பொது செய்தி

இந்தியா

ரயில் விபத்தை முன்பே அறிந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்

Updated : அக் 21, 2018 | Added : அக் 21, 2018 | கருத்துகள் (27)
Share
Advertisement
அமிர்தரசரஸ் : அமிர்தரசரசில் தசரா கொண்டாட்டத்தின் போது நடந்த ரயில் விபத்தில் 61 பேர் பலியானதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அலட்சியமே காரணம் என தெரியவந்துள்ளது. ஆபத்து குறித்து முன்பே தெரிந்தும் பாதுகாப்பில் அலட்சியம் காட்டி விட்டு, தற்போது தலைமறைவாகி உள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை போலீசார் தேடி வருகின்றனர்.வீடியோதசரா கொண்டாட்டத்தின் போது மைக்கில் பேசிய
பஞ்சாப் ,  ரயில் விபத்து, தசரா விழா , காங்கிரஸ், தசரா கொண்டாட்டம்,  ரயில்வே, தசரா ரயில் விபத்து, பஞ்சாப் ரயில் விபத்து, அமிர்தசரஸ்,
Punjab, Amritsar, train accident, Dasara Festival, Congress, Dussehra celebration, Railways, Dussehra train accident, Punjab train accident,

அமிர்தரசரஸ் : அமிர்தரசரசில் தசரா கொண்டாட்டத்தின் போது நடந்த ரயில் விபத்தில் 61 பேர் பலியானதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அலட்சியமே காரணம் என தெரியவந்துள்ளது. ஆபத்து குறித்து முன்பே தெரிந்தும் பாதுகாப்பில் அலட்சியம் காட்டி விட்டு, தற்போது தலைமறைவாகி உள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை போலீசார் தேடி வருகின்றனர்.


வீடியோ

தசரா கொண்டாட்டத்தின் போது மைக்கில் பேசிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான உள்ளூர் காங்., பிரமுகர், சிறப்பு விருந்தினரை பார்த்து, ரயில் தண்டவாளங்கள் மீது நிற்பது பற்றி மக்கள் கவலைப்பட மாட்டார்கள். ரயில் தண்டவாளத்தின் மீது 5000 பேர் நிற்கிறார்கள். உங்களை பார்ப்பதற்காக நிற்கும் அவர்கள், 500 ரயில்கள் கடந்து சென்றாலும் அங்கிருந்து நகரமாட்டார்கள் என கூறி உள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.


கட்டுப்பாடு

நிகழ்ச்சி நடத்துவதற்கு நகராட்சி நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ரயில்வே துறையிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். மேலும் பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட் உத்தரவுகளின்படி ஒலிபெருக்கிகளை பயன்படுத்த மாட்டோம், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்த மாட்டோம், ஆயுதங்கள் எடுத்து வர யாரையும் அனுமதிக்க மாட்டோம் என கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டு போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும்.

ஆனால் இந்த அனுமதி ஏதும் பெறாமல், நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள் அலட்சியமாக செயல்பட்டதே இந்த கோர விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. இந்த ரயில் விபத்திற்கு ரயில்வே நிர்வாகம் தான் காரணம் என காங்., குற்றம்சாட்டி வரும் நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஆபத்தை உணர்ந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே விபத்திற்கு காரணம் என்பது உறுதியாகி உள்ளது.


கல்வீச்சு

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான கவுன்சிலர் விஜய் மாதவன் மற்றும் அவரது மகன் சவுராப் மதன் மிதுன் தலைமறைவாக உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், அவர்களின் வீடுகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

குற்றவாளி என சந்தேகிக்கும் நபர்கள் மீது ரயில்வே போலீசார், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உள்ளனர். ரயில் டிரைவர் பெயர், எப்ஐஆரில் இல்லாததால், அவர் கைது செய்யப்படவில்லை என அதிகாரிகள் கூறி உள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள், ஜோதா பதாக் பகுதியின் பாதையை மறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர். சம்பவத்தில் இன்னும் பலரை காணவில்லை. அவர்களை கண்டுபிடித்து தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.


சந்தேகம்

இதனிடையே, விபத்து நடப்பதற்கு 30 நிமிடத்திற்கு முன்னர் அமிர்தசரஸ் நகரில் இருந்து மேற்கு வங்கம் ஹவுரா நகருக்கு ரயில் ஒன்று சென்றுள்ளது. அந்த ரயில் மெதுவாக தான் சென்றுள்ளது. இதன் பின்னர் சம்பவம் நடந்த போது சென்ற ரயில், வேகமாக கிளம்பியுள்ளது. ஜலந்தரில் இருந்து அமிர்தசரசுக்கு சென்ற அந்த ரயில் வேகமாக சென்றதால், விபத்திற்கான காரணமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தை பார்த்தவர்கள் பதிவு செய்த வீடியோ காட்சிகளிலும், முதல் ரயில் சற்று மெதுவாகவும், அதிவேகமாக வந்த ரயில் மக்கள் கூட்டத்தின் மீது ஏறி செல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.பட்டாசு சத்தம் மற்றும் கொண்டாட்டங்களுக்கு இடையே, ரயில் வரும் சத்தத்தை மக்கள் கேட்காததால், இந்த விபத்து நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbu - Kolkata,இந்தியா
22-அக்-201814:11:39 IST Report Abuse
Anbu ஏற்பாடு செய்தது சித்துவின் குடும்பத்தார் என்கிறார்களே ?
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
22-அக்-201803:05:07 IST Report Abuse
siriyaar Congress will do anything to win elections, train accidents were almost nill in last 6 months, but just after election anmouned every day an accident.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-அக்-201820:44:15 IST Report Abuse
Pugazh V அயல்நாட்டு தலைவர்கள் வருத்தம் / இரங்கல் தெரிவித்துள்ளார்கள். நம் நாட்டு தலைவர்கள் யாரும் எதுவும் தெரிவிக்கவில்லை. தி. மலரின் வாசகர்கள்அரசியல் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். பிற மாநிலங்களில் இதுபற்றி கண்டுக்கவே இல்லை.
Rate this:
Anbu - Kolkata,இந்தியா
22-அக்-201814:04:30 IST Report Abuse
Anbuஇந்தியத் தலைவர்கள் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்ததாக சம்பவம் நடந்து சிலமணி நேரங்களிலேயே தொலைகாட்சி செய்தி வெளியிட்டது ...... நாம் பார்க்கவில்லை என்பதற்காக யாரும் இரங்கல் தெரிவிக்கவில்லை என்பது பாமரத்தனம் ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X