பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
புகார்!
காங்.,ஐ வெளுத்து வாங்கினார் பிரதமர் மோடி  
படேல் - நேதாஜியை புறக்கணித்ததாக ஆவேசம்

புதுடில்லி : ''சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட, சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் பங்களிப்புகள், ஒரு குடும்பத்தை உயர்வுபடுத்தி காட்டுவதற்காக, வேண்டுமென்றே அலட்சியம் செய்யப்பட்டன,'' என, காங்கிரஸ் மீது, பிரதமர் நரேந்திர மோடி சரமாரியாக குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

 புகார்,காங்கிரஸ்,பிரதமர், மோடி,வெளுத்து, வாங்கினார்


மறைந்த சுதந்திர போராட்ட தலைவர், சுபாஷ் சந்திர போஸ், 'ஆசாத் இந்தியா' எனப்படும், சுதந்திர இந்திய அரசு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரகடனப்படுத்திய, 75ம் ஆண்டு தினத்தை நினைவு படுத்தும் வகையில், டில்லி செங்கோட்டையில், நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.

இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின், அவர் பேசியதாவது:சர்தார் வல்லபாய் படேல், பி.ஆர். அம்பேத்கர், சுபாஷ் சந்திர போஸ் போன்ற மாபெரும் தலைவர்கள், சுதந்திர போரில் மகத் தான பங்காற்றி உள்ளனர்.

இந்த தலைவர்களின் வரலாற்று சிறப்பு வாய்ந்த பணிகளை, இந்தியர்கள் அனைவரும் அறிய வேண்டும். மாறாக, ஒரு குடும்பத்தை உயர்வு படுத்திக் காட்டும் நோக்கில், மாபெரும் சுதந்திர போராட்ட தலைவர்களின் பங்களிப்பு அலட்சியம் செய்யப்பட்டது.

சுதந்திரத்துக்கு பின், பிரிட்டிஷ் முறையில், இந்திய அரசின் கொள்கைகள் அமைந்தன. அனைத்தையும், பிரிட்டிஷ் கண்ணாடி வாயிலாக பார்க்கும் நடைமுறை தொடர்ந்தது. இதனால், நம் கல்வி உள்ளிட்ட பல விஷயங்கள் பாதித்தன.

இந்தியாவின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றில், பெருமை கண்டவர், சுபாஷ் சந்திரபோஸ். எல்லாவற்றையும், இந்தியா அல்லாத கண்ணாடி வாயிலாக பார்க்கக் கூடாது என, அவர் கற்பித்தார்.

சுதந்திரத்துக்கு பின், சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் படேல் போன்ற தலைவர்களின் வழி காட்டு தல்கள் தொடர்ந்திருந்தால், நாட்டின் நிலையில் பெரியளவில் மாற்றம் நிகழ்ந்திருக்கும். கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியா விஷயத்தில் அதிக கவனம் செலுத்தியவர், போஸ். அதேபோல், வடகிழக்கு இந்தியாவை, வளர்ச்சி இயந்திரமாக உருவாக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சுபாஷ் சந்திரபோஸ், 16 வயதில், பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியா பட்ட துன்பங்களை பார்த்து,துயருற்றவர். அவரது கொள்கை, தேசியம். அதன் படியே அவர் செயல்பட்டார்.உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான, நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் கருத்துக்களால் ஊக்கம் பெற்றனர். அவரது கொள்கைகளை பின் பற்றி, புதிய இந்தியாவை உருவாக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடுக்கப் பட்டால், இரட்டிப்பு பலத்துடன் திருப்பி அடிப்போம். நம் ராணுவத்துக்கு, அதிநவீன ஆயுதங்களை வழங்குவதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. ராணுவ வீரர்களுக்கு சிறப்பான வசதிகள் செய்து தந்து, அவர்களின் வாழ்க்கையை செம்மைப் படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

நேதாஜி பெயரில் விருது


டில்லி செங்கோட்டையில் நேற்று நடந்த, சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பேரிடர் மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு, மறைந்த தலைவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயரில் தேசிய விருது வழங்கப் படும். வரும், 2019, ஜன., 23ல் இந்த விருதுக்கான அறிவிப்பு வெளியாகும்.

பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில், என்.டி.ஆர்.எப்., எனப்படும், தேசிய பேரிடர் மீட்பு படை, எஸ்.டி. ஆர்.எப்., எனப்படும் மாநில பேரிடர் மீட்பு படை போலீசாரின் பணிகளைநாம் மறக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

தேசிய போலீஸ் நினைவகம் திறப்பு


டில்லியில் நேற்று, தேசிய போலீஸ் நினைவக கட்டடம் மற்றும் அருங்காட்சியகத்தை திறந்து வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது:

Advertisement

நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை இழந்த போலீசாரின் நினைவாக புதிய கட்டடம் திறக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். 70 ஆண்டுகளில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்ற கேள்வி என் மனதில் எழுகிறது.

இந்த நினைவகம் அமைப்பதற்கான திட்டம், வாஜ்பாய் தலைமையிலான அரசால் உருவாக் கப்பட்டது. அப்போதைய உள்துறை அமைச்சர், அத்வானி, இதற்கான அடிக்கல் நாட்டினார்.பின் சட்ட பிரச்னைகளால், நினைவகம் கட்டும் பணி நின்றது. முந்தைய அரசுகள், முழுமனதுடன், நேர்மையான எண்ணத்துடன், இந்த நினை வகத்தை எழுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

எனவே, இந்த புனித பணியை மேற்கொள்ள, கடவுள் என்னை தேர்ந்தெடுத்துள்ளார் என கருதுகிறேன். குறித்த காலத்தில் திட்டங்களை நிறைவேற்றும் வழக்கத்தை மத்திய அரசு கடைபிடித்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

கடந்த, 1959ல், ஜம்மு - காஷ்மீரின் லடாக்கில், சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில், 10 போலீசார் உயிரிழந்தனர். அந்த தினம், ஒவ்வொரு ஆண்டும், தேசிய போலீஸ் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

மோடிக்கு ஐ.என்.ஏ., தொப்பி


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய, ஐ.என்.ஏ., எனப்படும் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய வீரரான, லால்தி ராம், 96, செங்கோட்டையில் நேற்று நடந்த நிகழ்ச்சியின்போது, பிரதமர் மோடிக்கு, வீரர்களுக்கான தொப்பியை அணிவித்து கவுரவித்தார்.பின், மோடி பேசுகையில், ''லட்சக்கணக்கானோரின் தியாகங்களால், நமக்கு சுதந்திரம் கிடைத்தது. இதை பேணி பாதுகாப்பது நம் கடமை,'' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
25-அக்-201810:21:56 IST Report Abuse

Malick Rajaமோடிகட்சியை யாரும் பேசவே கூடாது ஏனெனில் அந்த அளவுக்கு 2019.ல் நிர்மூலமாகும் என்பதை உறுதி செய்யவே இது போன்று ஊளை இடுவது வெளிப்படுத்திவிட்டது.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-அக்-201820:11:24 IST Report Abuse

Pugazh V.அரசு விழாவில் அதுவும் சு.ச.போஸ் பாராட்டு விழாவில் இந்திய பிரதமர் காங்கிரஸ் பற்றியும் அரசியலும் பேசியது கான்ஸ்டிடியூஷனுக்கு எதிரானது. ப்ரஸிடென்ஸ் இல்லாதது. அதுசரி... இங்கே இதெல்லாம் யார் பார்க்கிறார்கள், சட்ட மீறல்கள் சர்வசாதாரணமாகிவிட்ட காலகட்டத்தில் அல்லவா நாடு இருக்கிறது. என்ன சொல்ல?

Rate this:
Roopa Malikasd - Trichy,இந்தியா
22-அக்-201820:04:01 IST Report Abuse

Roopa MalikasdMODI அவர்களே தயவு செய்து மற்றவர்களை குறை கூறுவதை நிறுத்தி கொண்டு உங்களின் கடமையை செய்யுங்கள் ...எங்கள் ஊரில் காமராஜ் என்றொரு மாமனிதர் இருந்தார்..உங்களுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று உள்ளது...உங்களையும் பெரும்பான்மையானவர்கள் சிறந்த தலைவர் என்று கூறவேண்டுமானால் தயவு செய்து அவரின் ஆளுமையை படித்து தெரிந்து கொள்ளுங்கள் ...

Rate this:
மேலும் 58 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X