எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சாத்தியம்!
'தமிழகம் 17 ஆறுகள் இணைப்பு சாத்தியம்'
நீர்வழி சாலை ஆராய்ச்சியாளர் தகவல்

'தமிழகத்தில், 17 ஆறுகள் இணைப்பு சாத்தியம்' என, மத்திய அரசின், நதிகள் இணைப்பு உயர் மட்ட குழு உறுப்பினர் காமராஜ் தயாரித்துள்ள, தமிழ்நாடு நீர்வழி சாலை திட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 'தமிழகம், 17 ஆறுகள், இணைப்பு, சாத்தியம்'  நீர்வழி சாலை, ஆராய்ச்சியாளர், தகவல்


திட்டத்தை ஏற்று, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2011ல் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக வெளியிட்டார். இது குறித்து, காமராஜ் கூறியதாவது:

காவிரியில், கடந்த, 15 ஆண்டுகளில் நான்கு முறை, 300 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் வந்துள்ளது. அதாவது, 1991 - 92ல், 334.96 டி.எம்.சி., 1992 - 93ல், 351.69 டி.எம்.சி., 2000 - 01ல், 306.2 டி.எம்.சி., 2005 - 06ல், 399.22 டி.எம்.சி., 2015ல், 399 டி.எம்.சி., நீர் மேட்டூர் அணைக்கு வந்துள்ளது.மேட்டூர் அணை கொள்ளளவு, 93.5

டி.எம்.சி. மட்டுமே. மற்றவை வீணாக கடலில் கலக்கிறது. நீர்வழி சாலை திட்டம் செயல்படுத்தி னால், கிடைக்கும் உபரி நீரை தேவையான இடங்களுக்கு கொண்டு செல்ல முடியும். இதுமட்டுமின்றி பவானி, அமராவதி ஆற்று வெள்ள நீர், மழை நீர்வீணாக கடலில் கலக்கிறது. தவறான நீர் மேலாண்மையால், பற்றாக்குறை ஏற்படுகிறது.

தமிழகத்தில், இனி அணை கட்ட வாய்ப்பு இல்லை என்பது, பல பொறியாளர்களின் கருத்து. மூன்று ஆண்டுக்கு ஒரு முறை, தமிழகத்தில் ஏற்படும் வெள்ள சேதத்தால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

இதற்கு ஒரே தீர்வாக, தமிழக நீர்வழி சாலை திட்டம் அமையும். இதில் பாலாறு, செய்யாறு, பொன்னையாறு, அமராவதி, சண்முகநதி, பாம்பாறு, வரட்டாறு, நல்ல தங்காள் ஓடை, குடகனாறு, வைகை ஆறு, தாமிரபரணி உட்பட, 17 ஆறுகளை இணைக்க முடியும். இதற்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய்தேவை.

இதை செயல்படுத்தினால், மின்சார உற்பத்தி, முறையான நீர் பயன்பாடு, சீரான, விரைவான போக்குவரத்து, அதிக விளைச்சல் சாத்தியமாகும். நிலத்தடி நீர் வெகுவாக உயரும். 1.48 கோடி ஏக்கர் நிலம் பாசனம் பெறும். வெள்ள சேதம் கட்டுப்படும். 2,150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.

Advertisement

ஐந்தாண்டுகளில், திட்டம் நிறைவு பெறும். இதற்கு, 1.23 லட்சம் ஏக்கர் நிலம் தேவை. முதற்கட்டமாக, 350 கி.மீ., நீளமுள்ள, மேட்டூர் - வைகை ஆறு, மேட்டூர் - பாலாறு, 270 கி.மீ.,க்கு இணைக்கலாம்.

தமிழக பொருளாதாரம் மேம்படும். அரசுக்கு நிதி சுமை தராத திட்டமாக அமையும். அதே வேளையில் உபரி, வெள்ள நீரை சரியான முறையில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல முடியும். எனவே, பற்றாக்குறையை போக்க, வெள்ள நீரை முறையாக பயன்படுத்தி, சமநிலை வளர்ச்சி பெற தமிழக நீர்வழி சாலை திட்டமே ஒரே வழி.இவ்வாறு அவர் கூறினார்.

-நமது சிறப்பு நிருபர்-


Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilselvan - Chennai,இந்தியா
22-அக்-201801:05:23 IST Report Abuse

Tamilselvanநடைமுறை படுத்தலாம்.எல்லோரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வழக்கம் போல தமிழ்நாடு அரசியல் வியாதிகள் அரசியல் ஆக்கி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க துடிக்கும்.அவர்களை விரட்டி விட்டு திட்டத்தை படி படியாக செயல் படுத்தி தமிழ்நாட்டை வளம் கொண்ட மாநிலம் ஆக்கலாம்.

Rate this:
Karazhagan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-அக்-201820:19:13 IST Report Abuse

KarazhaganDr. Anbumani Ramados will be the right person to ute river interconnectivity and water management

Rate this:
vns - Delhi,இந்தியா
21-அக்-201817:28:24 IST Report Abuse

vns“ 1.23 லட்சம் ஏக்கர் நிலம் தேவை. ” இத்தனை நிலத்தை எந்த விவசாயி கொடுப்பார் .

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X