அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்

Added : அக் 22, 2018 | கருத்துகள் (27)
Share
Advertisement
அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்

போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்இல்ல விழாவுக்காக, 1,224 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.கரூரில், சேலம் சாலையில் உள்ள, அட்லஸ் கலையரங்கில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மகள், அக்ஷய நிவேதாவின் பூப்புனித நன்னீராட்டு விழா, நேற்று நடந்தது. இன்று காலை, 9:30 மணிக்கு, விஜயபாஸ்கரின் தம்பி, சேகர் மகள், தாரணி - சிவா திருமண விழா, அதே கலையரங்கில் நடக்கிறது.இதற்காக, நான்கு எஸ்.பி.,க்கள், ஆறு ஏ.டி.எஸ்.பி.,க்கள், 15 டி.எஸ்.பி.,க்கள், 24 இன்ஸ்பெக்டர்கள், 76 எஸ்.ஐ.,க்கள், 429 போலீசார் உட்பட, 1,224 போலீசார், நேற்று காலை, 10:00 மணி முதல், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருச்சி, அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில் இருந்து போலீசார் வந்திருந்தனர்.விஜயபாஸ்கர் இல்ல விழாவில், நேற்று மதியம், 13 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. கலையரங்க வளாகத்தில், போலீஸ் கட்டுப்பாட்டு அறை, நேற்று காலை திறக்கப்பட்டது. அதில், எஸ்.பி., ராஜசேகரன், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, போலீசாருடன் ஆலோசனை நடத்தினார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-அக்-201800:01:21 IST Report Abuse
ஆப்பு தேவைதான்...வந்து பிரியாணி சாப்புட்டுட்டு மொய் எழுதாம போறவங்களைப் பிடிக்க தனிப் படையே தேவை. இவரே மத்திய அமைச்சரா இருந்தா ராணுவத்தையே களமிறக்கியிருப்பார்.
Rate this:
Cancel
rajan. - kerala,இந்தியா
22-அக்-201820:34:17 IST Report Abuse
rajan.  அடேய் வடிவேலா எங்கேயடா இத்தினி வேகமாய் போவுற. அண்ணே இன்னிக்கு நம்ம போக்குவரத்து துறை அமைச்சர் வீட்டுக்கு அவுக போக்குவரத்துக்கு துறைக்குன்னு புதுச்சா வாங்கியாந்து வுட்ட பஸ்ஸிலே கரூர் போவுறேன். வேணாம்டா புது பஸ்ஸினு அதுலே போயி ஏறிடாதடா. அத்தினி பஸ்ஸும் கட்டிங் வித்தையில் பழைய பஸ்ஸை விட மட்டமான தரம் கெட்ட வெறும் கலர் பெயிண்ட் அடிச்சு ஓட்டுற பஸ்ஸுடா. இத்தினி தூரம் அதிலே போனீன்னா இடுப்பு ஒடிஞ்சு அவுக மருத்துவமனையில அட்மிட் ஆவணும்டா. ஓ அப்படியா, அப்போ தானே இத்தனை தடா புடலா கோர்க்கலாமா விழா எடுக்க முடியும். அவுக வீடு காசுலே பண்ண என்ன நீங்க காசு வாங்காமலா ஒட்டு போட்டு செய்க்க வச்சிங்க. அப்போ இந்த கன்றாவிகளை எல்லாம் பார்த்து தானே ஆவணும். அது சரி ஏன்டா இவுக விட்டாய் எல்லாம் ரைட் பண்ணவே மாட்டாங்களா. அண்ணே அது சிதம்பர ரகசியம் போ.
Rate this:
Cancel
rajan. - kerala,இந்தியா
22-அக்-201820:20:24 IST Report Abuse
rajan.  மத்திய அரசின் பணமதிப்பிழப்பு இவிங்களை ஒன்னும் பாதிக்கல்லியே எப்படி? ஒருத்தன் விடாம பாமர மக்கள் பாதிக்க பட்டு விட்டார்கள் என கூவி தள்ளினானுங்க. ஆனா இவனுங்க மட்டும் இன்னும் பணக்காரனாகிட்டே தான் இருக்கானுங்க. அப்போ கட்டிங் வித்தை மொத்தமா இன்னும் அரங்கேறிக்கிட்டு தானே இருக்குதுன்னு. இன்னும் பணம் எங்கேயோ புரண்டுகிட்டே தான் இருக்குது என்பது இந்த பந்தா ஆடம்பரம் எல்லாத்தையும் பார்த்தா நல்லாவே தெரியுதே. அமைச்சன் என்றால் இந்த மாதிரி தான் கூத்தடிக்கணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X