பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள்
தகவல் தெரிவிக்க பிரதமருக்கு உத்தரவு

புதுடில்லி : பிரதமர் மோடி தலைமையிலான அரசில் உள்ள மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல் களை அளிக்கும்படி, பிரதமர் அலுவலகத்துக்கு, சி.ஐ.சி., எனப்படும், மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 பிரதமர் மோடி, சஞ்சீவ் சதுர்வேதி, தகவல் அறியும் உரிமை சட்டம், வனத் துறை ஊழல், ராதா கிருஷ்ண மாத்துார் , கறுப்புப் பணம்,  ஊழல் புகார் அமைச்சர்கள்,   டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஊழல், 
Prime Minister Modi, Sanjeev Chaturvedi, Right to Information Act, Forest Department Scam, Radha Krishna Mathur, Black Money, Corruption Complaint Ministers, Delhi AIIMS Hospital Scam,


ஐ.எப்.எஸ்., எனப்படும் இந்திய வன சேவை அதிகாரியான, சஞ்சீவ் சதுர்வேதி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், பிரதமர் அலுவலகத்தில் பல்வேறுகேள்விகளை கேட்டிருந்தார்.

கடந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் ஆட்சியின்போது, டில்லியில் உள்ள, 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் நடந்த ஊழல்களை வெளிப்படுத்தியவர் சதுர்வேதி.
இதையடுத்து, அப்போதைய அரசால், எய்ம்ஸ்

தலைமை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப் பட்டார். அதன்பின், 2014ல், உத்தரகண்ட் மாநிலத் துக்கு மாற்றப்பட்ட அவர், வனப் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையே, ஹரியானாவில் பணியாற்றிய போது, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, வனத் துறையில் நடந்த ஊழல்களை வெளிப்படுத்தினார். அவருக்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. இதையடுத்து, 'இந்த ஊழல் தொடர்பாக விசாரிக்க வேண்டும்' என, 2010ல், மத்திய அரசை, அவர் வலியுறுத்தினார்.


இதன் அடிப்படையில் நியமிக்கப்பட்ட விசாரணை குழு, ஊழல் நடந்துள்ளதை உறுதி செய்தது. இதை அடுத்து, சதுர்வேதி மீது எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை ரத்து செய்து, ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், பிரதமர் மோடி அரசில் உள்ள அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்தும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும்,தகவல் அறியும் உரிமை சட்டத்தில், சதுர்வேதி தகவல் கேட்டிருந்தார்.

மேலும், வெளி நாடுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கறுப்புப் பணம் குறித்தும், மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை உட்பட, பல்வேறு விஷயங்கள் குறித்தும் தகவல்

Advertisement

கேட்டிருந்தார்.ஆனால், இந்த தகவல்களை அளிக்க, பிரதமர் அலுவலகம் மறுத்தது. இதையடுத்து, தலைமை தகவல் ஆணையத் தில், அவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த, தலைமை தகவல் ஆணையர் ராதா கிருஷ்ண மாத்துார் அளித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

மனுதாரர் கோரியபடி, மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும். அதேபோல், மீட்கப்பட்ட கறுப்புப் பணம் குறித்த தகவல்களையும், மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை குறித்த தகவல்களையும் அளிக்க வேண்டும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கிரிஜா மாமி - வெஸ்ட் மாம்பலம் ,சென்னை,இந்தியா
23-அக்-201808:36:37 IST Report Abuse

கிரிஜா மாமிஏண்டா அம்பி உனக்கு நீயே ஆப்பு வச்சுக்கிறேள்?

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-அக்-201820:07:06 IST Report Abuse

Pugazh Vசம்பந்தமே இல்லாமல் த.மை. என்னவோ எழுதியிருக்கிறார்?? திமுக கம்பெனி யா? கருமம் அடிச்சு க்க ரெண்டு கை பத்தலை. இதெல்லாம் என்ன எழவு கருத்து என்று பிரசுரிக்கிறார்களோ? எந்த அரசு ஆணையம்/ இணையம்/ துறையுமே பிரதமருக்கு உத்தரவிட இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இடமில்லை. Please read & refer Indian Constitutional Rules, 1950 and revised 1975.

Rate this:
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
22-அக்-201817:58:20 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா 22-அக்-2018 10:18 பிரதமருக்கே உத்தரவா////// ஆம் பிரதமருக்கு தான் அதுவும் இந்தியாவின் ஊழலற்ற பிரதமருக்கு தான். உத்தரவை மதிக்காமலிருக்க திமுக கம்பெனி ஆட்சி நடக்கவில்லை

Rate this:
தலைவா - chennai,இந்தியா
23-அக்-201812:42:09 IST Report Abuse

தலைவா சபரிமலையில் உத்தரவை மதித்த லட்சணத்தை நாடே கண்டதே?? அது போலத்தானே??? ...

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X