பினாமி வழக்குகளை விசாரிக்க நீதிமன்றங்கள்| Dinamalar

பினாமி வழக்குகளை விசாரிக்க நீதிமன்றங்கள்

Added : அக் 22, 2018 | கருத்துகள் (11)
பினாமி வழக்குகள்,  நீதிமன்றம், பினாமி பரிவர்த்தனை, மத்திய அரசு , பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டம், 
Benami cases, court,Benami transaction, Central Government, Benami Transactions Prohibition Act 2016,

புதுடில்லி: பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க, நாடு முழுவதும், 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில், 2016ல், புதியதாக, பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பார்லிமென்ட் ஒப்புதல் அளித்து, 2016, நவ., 1 முதல், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும். முடிந்தவரை ஆறு மாதங்களுக்குள் வழக்கு விசாரிக்கப்பட வேண்டும்.

இதற்காக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஒப்புதலுடன், செஷன்ஸ் நீதிமன்றங்கள், சிறப்பு நீதிமன்றங்களாக செயல்பட உள்ளன. இதற்கான அறிவிப்பாணையை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X