பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு
புதிய விதிகள் வெளியீடு

சி.பி.எஸ்.இ., என்ற மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளுக்கு, புதிய விதிகள் வெளியிட பட்டுள்ளன. உள் கட்டமைப்பு, மாணவர் சேர்க்கை, இடத்தின் அளவு உள்ளிட்ட அனைத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு ,புதிய விதிகள், வெளியீடு


நாடு முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், சி.பி.எஸ்.இ., அங்கீகாரத்தில் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகளில், பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக, பள்ளிகள் தரப்பில் போலி ஆவணங்கள் கொடுத்து, அங்கீகாரம்

பெற்று விடுவதாக, புகார்கள் எழுந்தன.அதேபோல, ஆசிரியர் நியமனம், மாணவர் சேர்க்கை, கட்டண வசூல் ஆகியவற்றிலும், முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் குவிந்தன.இது குறித்து, மத்திய மனிதவள அமைச்சகம் ஆலோசனைநடத்தி, புதிய விதிகளை உருவாக்க உத்தரவிட்டது.

இதன்படி, சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் வழங்குவதில், ஒவ்வொரு மாநில அரசுக்கும் கூடுதல் அதிகாரம் அளித்து, விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதற்கான முறையான அறிவிப்பை, அக்., 18ல், மத்திய அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் வெளியிட்டார்.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட அங்கீகார இணைப்பை பெறுவதற்கான, புதிய விதிகள் சி.பி.எஸ்.இ.,யின்,http://cbse.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.இதில், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறை களின் தரம், கல்வி தரம், பின்பற்ற வேண்டிய புத்தகம், மாணவர்களை சேர்க்கும் முறை, கட்டண விதிகள், பள்ளிக்கு தேவையான நில அளவு,

Advertisement

சான்றிதழ் பெற வேண்டிய அமைப்புகள் உள்ளிட்ட அனைத்தி லும், மாற்றம் செய்யப் பட்டு உள்ளது.இந்த விதிப்படியே, இனி அனைத்து பள்ளிகளுக்கும் புதிய இணைப்பும், அங்கீகார நீட்டிப்பும் வழங்கப்படும்.

மேலும், அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், மாநில அரசின் விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
22-அக்-201810:30:42 IST Report Abuse

நக்கீரன்இன்றைக்கு பொறியியல் கல்லூரிகளை விட பள்ளிக்கூடம்தான் நல்ல வியாபாரம். அதுவும், தெருவுக்கு தெரு வீடுகளில் வைத்து நடத்தப்படும் பள்ளிக்கூடங்களில் கூட 50 ஆயிரம் கட்டணம். இதெல்லாம் அரசுக்கு தெரிந்துதான் நடக்கிறது. செலவே இல்லாமல் எளிதாக சம்பாதிக்கலாம். வாருங்கள்.

Rate this:
Manian - Chennai,இந்தியா
22-அக்-201820:17:50 IST Report Abuse

Manianகுடிகாரர்கள் அதிகமாகும் போது, சப்ளை குறைவாகவும், விலை அதிகமாகவும் இருக்கும் போது கள்ள சாராயம் அதிகம் உற்பத்தியாகும். அதுபோலவே, ஜனத்தொகை மிக விரைவாக பெருகும்போது புற்றீசல் பள்ளிகள் வருவது காலத்தின் கோலம். அடிப்படை பிரச்சினை, படித்தவர்கள் என்று பெயர் சொல்பவர்கள், அவசர அவசரமா முயல்கள் போல் குட்டி போட்டிவிடடு பின்னால் கூக்குரம் இடுவது வேடிக்கையானதே. அதற்காக புற்றீசல் பள்ளிகள் சரி என்பதல்ல, லஞ்சமே ஆறாக ஓடும் இடத்தில், அவற்றிக்கு பஞ்சம் இருக்காது என்பதே. ...

Rate this:
Indhiyan - Chennai,இந்தியா
22-அக்-201809:10:44 IST Report Abuse

Indhiyanஅய்யா..., என்னன்னம்மோ விதி பண்றீங்களே, சனிக்கிழமை விடுமுறை பிச்சை போடுங்கைய்யா..., எங்க குழந்தைங்க கொஞ்சம் நல்லா தூங்கி விளையாடணுமய்யா... கொஞ்சம் பாத்து குழந்தைகளுக்கு தர்மம் பண்ணுங்கய்யா...

Rate this:
Gopi - Chennai,இந்தியா
22-அக்-201819:35:20 IST Report Abuse

Gopiநீங்கள் கூறுவதை நான் ஆமோதிக்கிறேன் ...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-அக்-201808:37:42 IST Report Abuse

Srinivasan Kannaiyaஅரசியல்வாதி தலை இட்டால் இது எல்லாம் தவிடு பொடியாகிவிடும்

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X