூட்டணி உடைகிறது
ராகுலுடன் கமல் இரண்டாம் சுற்று பேச்சு

சென்னை: மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல், ரகசிய பயணமாக டில்லி சென்று, காங்., தலைவர்,ராகுலை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு காரணமாக, தமிழகத்தில், காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணிஉடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

 காங்., - தி.மு.க., கூட்டணி ,உடைகிறது ,'ஓவர்!'


ஒரு பக்கம், தி.மு.க.,வுடன் உறவை தொடரும் காங்கிரஸ், கமல் கட்சியுடன் கூட்டணி அமைக்கவும், மறைமுக முயற்சி மேற்கொண்டுள்ளது. தி.மு.க., மீது கடுப்பில் உள்ள கமலும், காங்கிரஸ் இழுப்புக்கு சாயத் துவங்கியுள்ளார்.

கமல் முடிவை வரவேற்று, தமிழக, காங்., தலைவர் திருநாவுக்கரசர் வெளிப்படையாக பேச துவங்கியுள்ள நிலையில், வழக்கம் போல, கமல் மழுப்பல் பதில் அளித்து உள்ளார்.அதே நேரத்தில்,'தி.மு.க.,வை விட்டு விலகி வந்தால் தான், காங்கிரசுடன் கூட்டணி' என, அவர் நிபந்தனை விதித்துள்ள தகவல் தெரிய

வந்து உள்ளது.ஏற்கனவே, காங்கிரசுடனான உறவில், அதிருப்தி அடைந்துள்ள, தி.மு.க.,வினர், இப்போது, கமல் நிபந்தனையால், கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்நிலையில், நேற்று முன் தினம், திடீரென்று டில்லி சென்ற கமல், அங்கு, ராகுலை ரகசியமாக சந்தித்துப் பேசினார். இச் சந்திப்பை முடித்து, நேற்றுகாலையில், அவர் சென்னை திரும்பியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:அடுத்த ஆண்டில் நடக்க உள்ள, லோக்சபா தேர்தலை சந்திப்பதற்கான முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. கட்சியில், என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டியலிட்டும், குறை களை ஆய்வு செய்தும் வருகிறோம்.

கூட்டணி குறித்து, பேச்சு நடந்து வருகிறது. மக்களுக்கு, சினிமா வாயிலாக, என்னை அடை யாளம் தெரிந்துள்ளது; அது, கட்சிக்கு பலமாக உள்ளது. காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது குறித்து, இப்போது எதுவும் சொல்ல முடியாது.

காங்கிரஸ் தலைவர் ராகுலை, நான் சந்தித்தது உண்மை தான். ஆனால், கூட்டணி பற்றி பேச வில்லை.நான், மற்றகோவில்களுக்கு போயிருக்கி றேன். ஆனால், சபரிமலை போனதில்லை.எனவே, அந்த விஷயத்தில், என்னிடம் கருத்து கேட்பது, சரியாக இருக்காது.


நான் நடுவில் இருந்து, பெண்களுக்கு நல்லது எது

Advertisement

என்பதை சொல்வேன்.பக்தர்கள் சார்பு, எனக்கு புரியாது. அதில், தலையிடாமல் இருப்பதே நல்லது. எனக்கு அரசியல் செய்ய தெரியாது என்ற, அமைச்சர் ஜெயகுமாரின் பேச்சுக்கு, பதில் சொல்ல முடியாது. என் நடிப்பை மட்டுமே விரும்பும், துரைமுருகனின் நடிப்பு, எனக்கு பிடிக்காது. பெண்களுக்கான உரிமை மறுக்கப்படுகிறது; அதை பறிக்க முடியாது. இது போன்ற விஷயங்களில், உணர்வுகளை புரிந்து கொண்டால் தான் கருத்து சொல்ல முடியும்.என் மீதான விமர்சனத்திற்கு காரணம், பதற்றம் தான்.இவ்வாறு, அவர் கூறினார்.

இந்நிலையில், சிவகங்கையில், நேற்று திருநாவுக்கரசர் அளித்த பேட்டியில், ''கமல் வருகையை, நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில்,தி.மு.க.,வை விட்டு விலக வேண்டும் என்று, அவர் நிபந்தனை விதிப்பது, அவரது தனிப்பட்ட விருப்பம். தி.மு.க., வுட னான கூட்டணி தொடர்கிறது,'' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (95)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
25-அக்-201803:36:04 IST Report Abuse

மலரின் மகள்கமலுடன் இணைந்து காங்கிரஸ் கட்சிக்கு கமலையும் சேர்த்தே ஏழு சீட்டுக்கள் ஒதுக்கலாம். அவர்கள் பிரித்து கொள்ளட்டும் அல்லது காங்கிரஸ் சின்னத்திலேயே கமலின் கட்சியினர் போட்டி இடத்தும். ஏழுக்கு மேலே வேண்டாம். இருக்கின்ற மொத்த நாற்பதில் பதினைந்திற்கு மேல் கூட்டணைக்காரர்களுக்கு பெரிய காட்சிகள் ஒதுக்கவே கூடாது. சிறிய காட்சிகள் பஞ்சாயத்து வார்டு தேர்கள்மூலம் வளரட்டும் முதலில். மக்கள் சேவையில் நேரடியாக யாரும் ஈடுபடுவதே இல்லை. பதவி என்ற ஒன்றே குறியாக இருப்பதால் சிறிய காட்சிகள் கூட்டணியில் இருந்தாலும் அவர்களுக்கு வாக்களிக்க தேவையில்லை. தனிப்பட்டமுறையில் வளரட்டும். தமிழகத்தில் யாருக்கு வாக்களித்தால் அது மத்தியில் ஆளும் வாய்ப்புள்ளோருக்கே சென்று சேரும் என்பது நிதர்சனம். யார் மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ய்ப்பிருக்கிறதோ அவர்கள் பக்கம் தான் அனைவருமே சென்று சேர்ந்து கொள்வார்கள் தமிழக கட்சியின் பாராளுமன்ற தேர்தல் நிலை அப்படி தான் இருக்கிறது.

Rate this:
Dhanraj Jayachandren - Madurai,இந்தியா
22-அக்-201817:19:40 IST Report Abuse

Dhanraj Jayachandrenதிமுக athimuka ozhiyanum ,அதுக்கு ஒரே ஆள் கமல்தான், மனுஷன் எப்பவும் குழப்புவர், இப்போ தெளிவா முடிவு எடுத்து இருக்கார்....

Rate this:
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
22-அக்-201812:31:05 IST Report Abuse

Nallavan Nallavanஏங்காணும் ..... இனிமேயாச்சும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் அம்பலத்துக்கு வருமா ?

Rate this:
மேலும் 92 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X