பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வரும், 26ம் தேதி,வடகிழக்கு. பருவமழை.துவங்குகிறது!

தென்மேற்கு பருவமழை, நேற்றுடன் விடைபெற்ற நிலையில், 'வடகிழக்கு பருவமழை வரும், 26ம் தேதி துவங்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தாண்டு, இயல்பான அளவை விட, 12 சதவீதம் கூடுதலாக பெய்யும்; தமிழகத்தின் சராசரி மழை அளவான, 44 செ.மீ.,க்கு பதில், 49 செ.மீ., வரை பொழிய வாய்ப்புள்ளது என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், பருவமழையால் பாதிப்பு ஏற்படாத வகையில், முன்னெச்சரிக்கையாக இருக்க, பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
தென்மேற்கு பருவமழை, மே, 29ல் துவங்கி, நாடு முழுவதும் பரவலாக கொட்டியது. இந்த மழை, நேற்றுடன் முடிவுக்கு வந்தது.தமிழகத்திற்கு முக்கியமான, வடகிழக்கு பருவ மழை, வரும், 26ல் துவங்குவதற்கு, அதிக வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், தமிழகத்திற்கு முக்கிய நீராதாரமாக விளங்கும், இந்த பருவமழை, இயல்பான அளவான, 44 செ.மீ.,க்குபதிலாக, 12 சதவீதம் கூடுதலாக, 49 செ.மீ., வரை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், நீர்நிலைகளில்,

முன்பை விட, 17 சதவீதம் அதிக நீர் இருப்பு உள்ளது. பருவமழை பெய்யும் போது, நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதாக, மத்திய நீர்வள ஆணையத்தின் ஆய்வில் தெரியவந்துஉள்ளது.
பருவமழை துவங்க, இன்னும் நான்கு நாட்களே உள்ளன. அதனால், மழைநீர் வடிகால் பணிகள், ஆறுகள், ஏரிகளை துார் வாருவது, நீர்நிலைகளின் ஆழத்தை அதிகரிப்பது போன்ற பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அத்துடன், பருவமழை விபத்துகளை தடுக்க, முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளிகள் உட்பட, அரசு துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இயக்குனர் எச்சரிக்கை


பருவமழை எச்சரிக்கை குறித்து, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
* பள்ளி வளாகங்களில், மழைநீர் தேங்காமல், வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பழைய கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில்இருந்தால், உரிய முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
* வகுப்பறைகளில், மழை நீர் ஒழுகாமல் தடுக்க வேண்டும். கழிவுநீர் தொட்டிகள், கிணறுகளை பாதுகாப்பாக, மூடி வைக்க வேண்டும்
* உள்ளாட்சி மற்றும் சுகாதார துறைகள் வழியாக, நோய் தடுப்பு முகாம்கள்

நடத்த
வேண்டும். பிரார்த்தனை கூட்டத்தில், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
* கொசு உற்பத்தியாகாமலும், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவாமலும் தடுக்க, பள்ளி வளாகங்களை துாய்மையாக பராமரிக்க வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வீணாவதை தடுக்குமா அரசு?


வடகிழக்கு பருவமழையின் போது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலுார் மற்றும் நாகை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். இந்த ஆண்டு, சராசரியை விட, அதிக மழை பெய்யும் என, வானிலை மையம் கணித்துள்ளது.
அதனால், வெள்ளப் பெருக்கை தடுக்கவும், மழைநீரை, கோடைக்கால குடிநீர் மற்றும் வேளாண் உபயோகத்துக்கு சேகரித்து வைக்கவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா அல்லது மழைநீரை வழக்கம் போல, கடலுக்கு செல்ல விட்டு வீணாக்குமா என தெரியாமல், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
-நமது நிருபர்-


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-அக்-201820:35:33 IST Report Abuse

Pugazh Vயாராவது த.மை.னை கூட்டிட்டு போய் வேப்பிலை அடிச்சு கூட்டிட்டு வாங்கப்பா. திமுக காரனை விட அதிகமாக ஸ்டாலின் பற்றி படிப்பதும் அவர் நினைவாகவே அலைவதுமாக இருக்கார் பாவம். வானிலை அறிக்கை யில் கூட ஸ்டாலினா? அப்பு..உங்க ஸ்டாலின் பக்தி புல்லரிக்க வைக்குது அப்பு..போறும் போறும்.

Rate this:
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
22-அக்-201818:19:58 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்வானிலை ஆய்வு மைய அறிவிப்புகள் வரவர ஸ்டாலின் பேச்சு போல காமெடியாக உள்ளதே?

Rate this:
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
22-அக்-201815:56:13 IST Report Abuse

ديفيد رافائيلமழை வேண்டாமே ப்ளீஸ்..... ரொம்ப கொடுமையா இருக்கு

Rate this:
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
22-அக்-201820:19:38 IST Report Abuse

வந்தியதேவன்மழை வேண்டாமா சார்.... வரப்புயர நீர் உயரும்... நீர் உயர நெல் உயரும்.... நெல் உயர குடி உயரும்.... குடி உயர கோல் உயரும்..... கோல் உயர கோன் உயர்வான்.... என தமிழ்மூதாட்டி அவ்வையார் கூற்று... நீர் உயர்ந்தால்தான்... குடி (மக்கள்) உயர்வார்கள்.... மழை இல்லன்னா... தண்ணீரில்லாமல் மனித இனம் சாக வேண்டியதுதான்... எப்படியும்... இன்னுமொரு ஐம்பது, அறுபது ஆண்டுகளில் இயற்கை சீற்றம் கொண்டு... உலகத்தை அழிக்கப் போகிறது.... அதற்குக் காரணம் இயற்கை அல்ல.... மனிதனின் ஆணவம், அகந்தை, திமிரால்.... இயற்கையை சீண்டி... சீண்டி... ரணக்களம் ஆக்குவதால்... இயற்கை திருப்பி ஒரே அடி அடிக்கப்போகிறது.... அப்படி அடிச்சா... செத்தாண்டா மனுஷன்... ...

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X